Wednesday, February 14, 2018

இயங்கியலாளர்களின் செயலெதிர்பார்ப்புகள் - சிறு குறிப்பு

பொதுவெளி அறிவைப் புறவயப்படுத்தும் இயக்கத்தினூடு என்னுடைய பொதுவெளி இருப்பின் தேவையையும், பிம்பத்தையும் நானே அழித்தல். என்னுடைய பிழைப்புவாதத்தை ஒழிக்கிற ஒரே வழி அதுதான்.

இயங்கியல் முறை புறவயப்படுத்தப்பட வேண்டும். 

இயங்கியலை வரிப்படங்கள், அசைபடங்கள் ஆக்குதல். அதிலிருந்து தனிப்பட்ட அதிகாரத்தை, குழப்பத்தை, விஞ்ஞானபூர்வமற்ற, கற்பனாவாத, பிழைப்புவாத வெளிகளைக் குறைத்தல்.

இயங்கியலின் எல்லை, வெளி, அடிப்படைக் கூறு -
 முறையே இயக்க எல்லை முரண்,
ஒன்றை வரைவு படுத்துவது அது தவிர்ந்த ஏனையவற்றையும் வரைவுபடுத்துகிறதாக முடிகிற எல்லாமும் தொடர்புபட்டிருக்கிற முரண், ஒவ்வொரு கூறினதும் சுயமுரண்பாடு இந்த மூன்றும் இயங்கியலின் அடிப்படைகள். இவையும் முரண்கள்தான்.

இந்த வரிப்படங்களை முடித்துக் கொண்டு அதிலிருந்து கருத்துமுதல்வாதம், பிழைப்புவாதத்தைத் துல்லியமாக வரைவு செய்ய முடியும். ஒவ்வொரு கருத்தையும் சரிபார்க்க, புதுப்பிக்க முடியும்.

மனித வரலாற்றில் எழுந்த எல்லாவித கருத்துக்களையும் வாய்ப்புப் பார்க்க முடிய வேண்டும்.

எல்லாவித முரண்மைப் போலிகளையும் தீர்த்து வைக்க முடிய வேண்டும். 

அல்லது இயங்கியல் தத்துவத்துக்குப் போதாமை இருப்பது தெரிய வரும். புதிய மேம்பட்ட அடிக்கோள்கள், தத்துவங்களுக்கு மாறுவோம். 

தத்துவங்கள் அனைத்தையும் விபரிக்க முற்படுகின்றன, மாற்ற உதவுகிற (மாற்றத்தை அறிந்து அதை எமக்கேற்ப வளைக்க முயல்கிற)  தத்துவங்களே தேவை என்பது மார்க்சியம்.

ஆனால் அதனுடைய சட்டகங்கள் இயக்கத்தை விபரிப்பதோடு நின்று விடுகிறதே ஒழிய மாற்றத்தின் இயக்கத்தைத் துணிய (வழிகாட்ட) ஆழமன கூறுகளைக் கொண்டதல்ல.

எல்லாவற்றையும் ஒருவரே செய்ய/சொல்ல வேண்டும், அவர் சொல்லுவதெல்லாம் சரியாக இருந்தாக வேண்டுமென எதிர்பார்ப்பார்ப்பது அவர் மீது இழைக்கப்படுகிற வன்முறை. எல்லோருடைய சிந்தனைகளிலும் குறைபாடுகள் உண்டு.

உதாரணத்துக்கு அடித்தளம் <---- ===> மேற்கட்டுமானம் இருப்பதை விபரிக்கிறதே ஒழிய அந்த அறிவைக் கொண்டு இயக்கத்தை மேலும் துல்லியமாக்க உதவுவதில்லை. அதாவது அடித்தளத்தின் மாற்றம், மேற்தளக் கூறுகளின் மாற்றத்தை ஒழுங்குபடுத்திப் பார்க்க, இன்ன சூழமைவில் எது விரைவில் மாறும், எந்த ஒழுங்கில் மாற்றிவர வேண்டும்/முடியும் என்பது பற்றிய அறிவு மேற்படி சட்டகத்துக்குக் கிடையாது.

அடித்தளமும், மேற்கட்டுமானமும் ஒன்றை ஒன்று சார்ந்து மட்டுமல்ல இரண்டுமே எது சார்பாக இயங்குகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளுகிற பொழுதுதான் மாற்றத்துக்கான முன்னெடுப்புக்களையும் விஞ்ஞானபூர்வமாக்குவது சாத்தியம்.

அதாவது நாம் அடித்தளத்தைத் அடிப்படையாக்காமல் (அது சார்பியக்கத்தை இனங்காட்டுமே தவிர புறவயப்படுத்தாது) சமூக அடித்தள, மேற்பரப்பு இயக்கத்தை இன்னொரு அடிப்படையிலிருந்து பார்க்கிற பொழுதுதான் ஒவ்வொன்றுக்குமான 'தூரமும்' அது மாறி வரும் வேறுபட்ட வேகங்களும் தெரிய வரும்.

உதாரணத்துக்கு ரிலேட்டிவிட்டி தியறி வெறுமனே சார்பியக்கங்களை குறிப்பதல்ல.  Minkowski space இல் இயக்கங்களை ஆராய்வதன் மூலம் சார்பியக்கங்கள்  மறுபடி புறவயப்படுகின்றன.

மனப்பாட மார்க்சியர்கள், சார்புக் கோட்பாட்டையும், குவாண்டத்தையும் அது ஏதோ 'மார்க்சியத்தின்' புறவயமாக்கும் பார்வைக்கு எதிரானது என்று தவறாகப் புரிந்து கொண்டு எதிர்த்து வருகிறார்கள். கஷ்டம்.

இயற்கை (அண்ட) இயக்கத்தை அடிப்படையாக்கிக் கொண்டு நாம் இதைச் செய்ய முடியும் (இன்னுமும் முழுமையான தியறியை வளர்த்தெடுக்கவில்லை).

பிழைப்புவாதமற்ற அமைப்புக்களுடன் (உ+ம் இயற்கை) இருக்கிற தொடர்பை (தூரம்) கொண்டு அவற்றின் மாற்ற வேகத்தைத் துணிய ஆரம்பிக்கலாம்.

இந்த ஆய்வை வளர்த்தெடுப்பதன் மூலம் சோசலிசக் கட்டத்தின் காலத்தையும் மட்டுக் கட்ட முடியும். (இயங்கியல் பொருள்முதல்வாதத்தின் படி முடிந்தாக வேண்டும்).

நான் அடிக்கடி சொல்லுவது போல விஞ்ஞான முறையைக் கொண்டு தன்னைப் பொய்ப்பிக்க இயங்கியல் 'அனுமதிக்கிற' பொழுது, அதற்கேற்றவாறு இயங்குகிற பொழுதுதான் அதுவும் விஞ்ஞானமாக இருக்கிறது.

ஆகையால் வெறுமனே கொள்கை முடிவுகளிலிருந்து அல்லாமல், நடைமுறைத் தரவுகளைக் கொண்டு அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சோசலிசப் புரட்சிக்குத் தேதி குறிக்க முடியாது.

இந்த அடிப்படைகளை மேலும் முன்னேற்றி செயற்கை நுண்ணுர்வுகளை உருவாக்க முடியும்/வேண்டும்.

செயற்கை நுண்ணர்வின் 'மெய்நிகர்' வெளிக்குள் தத்துவங்களை வாய்ப்புப் பார்க்கலாம்.

இன்னுமும் பல வேலைகள் செய்யலாம்.

பண்புமாற்றங்கள் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் (பண்பு மாற்றங்களின் பண்புகள்).

இந்த விளக்கம் பல தோழர்களுக்கு இல்லை.

எவ்விதம் புறவெளியின் பண்புகள் அகத்தில் பிரதிபலிக்கின்றனவோ, அதே வகையில் முதலாளிய,தாரண்மைவாதத்தின் குறைபாடுள்ள, மட்டான, பிழைப்புவாதப் பண்புகள், சோசலிசத்துக்கான 'விஞ்ஞான' முறைச் செயற்பாடுகளிலும் பிரதிபலிக்கின்றன.

பொருளுற்பத்தி உறவுகளுக்குள் இருக்கிற பிழைப்புவாதம், கருத்து உற்பத்தி உறவுகளுக்குள்ளும் வெளிப்படுகிறது.

இதை உடைப்பதற்கு நான் மேற்சொன்ன பொதுவெளியில் தன் தேவையை அழித்தொழிக்கும் திசையைப் பற்றிப் பிடித்தாக வேண்டும். முறைமைகளைப் புறவயப்படுத்துவதால் மட்டுமே இது சாத்தியம்.

அத்துடன் ஒவ்வொருவரும் தத்தமது சிந்தனைச் சட்டகத்தை வளர்த்தெடுக்க வேண்டுமே ( அது ஒரு சுயபுத்திச் சட்டகமாக எத்தனை வருடங்கள், தலைமுறைகள் எடுத்தாலும் பரவாயில்லை) ஒழிய அடுத்தவரின் சிந்தனைச் சட்டகத்தை இரவல் வாங்கக் கூடாது.

இது பழைய அடிமை உறவாடலே. பொருள் வெளியிலிருந்து இந்தப் பண்பு கருத்து வெளியில் தாராளமாகவே பிரதிபலிக்கிறது.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது மேம்போக்குக் கோசம். கருத்து வெளியிலான அடிமைத் தளைகளை உடைக்காவிட்டால் சில பாட்டாளிகள் பல பாட்டாளிகளை ஆளுவது மிக இயல்பான சாத்தியமே.

இந்த அறிவைக் கொண்டு பல புதிய கருத்துக்களை, முறைகளை உருவாக்கலாம். அவற்றைப் பொதுவுடமையாக்கலாம்.

கார்ல் பொப்பரின் பொய்ப்பிக்கப்படத்தக்க நிபந்தனையுடன் விஞ்ஞான முறைமை அதனளவிலான தத்துவத் தளையை (ஒடுக்குகிறவர்களின் தத்துவம்  இயற்கையை ஆராயும் கருவியைப் பாதித்து வந்தது - விஞ்ஞானம் அதைத் தாண்டி 'புரட்சி' செய்து வெளியில் வந்த இயற்கை ஆய் கருவி) மீறி விட்டது.

இப்பொழுது பொருளாதாரம், தனிப்பட்ட விஞ்ஞானிகளின் கருத்துமுதல்வாத, பிழைப்புவாத நிலைப்பாடுகளுமெ 'விஞ்ஞான முறையை' (இரு வேறு பட்ட வகைகளில்) கட்டுப்படுத்துகின்றன. அது விஞ்ஞான முறையின் குறைபாடல்ல. கருத்துமுதல்வாத, பிழைப்புவாத சிந்தனைகள் உருவாக்குகிற எந்தத் தியறியும் இது வரையில் பொய்ப்பிக்கப்பட முடியாமலும் இல்லை  (முதலில் அது அதற்கான வாய்ப்புப் பார்க்கத்தக்க நிபந்தனைகளைச் சொல்ல வேண்டும்).



இயங்கியல் புரிதலுள்ளவர்கள் தமது சிந்தனைத் திறத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். 'காப்புரிமை' கருத்துக்களுக்கு முன்னதாக பொதுவுடமைக் கருத்துக்களை உருவாக்கி மானுட விடுதலையை விரைவுபடுத்த வேணும். 


-Nila


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home