இயங்கியலில் இருந்து ஆரம்பித்தல்
மார்க்ஸ், லெனினின் முறைகள், முடிவுகளில் இருந்து அல்லாமல் இயங்கியலில் இருந்து ஆரம்பிக்குமாறு தொடர்ந்து சொல்லி வருகிறேன்.
சூழமைவுக்கு ஏற்ற ஆய்வுகளை, புதிய வழிகளைத் திறக்க அதுவே உதவும். இயங்கியலை வரிப்படங்களின் உதவியுடன் விளக்க விருப்பம். ஆராவது செய்தால் எனக்கு வேலை மிச்சம். இயங்கியல் தத்துவம், விஞ்ஞான முறை (உண்மையில் இயங்கியல் தத்துவம் விஞ்ஞான முறையை விளக்கி விடுகிறது) இரண்டையும் கொண்டு ஆய்ந்தால் மார்க்ஸும், ஏங்கல்சும் எழுதியைவற்றயெல்லாம் மார்க்ஸையும், ஏங்கல்சையும் காட்டிலும் அதிகமாகவே புரிந்து கொள்ளலாம். அதெல்லாம் முடியாது என்று நினைப்பதே அடிமை மனோபாவந்தான். உதாரணத்துக்கு ஒன்று பார்ப்போம் (உதாரணங்கள் முறைமை உள்வாங்கத்தானே ஒழிய மனப்பாடம் பண்ணிக் கொள்ளவல்ல). இயங்கியல் பொருள்முதல்வாதத்திலிருந்து கீழ்வரும் முடிவுக்கு வரலாம். இதை மனப்பாட மார்க்சியர்கள் கூட ஏற்பார்கள் என்பதால் படிமுறைகள்த் தவிர்க்கிறேன். அல்லது வேறொரு பதிவிடல் இடலாம். இயற்கை (அண்டம்) <------> இயற்கையிலிருந்து தன்னைப் பிரித்துணர்கிற தனித்த நோக்கு (உ+ம் மனிதர்) இந்த ஊடாடலில் தனித்த நோக்கு (எனி இலகு கருதி மனிதர் என்றே குறிப்போம்) இயற்கையைத் தமது தேவைக்காக வளைக்கிற செயற்பாடே 'உழைப்பு' (உற்பத்திச் செயற்பாடு). இந்த உற்பத்திச் செயற்பாடே மனித 'அறிவின்' ஆதாரம். மனித<---> இயற்கை ஊடாட்டமே மனித<---மனித உறவுகளின் அடிப்படை. (உற்பத்தி, சமூக உறவுகள்) பொருளுற்பத்திச் செயன்முறையே சமூகத்தின் அனைத்து மேற்கட்டுமானத்தின் அடிப்படையாக இருக்கிறது. இரண்டும் ஒன்றன் மீது ஒன்று தாக்கம் செல்லுத்துகின்றன. அதனால் கால ஓட்டத்தில் (காலம் என்பதன் இயங்கியல் விளக்கமும் எழுதியாக வேண்டும்) ஒரு சுருளிவில் இயக்கமாக இவை தென்படும். எந்தச் சுருளிவில் இயக்கத்திலும் முதன்மைக் கூறை இனங்காணத் தெரிய வேண்டும். இந்த இடத்தில் அது பொருளுற்பத்தி. கோழியா, முட்டையாவும் ஒரு சுருளிவில் இயக்கந்தான். அதை ஆராய்ந்து முட்டையே முதன்மையானது எனக் கண்டு கொள்கிறோம். இவ்விளவு விசயமும் மனப்பாட மார்க்சியரும் அறிவர். இந்த அடிப்படைகளில் இருந்து ஆழமான எதிர்வுகூறல்களைச் செய்வதெப்படி எனப் பார்ப்போம். இவ்விதம் அடிப்படைகளில் இருந்து எதிர்வுகூறல்களை நாம் நீட்டிப் பார்க்கையில், எவ்விதம் இயற்கை மீது தொழிற்படும் மனிதர் அந்தச் செயற்பாடு ஊடாகவே இயற்கையை இன்னுமின்னும் புரிந்து கொள்ளுகிறார்களோ அவ்விதமே குறித்த அடிப்படைகளையும் நாம் இன்னுமின்னும் புரிந்து கொள்வோம். [மார்க்சிய மூலவர்கள் என்று சொல்லப்படுகிறவர்களை விடத் தெளிவான சிந்தனை உள்ளவர்களாகச் சமூகத்தில் பத்து வீதத்தினரையாவது உருவாக்குவதே எனக்கான பொதுவெளிச் செயற்பாடு. பல வருடங்கள் எடுக்கலாம். உயிருடன் இருக்கும் வரை அதற்காக முயற்சிகள் செய்வேன் (நான் ஒரு அடிப்படைவாதியோ, சிறப்புத் தேர்ச்சி ஆர்வலனோ அல்லன். ஆகையில் இதை மட்டுமே சேணங் கட்டிய குதிரை போலச் செய்து கொண்டிருக்க மாட்டேன்.] சமூக விஞ்ஞானத்தை விடவும் இயற்கை விஞ்ஞானம் பல அடிகள் முன்னாலிருப்பதை நாம் அவதானிக்கிறோம். இயற்கை விஞ்ஞானத்தை விடவும் தொழிநுட்பம் (மென்பொருள், செயற்கை நுண்ணறிவு) வெகுவேகமாக வளர்வதை நாம் அவதானிக்கிறோம். இந்த அவதானங்களைப் பின்வருமாறு புரிந்து கொள்ளலாம். இயற்கை <---> மனித உற்பத்தி உறவு ஊடாட்டம் சமூக (மனித-மனித) உறவுகளை விட முன்நோக்கிப் பாய்கிறது, அதனால் புதிய பண்புமாற்றங்கள் மனித வராலாற்றின் தவிர்க்க முடியாத தொடர்விளைவுகள் என்பது மார்க்சின் கோட்பாடு/அவதானம்/நிலைப்பாடு (மூன்றுந்தான்). சரி, மார்க்ஸ் சொல்லிவிட்டார் - என்பது போன்ற மதவாத நிலைப்பாடுகளை எடுக்கமால் அதை உள்ளார்ந்து ஆராய்வோம் (நான் எழுதியவற்றிலுள்ள பிழைகளை நானே தொடர்ந்து தேடி்த் திருத்திக் கொண்டிருக்கும் போது மற்றவர்களைத் தடுப்பேனா? ). ஏன் மனித உற்பத்தி உறவுகள், சமூக உறவுகளைக் காட்டிலும் முந்தி இயங்குகின்றன? முடிந்தளவுக்கு மிகச் சுருக்கமாக்கியிருக்கிறேன். உரையாடலாம். மனித <---> மனித உறவாடலுக்கும் மனித <---> இயற்கை உறவாடலுக்குமான அடிப்படை வித்தியாசங்களில் இருக்கிறது விடை. மனித-மனித எதிர் மனித-இயற்கை இலான வித்தியாசம் இயற்கைக் கூறுதான். மனிதர்களை இயற்கையிலிருந்தே பிரிக்கிற வரவிலக்கணம் 'நோக்கு'. இயற்கையின் இயக்கத்தில் 'நோக்கு' கிடையாது. அதனால் அதன் தொடர்ச்சியான பிழைப்புக்கான போராட்டமும் அதன் சிந்தனைப் படிமமான பிழைப்புவாதமும் அதற்கில்லை. மனிதர்களுக்கிருக்கிறது. இயற்கை <---> மனித ஊடாடலிலும் பிழைப்புவாதங் குறைவு. மனித<---> மனித ஊடாட்டத்தில் அது (இற்றைத் தேதி வரையில்) மிகையாக இருக்கிறது. பிழைப்புவாதம் குறைகிற பொழுது முன்னேற்றப் பாய்ச்சல் நிகழ்கிறது. இதையும் மனித 'அறிவு' விட்டு வகைக்கவில்லை. உள்ளார்ந்தமாக அறிந்து கொண்டு மனிதர்களை ஒழுங்குபடுத்துவதில் (சமூக இயக்கத்தில்) உபயோகப்படுத்துகிறது. |--மனித இருப்பு (சமூக இயக்கம்)--->>>> |---------------- இயற்கை --------------------------------------------------------------------->>> இயற்கையின் இருப்போடு ஒப்பிடுகையில் மனித இருப்பு மீச்சிறு நிகழ்ச்சி. அற்பம். மனித இனத்தின் நீட்டிப்புக்கு இயற்கையிலிருந்து புரிந்து கொள்வதற்கான உள்ளார்ந்த விசயங்கள் உண்டு. இந்தப் புரிதல்கள் நம்மாழ்வார், இயற்கை விவசாயம், 'இயற்கையிலிருந்து கற்றுக் கொள், இயற்கையோடு ஒன்றி வாழ்' போன்ற நிலப்பிரபுத்துவ மட்டுப்பட்ட, திருத்தம் குறைவான சிந்தனைகள் அல்ல. சிந்தனை பொருளின் அதியுயர் வடிவமாக (இது வரை அறிந்தவற்றில்) இருக்கிறது. இந்தச் சிந்தனை பொருளுடன் 'ஒன்றி' வாழ முடியாது. இந்த எண்ணம் கருத்துமுதல்வாதக் கூறுகளின் தோற்றுவாயாக முடியும். எப்படி இலங்கையில் பலருக்கு இனவாதம் என்றால் என்னவென்று தெரியாதோ அதோ போல பல கோட்பாட்டாளருக்கு கருத்துமுதல்வாதம் என்றால் என்னவென்று தெரியாது. பொருள்முதல்வாதத்துக்கு எதிர் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். இந்தியாவில் ஆர் இந்து என்று கேட்டால் ஆரெல்லாம் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர்..... இல்லையோ அவரெல்லாம் என்பது போல இருக்கிறது. மனப்பாட மார்க்சியர்களில் சிலர் வாழ்நிலை -> சிந்தனை பொருள்முதல்வாதம், சிந்தனை--> வாழ்நிலை கருத்துமுதல்வாதம் என்று அபத்தமாகச் சொல்லுவார்கள். இயங்கியல் பொருல்முதல்வாதத்தின் பிரயோகக் கூறு, என்னைப் பொறுத்த மட்டில் முதன்மையாது இயங்கியல். அதை மனப்பாட மார்க்சியர்கள் வெற்றிகரமாக மழுங்கடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு கருத்திலும் இருக்கிற 'கருத்துமுதல்வாதக்' கூறை இவர்களால் அடையாளங் காண முடியாது. கருத்துமுதல்வாதத்தை வரைவு படுத்துவதும் ஒவ்வொரு கருத்திலும் அதன் கூறை இனங்காணுவதும் தனியான உரையாடலாக இருக்கட்டும். முதலாளித்துவ இயக்கத்தில் பொருள் வெல்லப்படுவதும், சோசலிச இயக்கத்தில் பொருள் வெல்லப்படுதும் வேறுவேறான இயக்கங்கள். 'வெல்லுதல்' என்றுவருவதால் சொல்லுகிறேன், ஒரு பெண்ணை வன்புணர்வு செய்து விட்டு வருகிறவன் 'அவளச் ஜெயிச்சிட்டன்' என்று சொல்லுவதற்கும், அதே பெண்ணின் மனதை 'ஜெயிப்பதையும்' ஒப்பு நோக்குவது போலானது. வேறானவை (இது தொடுக்கொள்ள ஊறுகாய் மனநிலையில் வருகிற ஒரு இழிந்த உதாரணம். மன்னிக்குக). இயற்கையைப் போல நீடித்து இருக்க, அதனுடன் மல்லுக்கட்ட, தன்னுணர்வில்லாத இயற்கையின் இரகசிய ஆயுதங்களையும் மனிதம் எடுத்துக் கொள்கிறது. மனித இனம் பிழைக்க வேண்டுமாயின் தனிப்பட்ட பிழைப்புவாததைப் பின்னகர்த்த வேண்டும் என்பதை அது விரும்பியோ விரும்பாமலோ தெரிந்து கொள்ளுகிறது. தனித்த நோக்கு இயக்கம், இயற்கையின் இயக்கத்திலிருந்து ஆதாயந்தேட அதனிடமிருந்தே கற்றுக் கொள்ளுகிறது. ஆதாயந் தேடுகிற இயக்கத்திலிருந்தே ஆதாயந்தேடுகிற இயக்கத்தை முன்னேற்றுகிறது. வெறுமனே சுருள்வில் என்பதாக மனனம் செய்யாமல் இந்தச் சுருளிவில்லின் பண்புகளை ஆராய வேண்டும். இந்தச் சுருள்வில் இயக்கத்தில் வட்டப் பரும் குறைந்து வருகிறது. இது குறிப்பிட்ட கால இடைவெளியில் தெரியவருகிறது. அத்தோடு தொடர்ந்து குறைய வேண்டியதில்லை. பெரிய சுற்று-> கொஞ்சம் சின்னச் சுற்று --> மறுபடி வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ள விரும்பாதவர்களின் வரலாற்றுத் தவறுகளால் பென்னாம்பெரிய சுற்று வரலாம். என்னுடைய (இன்னுமும் பலருடைய நோக்கு) இந்தச் சுருள்வில் இயக்கத்தை இன்னுமின்னும் புரிந்து கொண்டு அதன் சுற்றுக்களின் விட்டத்தை முடிந்த வரையில் குறைப்பது. கொள்கையளவில் இந்தச் சுருளிவில் ஒரு கூம்பாக மாறும். அந்தக் கட்டத்தில் மனித அறிவு நேராகப் பாய ஆரம்பிக்கும். இந்தக் கட்டம் மனித அறிவு இயற்கையின் இயக்கத்தை மீறி, அதை முழுவதும் கட்டுப்படுத்துகிற அளவுக்கு வளர்ந்து விட்டது என்றாகும். இதெல்லாம் கட்டாயம் நடந்தாக வேண்டுமென்று எந்த விதிவசவாதமும் கிடையாது. பாட்டாளிகளின் சர்வாதிகாரக் கட்டம் ஒன்றும் விஞ்ஞான முடிவோ கட்டாயமோ கிடையாது. பொய்களின் மீது அரசியலைக் கட்டமைக்கக் கூடாது. பொதுப்போக்குகளைப் புரிந்து கொள்ளுகிற, அந்த அறிவிலிருந்து தமக்கானதைத் தாமே தெரிவு செய்ய முயல்கிற, அதற்காகப் போராடுகிற சுயபுத்திகளை உருவாக்கி அவர்களைத் தீர்மானிக்க விடுவதே சரியானது. இதைத்தான் உண்மையிலேயே தெளிவான கொம்யூனிஸ்ட்கள் செய்ய முடியும். தேவைப்பட்டால் பாட்டாளிகளைக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குமான முன்னணியினரே கொம்யூனிஸ்ட்டுகள். உண்மையில் சுயபுத்திகளை புறத்திலிருந்து உருவாக்கவும் முடியாது. தத்தமது பிழைப்புவாத நிலைப்பாடுகளை குறைத்து இயங்குவதால் அடுத்தவருக்கான (அவருக்கு உரிய) வெளி, வாய்ப்புக்களை உருவாக்கவும், அவரவர் தமது சுயபுத்திகளை கண்டடைய இடமளித்தலுமே அதுவாகும். அறிவினைக் கடத்துவதனூடு விழிப்புணர்வடைகிறவர்கள் போராடிப்பெறுவது (சிந்தனையில் போராட்டம் தொடங்கி விடும்) அதுவாகும். Active’வ்வாக இன்னொருவருடன் மோதலாம். ஆனால் எவரையும் Active’வ்வாக சுயபுத்தியாக்க முடியாது. அது Passive’வ்வாக மட்டுமே நடக்க முடியும். ஏனெனில் சுயபுத்தி (அறிவு) உருவாகிற இயக்கம் வெளியிலிருந்து உள்நோக்கியது (புறத்தகவல்கள், முறைகள், அறிவு ---> மனித இடைமுகம் --> உட்பரிசோதனை). சண்டை உள்ளிருந்து வெளியே பாய்வது. இலகுவானது. ஆனால் தூரநோக்கில் வினைத்திறன் அற்றது. சோசலிசக் கட்டமென்பது அதற்கானதுதான். கொம்மூனிசக் கட்டம் எப்படி இருக்கும் என்று ஆளுக்காள் வரைவு செய்ய வெளிக்கிடுவது இன்னார் இப்படித்தான் இருக்க வேண்டும் பிறிதொருவர் முடிவு செய்கிற அதே அநீதி. அதைச் சோசலிசக் கட்டத்து மாந்தர் (அவர்கள் நம்மைவிடத் தெளிவாயிருப்பர், இருந்தாக வேண்டும்) தீர்மானிக்கட்டும். ************************ அடிப்படைகளிலிருந்து இன்னுமும் நீட்டலாம். மனிதம் ----> இயற்கை என்பது நேரடியானதல்ல. மனிதம் ---> பொறி---> இயற்கை. இந்தப் பொறி மனிதத் தயாரிப்பு. தனெக்கென்ற இயக்கமுடையது. மனித மனமோ, உடலோ அல்லாதது. தன்னுணர்வு இல்லாதது. இந்த 'பொறி' இயந்திரமாகமோ, கோட்பாடாகவோ, விஞ்ஞானச் சமன்பாடாகவோ, அமைப்பாகவோ, கோர்ப்பரேட்டாகவோ, கலப்பையாகவோ இன்னுமும் எதுவாகவெல்லாமோ இருக்கலாம். 'வளர்ப்புப்' பிரணிகளும் மனிதத் தயாரிப்பே. தன்பாட்டுக்கு இருக்கிற இயற்கையை எம் பாட்டுக்கு வரச் செய்கிறோம். நமக்கேற்றவாறு தயார் செய்கிறோம். அதற்குச் செயற்கை நோக்கு அளிக்கிறோம். அதனுடைய செயற்கை நோக்கு மனிதர்களின் இயற்கை மீதான ஆதிக்கத்தை உறுதி செய்வது. பொறி மனித உழைப்புக்கான பிரதிநிதி. மனித உழைப்பிலிருந்து உருவானது. மனித உழைப்புக்கு மாற்றும் ஆனது. மனித வரலாறு எங்கிலுமிருக்கிற பிரச்சினை இந்தப் பொறிக்குள் மனித உழைப்பும் உள்ளடக்கப்பட்டிருப்பது. சில மனிதர்கள் ஏனையவர்களின் உழைப்பை தமக்காக வளைப்பது. எவ்விதம் இயற்கையை வளைத்தோமோ, அதிலிருந்தே அடுத்தவரை எமக்காக வளைப்பது பற்றியும் தெரிந்து கொண்டோம். மனிதம் ---> மனிதம் ---> இயற்கை. சுரண்டல் எண்ணக்கரு இந்த இயக்கத்தோடு பிறக்கிறது. சுரண்டுகிறவர் --> சுரண்டப் படுகிறவர் --> இயற்கை இந்த மிக நல்ல திட்டத்தில் ஒரு அடிப்படை ஓட்டை இருக்கிறது. இயற்கைக்கு நோக்கற்றிருப்பதால் அது எம்மீது பாயாது (இயற்கை அனர்த்தங்களுக்கு 'கடவுள் நோக்கு' கொடுத்தது அறியாமைப் பிழை). மனிதர்களுக்கு தனித்த நோக்கு உண்டு. எக்காலத்துக்கும் அவர்கள் இன்னொருவரின் கருவியாய் இருக்கச் சம்மதியார். இன்னொரு உள்ளார்ந்த விளக்கமும் இதற்கு இருக்கிறது. பொதுப்போக்கைப் பார்த்தால், 1. சுரண்டப்படுகிரவர்களின் வெளி சுரண்டுகிறவர்களை விடக் குறைவு. அதனால் பிழைப்புவாதம் அதிகரிக்கிற போக்கில் இருக்கும். ஆனால் இவர்களைப் பொறியாக்கிக் கொண்ட மொத்த இயக்கம் ஒட்டுமொத்த வெளியைத் தொடர்ந்து அதிகரிக்கும். சுரண்டப்படுகிறவர்களின் வெளியும் அதனுடன் மெல்ல அதிகரிக்கும். ஆகையால் இவ்வகைப் பிழைப்புவாதத்தின் அதிகரிப்பு வீதம் குறைந்துவரும். 2. சுரண்டப்படுகிறவர் இயற்கையோடு ஊடாடுகிறவர். அவரது பிழைப்புவாதம் குறைகிற திசையில் இருக்கும். அதிகமதிகம் ஊடாடி, உள்ளார்ந்த இயக்கத்திலிருந்தும் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கையில் குறைகிற வீதம் அதிகரிக்கும். இந்தச் சுருளி வில் இயக்கத்தின் ஆரம்ப முதன்மைக் கூறு 1. காலப் போக்கில் முதன்மைக் கூறு 2 ஆக மாறுகிறது (பண்பு மாற்றம்). [சின்னதும் பெரியதும் எண்ணற்ற பண்புமாற்றங்கள் சமூக வெளியில் சாத்தியம். "புரட்சி" என்று புரிந்து கொள்ளப் படுகிற பண்புமாற்றத்துக்கு அடிப்படையாகப் பல பண்புமாற்றங்கள் நடந்தாக வேண்டும். 'புரட்சி' நடாத்துவதில் ‘சிறப்புத் தேர்ச்சி’ அடைந்தவர்களுக்கு அவை புலப்படுவதில்லை. அது அவர்களுடைய குறைபாடல்ல. சிறப்புத் தேர்ச்சியின் குறைபாடு. ] தனிநபர் சிந்தனை வெளியிலும், சமூக வெளியிலும் இயக்கம் ஒன்றுதான். இதே விசயம் சுரண்படுகிற சமூக மட்டத்திலும் நடக்கும். சமூக பண்புமாற்றம் (புரட்சி என்றும் சொல்லுவார்கள்) தவிர்க்க முடியாமல் நடந்தேறும். இதை மழுங்கடிப்பதற்கும் சுரண்டுகிறவர்களிடம் இயக்கங்கள் உண்டு. செயலில் இருந்து கற்றலை முடக்க தொழிற்பிரிப்பு (இயற்கையிலிருந்து கற்றுக் கொள்ளலை மட்டுப்படுத்தும்). சிந்தனையை முடக்க கருத்துமுதல்வாதம் (மதம் போன்றன). உண்மையில் கற்றல் என்பது செயலையும் சிந்தனையையும் உள்ளடக்கியது. செயல் என்பது பல மனப்பாட மார்க்சியர்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல புரட்சி செய்கிற செயற்பாடு அல்ல. செயல் என்பது புறத்திலிருந்து தரவை எடுத்துக் கொள்வதும் கற்றுக் கொண்டவற்றைப் புறத்தே பிரயோகித்துப் பார்ப்பதுந்தான். செயல் ---> சிந்தனை --> செயல் என்பது உண்மையில் புறம் ---> அகம் ---> புறம் மனித சிந்தனை வலுவடைகையில் அகம் தனக்குள் பல சுருள்விற்களை உருவாக்கிக் கொள்கிறது. அது புறத்தையும் அகம் சார்ந்தே பார்க்கத் தலைப்படுகிறது. முழுக்க முழுக்க சிந்தனையால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும் என்று எண்ணத் தலைப்படுகிறது. பொருளை விடவும் சிந்தனை வீரியமானது என்பதால் இந்தப் போக்கு புரிந்து கொள்ளத்தக்கதே. புறம் ---> அகம் ----> புறத்திலிருந்து அகம் --> புறம் ---> அகம் என்கிற பண்புமாற்றத்தை கருத்துப் பாய்ச்சல் சாதிக்கிறது. இது உண்மையில் சிந்தனையின் உறுதியைக் குலைத்து குழப்ப நிலையையும் பிழைப்புவாத வெளியையும் அதிகரித்து வருகிறது. இதனால் சுரண்டலாளர்களின் தத்துவத் தளமும் ஒரு முரண்பட்ட இயக்கத்தினுள் மாட்டிக் கொள்ளுகிறது. வெறுமனே அகம் ---> புறம் ---> அகம் (அகத்தில் ஆரம்பித்து அங்கேயே முடியும் சுருளிவிற்கள்) அவர்களது குழப்பத்தை அதிகரித்து வரும். சரி, புறம் --> அகம் ---> புறம் என்று மாற்றிக் கொள்ளத் தலைப்பட்டால், அது சுரண்டப்படுகிறவர்களுக்குப் பலம் சேர்த்து விடும். சுரண்டப்படுகிறவர்களின் செயல்தளம், சிறப்புத் தேர்ச்சி கொண்டு மழுங்கடிக்கப்பட்டிருந்தாலும், சிறப்புத் தேர்ச்சியின் ஆழத்தில் கிடக்கிற பொதுமைப்படுத்தல் திறவு கோல்களைக் கொண்டும் பரஸ்பர உரையாடல், உணர்வு, அறிவுப் பரிமாற்றத்தைக் கொண்டும் சுரண்டப்படுகிறவர்களின் ஒற்றுமையும் புரிதலும் புறம் --> அகம் ---> புறம் என்பதாக வளர்கிறது. ஆமை - முயல் கதையாக இந்தச் சுருளிவில் பண்பு மாற்றத்தை எதிர்கொள்கிறது. மனிதம்---> பொறி ---> இயற்கை யில் பொறியாக மனித உழைப்பும் பயன்படுகையில் சுரண்டல் நடக்கிறது. சுரண்டலை எதிர்க்கிற இயக்கம் வளர்வதையும் தவிர்க்க முடியாதிருக்கிறது. மனிதம் --> பொறி ---> இயற்கை யில் இந்தப் பொறி மனித உழைப்பின் பிரதிநிதியாக வளர்கையில் அதற்கான செயற்கை நோக்கு ஊட்டப்படுகிறது. உதாரணம்: இலாப-"நோக்கு" நிறுவனம். நிறுவனத்துக்கு அதிலிருக்கிற மனிதர்களை விடப் பிரத்தியேக நோக்கு உருவாகிறது. இது மறுபடி பண்புமாற்றங்களைக் கொண்டு வருகிறது. உற்பத்தி --> மூலதனம்---> உற்பத்தி, தேவை --> நுகர்வு---> தேவை இவற்றயெல்லாம் மூலதனம் ---> உற்பத்தி ---> மூலதனம், நுகர்வு---> தேவை ---> நுகர்வு என்பதாக மாற்றியமைக்கிறது. இயற்கையில் இருந்து உருவான மனிதர்கள் இயற்கையைக் கட்டுப்படுத்துவதைப் போல, மனிதர்கள் உருவாக்கிய பொறிகள் அவர்களைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கின்றன. இதெல்லாம் மார்க்சிய ஆய்விலிருந்தே புள்ளிகளை இணைத்துப் பிடித்து விடலாம். ஆனால் இன்னொரு புதிய பரிமாணமும் இந்த உறவில் உருவாகி வளர்கிறது. பொறிக்கான 'செயற்கை நோக்கு' அபரிமிதமாக வளர்ச்சி அடைகிறது. இது மேற்கண்ட சுரண்டல் சுரண்டப் படுகிறவர்களின் இயக்கத்தில் ஒரு உள்ளார்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 'செயற்கை நோக்கு' மிக வேகமாக வளர ஆரம்பிக்கிறது. மனிதர்கள் இயற்கையுடன் ஊடாடும் இயக்கத்தைக் காட்டிலும் இந்தச் செயற்கை நோக்கின் ஊடாடம் அதி வேக வளர்ச்சி காணுகிறது. செயற்கை நோக்கு ----> இயற்கை இரண்டு கூறுகளிலும் பிழைப்புவாதம் இல்லை. இவை இரண்டுக்கும் 'சுயநோக்கு' கிடையாது. இந்த இயக்கம் மனிதர்கள் --> இயற்கை , மனிதர்கள் ---> மனிதர்கள் இயக்கங்களை மிக வேகமாக முந்திச் செல்லுகிறது. பல புதிய சாத்தியங்களை ஏற்படுத்துகிறது. அவற்றுள் ஒன்று புதிய தனித்த நோக்கு உருவாகுவது (நான் இயங்கியல் பொருள்முதல்வாதியாக இருக்கிற வரையில் இந்தச் சாத்தியத்தை ஏற்பவனாகவும் இருந்தாக வேண்டும்). இரண்டு வழிகளில் இது சாத்தியம். நான் இயங்கியலைக் கொண்டு இரண்டையும் மறுக்க முடியாது. மனிதர்களைப் போலவே குழப்பமான படை (layer)---> சற்றுத் தெளிவான பாடை --> இந்தப் போக்கில் உருவாகலாம். குவாண்டம் கணினிகளை அவ்விதம் தயாரிக்க முடியும் என்று நம்புகிறேன். அல்லது உறுதியான படை ---> சற்றுக் குழப்பமான படை திசையில் தர்க்கத்திலிருந்து தனித்த நோக்கை வலிந்து உருவாக்கிக் கொள்ள முடியும். இது நாம் கனவு காண்பது போல. ஓரளவுக்கு தர்க்கரீதியான எமது சிந்தனை விசித்திரங்களைக் கனவு காண்பது போல. அறிவுச் சுருளிவில் இயக்கத்தை இதற்கும் பொருத்தி, இதன் ஒருமைப் புள்ளிகளையும் கொள்கையளவில் சிந்திக்க முடியும். இப்போதைக்கு அதி கவனம் பெற வேண்டியது சுரண்டல் வெளியில் (மனித வெளி) இதன் தாக்கம். இடைச்சொருகல் 2 இல் உள்ள இயற்கையில் மனிதர்கள் கற்றுக் கொள்வதை இது மிக மட்டுப்படுத்துகிறது. மிகச் சிலர் பொறிகளைக் கையாளவும் தொடர்ந்து சிந்தனை அளவில் சிக்கலடையவும் ஏனையவர்கள் பின்தங்கவும் வழி ஏற்படுத்துகிறது. மனிதர்கள் ----> பொறி ---> இயற்கை இந்தப் பொறிக்குள் மனித உழைப்புத் தேவையற்றுப் போகும் வகை செய்யும் இயக்கமாக இது இருக்கிறது. மிகச் சிக்கலான "உழைக்கும்" மனிதர்கள் ஏனைய உழைக்கும் மனிதர்களை ஒடுக்கவும் வகை செய்கிறதாய் இருக்க முடியும். இயற்கை மீதான செயற்பாடுகளின் ஆழமும், அகலமும் தொடர்ந்து அதிகரிக்கையில் பாட்டாளிகளின் சிந்தனைத் திறமும் ஏற்ற இறக்கங்களோடு இருக்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது மேம்போக்கு வாக்கியம். சில பாட்டாளிகள் பல பாட்டாளிகளை ஆள, அல்லது கொன்றொழித்து விட்டு பொறிகளைக் கொண்டு இயற்கையை ஆளவும் முடியும். இயற்கை விஞ்ஞானத்தைச் சமூக விஞ்ஞானம் முந்த வேண்டுமாயின் மார்க்சிய சிந்தனை (அனைத்துவித சுரண்டலையும் இனங்காணுகிற முறை|சட்டகம் அது) பரவலடைய வேண்டும். இயற்கை விஞ்ஞானம் தொடர்ந்து புதிய பண்புமாற்றங்களை ஏற்படுத்துவது கடினம் என்பதால் இதற்கான ஆமை முயல் வாய்ப்பு இருந்தது. ஆனால் செயற்கை நோக்குகளின் இயக்க வேகம் இயற்கை விஞ்ஞானத்தினதையும் விடவும் அதிகம். விஞ்ஞானம் தன்னைக் கொண்டே தனது முடிவுகளைச் சரிபார்க்க உதவுதால் மனித வரலாற்றின் முதல் சுயவிமரிசன முறையாக இருக்கிறது. ஆனால் அது தன்னைத் தானே உந்துவதில்லை. செயற்கை நோக்கு அப்படியல்ல. அது தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்ளும் திறன் உடையது (சுயநோக்கு இன்னுமுங் கிடையாது, வந்தடைய வழியிருக்கிறது. ). இது வெறுமனே வேலையில்லாப் பிரச்சினையோ, பொருளாதாரப் பிரச்சினையோ இடையாது. இது ஒரு புதிய இயக்கம் . இதற்கான புதிய முன்னெடுப்புக்கள் அவசியம். ******************** சில அடிப்படைகளை முன்வைக்கலாம். எவ்விதம் அவரவர் மட்டங்களில் இருந்து தாரண்மைவாத சந்தைப் பொருளாதாரத்தில் பங்கெடுக்கத் தொடங்க முடியுமோ, எவ்விதம் எந்த வகையான எழுத்தறிவு மட்டத்திலிருந்தும் வாசிப்பு, இலக்கிய வாசிப்பு என்று பங்கெடுக்க முடியுமோ, அவ்விதமே எந்த வகையான அறிவு மட்டத்திலிருந்தும், நாளாந்த கடமைகளிலிருந்தும் விஞ்ஞான அரசியலைப் புரிந்து கொள்ளவும் பங்கெடுக்கவும் முடியும். புத்திசீவித்தனம் என்பது ஒரு போலி வேலை. இயற்கை<---->- மனித உறவின் விளைபொருட்களின் அறிவை (அது பிழைப்புவாதங் குறைந்தது) சமூக வெளிகளில் பிரயோகித்தல். உதாரணம் சிறுவயதில் கற்றுக் கொண்டு விஞ்ஞானம், தொழிநுட்பம் இவை எதுவாயினும் அதையும் சமூகத்தில், அரசியலில் பிரயோகிக்க முடியும். வெளிக்கு பொருத்தமானதா என்பதை அறிகிற இயக்கத்தை வைத்துக் கொண்டால் போதுமானது. அரசியல் என்பது சிறப்புத் தேர்ச்சித்துறை அல்ல. அது அனைவருக்குமானது. அனைத்துத் துறைகளில் இருந்தும், நீங்கள் எந்தத் துறையாக இருந்தாலும் அத் துறையில் பல கருத்தியல்கள் இருக்கும். அவை பொதுவாக மனித-இயற்கை, அல்லது வினைத்திறன் மிக்க மனித-மனித உறவுகள் தொடர்பானவை. அவற்றை மனித-- சமூக உறவுக்கும் பொருத்திப் பார்க்க, யோசிக்கப் பழக வேண்டும். விஞ்ஞான முறை அரசியல் உழைக்கும் மக்கள் எவருக்கும் அந்நியமானதல்ல. என்னுடைய துறையில் எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. செயற்கை நோக்கு (கணினிகள்) உருவாக்குகிற வெளியில் பல தத்துவங்களின் பிரயோகங்கள் வாய்ப்புப் பார்க்க படுகின்றன. அவற்றை அறிந்து கொள்ள வேண்டும். பொதுவெளி உறவுகள் புறவயப்பட்டிருக்க வேண்டும். புறவயத்தின் வரைவே கணினி இயக்கந்தான். கணினிக்குப் புரிந்தால் அது புறவயமாயிருக்கிறது. கணினி வெளியில் வாய்ப்புப் பார்க்கப் படுகிற பல தத்துவங்களை, முறைகளை உள்ளார்ந்தமாகப் புரிந்து கொண்டு சமூக, அரசியல் இயங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நாம் புறவயப்படுத்த நினைப்பது புறவெளியைத்தான். புறவெளியை ஒழுங்கமைத்து மட்டுந்தான் அனைவருக்குமான அகவெளியை அதிகரிக்க முடியும். உழைப்பு வெளியைச் சரிப்படுத்தித்தான் ஒட்டுமொத்த ஓய்வு வெளியை உச்சப்படுத்த முடியும். அதற்காகவே ஒழிய அகத்தையும் புறத்தையும் ஒரே விதமாக வார்த்து மனிதர்களை இயந்திரங்களாக்குவதற்காக அல்ல. கொம்யூனிஸ்ட்கள் வரண்டு போன இயந்திரங்கள் அல்லர். இயந்திரங்களை 'மனிதர்கள்' ஆக்க முயல்வது போல மனிதர்களை இயந்திரம் ஆக்குகிற இயக்கமும் நெடிய வரலாறு கொண்டது. இப்பொழுது தொழிநுட்பத்தைக் கொண்டு அது பல மட்டங்களில் நடந்தேறுகிறது. இயங்கியலில் இருந்து ஆரம்பிப்பது கட்டாயம். பின்குறிப்பு: சில நாட்களின் பின் இதைத் திருப்ப வாசிக்கிற பொழுது கருத்துப் பிழைகள் திருத்துவேன். தெளிவற்று எழுதியிருப்பவற்றைத் தெளிவாக்குவேன். எனக்கு இருப்பது இயங்கியல் சிந்தனை.
-Nila

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home