Saturday, March 3, 2018

மார்க்சியத்தை உடைப்பதற்கான அடிப்படையும் செயன்முறையும்


எமது புதிய இயங்கியல் கோட்பாடு எமது சொந்த நடைமுறை அவதானம், இயங்கியல் பொருள்முதல்வாதம் இந்த இரண்டையும் மட்டும் கொண்டே உருவாக்கப்பட்டதாகும்.

அதாவது,
1. நடைமுறையில் இருந்து மார்க்சிய இயங்கியல் பொருள்முதல்வாத அடிப்படையிலான கருத்து வெளி அடிப்படைவாதத்தோடு (நெடுங்காலம், பெரும்பான்மை மனிதர்கள்) இருப்பதை அவதானித்தோம். புறத்திலிருந்து தெரிந்தோம். இயங்கியலைக் கொண்டே இந்த அடிப்படைவாதத்தை வரைவு செய்தோம்.


2. இயங்கியலை மட்டும் தொடர்ந்து, இயங்கியலைக் கொண்டே இயங்கியலை முன்னகர்த்தி, வளர்த்தெடுத்து அது பொருளமுதல்வாததைத் தேடி 'தானாக' நகர்கிறதா என்பதை வாய்ப்புப் பார்த்தோம்.

3. அது பருப்பொருளைத் தேடி நகர்ந்தது. இவ்விடத்தில் பொருள்முதல்வாதம் என்கிற அவசர, முன்முடிவுக்கு வந்து விடாமல், இன்னுமும் நகர இடமளித்தோம்.

4. இயங்கியல் பருப்பொருளையும் தாண்டி இயங்கியது. மார்க்சிய முடிவுகள் அனைத்தும் குறைபாடடைந்தன. இரண்டாம் நிலைக்குப் போயின. சிந்தனைத்தளத்தில் அவை முழுவதும் தகரவிருப்பது தெரிந்ததால் அன்றே முழுவதுமாகத் தகர்ந்தன.

வேறு தத்துவங்கள், சரிபார்க்கிற முறைகளை மேற்படி முடிவை எட்டி விட்ட பிற்பாடுதான் பயன்படுத்துகிறோம்.

உதாரணத்துக்கு இயக்கத்தை விளக்கப் பருப்பொருளை, கருத்தைத் கருத்தைத் தேவையற்றுத் திணிப்பது Occam's razor க்கு எதிரானதாகும்.

இப்போது மறுதலையாகத்தான் பலவழிகளில் உடைக்க (அதனூடு மேலும் சரியாக) முயல்கிறோம்.

எமது புதிய இயங்கியலை ஆக்குவதில் பயன்பட்ட தத்துவக் கருவி இயங்கியல் ஒன்றே (அது நடைமுறை அவதானத்தைப் பூச்சிய விதியாக்கியது).
அதனால் எந்த உசாத்துணையும் போடுவதற்கில்லை.

எமது இயங்கியல் இயங்கியலிலிருந்து வந்தடைந்தாகும்.

இது நோக்கின்/தன்னுணர்வின் அதாவது குழப்ப இயக்கத்தில் இருந்து உருவான அதற்கு எதிரான இயக்கங்களின் அதியுயர் இயக்க எதிர்ப்புத் தொழிநுட்பமாகும்.

குழப்ப இயங்கங்களுக்கு எதிரான ஒழுங்கு இயக்கங்களின் பரிமாண வளர்ச்சியில் (அளவு மாற்றம் என்பது நோக்கு சார்ந்தது, அது தோற்றப்பாடு, பண்புமாற்றமே இயக்கத்தின் பண்பு, பரிணாமம் என்பதுவும் பண்புமாற்றமே),

முழு ஒழுங்கு (பருப்பொருள்), சுதந்திர ஒழுங்கு (அனைத்து உயிர்கள், எல்லாவித நோக்கு, சிந்தனை), இதிலிருந்து மறுபடி முழு ஒழுங்கை நோக்கி நகரத் தொடங்குகிற படியாக, இயக்கத்தின் பெரும் அவத்தை மாற்றமாக 
இந்த இயங்கியல் இருக்கிறது.

நிலா & கணா

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home