Friday, March 2, 2018

சோசலிச நிகழ்வுப் போக்கை ஆராய்வதில் இயங்கியல் எதிர் இயங்கியல் பொருள்முதல்வாதம்

இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் அமைந்த மார்க்சியம் மனித இயக்கவியல் வரலாற்றுக் கட்டத்தில் முதன் முறையாக, சிந்தனைத் தளத்தில் இன்றுடன் முழுமையாகத் தகர்ந்தது. (தலை கீழ் ஆனது).

அடுத்த கட்டங்களாக,

சிந்தனை வெளியில் இருக்கிற இயங்கியலை புறவய வெளியில் புறவயமாக்குவது. கணினி உதவும்.

கணினியால் (புறவயவெளியால்) புறவயமாக்கப்பட்ட இயங்கியலைக் கொண்டு சோசலிசக் கட்டத்தைப் பெரந்தரவு ஆய்வு செய்து மட்டுக் கட்டலாம்.

இவ்விதம் செய்வது இயக்கத்தின் இயக்கத்தில் நேர்படியேற்றம் செய்வதால் இதைச் செய்கிற பொழுதே சோசலிசக் கட்டம் தொடர்ந்து அண்மித்து வரும்.

அதி விரைவாக சோசலிசக் கட்டத்தை அடையும் வாய்ப்பு உருவாகி விட்டது.

ஆகக் கூடிய விரைவில் சோசலிசக் கட்டத்தை அடைகிற மூன்று படிநிலைகளில் ஒன்று இன்றுடன் நடந்தேறியாயிற்று.

சோசலிசத்திற்கான இயக்கத்தில் எமது
இயங்கியல் வழிமுறையையும், இயங்கியல்
முதல்வாத வழிமுறையையும் ஒப்பிட்டு
பின்னையதன் குறைபாட்டை நேரடியாகவே விளக்கியிருக்கிறோம்.

எமது இயங்கியல் வழிமுறை
----------------------------------------------
1. சிந்தனை வெளியில் அதி திருத்தமான இயங்கியல்

2. புறவயவெளியில் புறவயமாகிற இயங்கியல் (எங்களிடம் இருக்கிற புறவய தொழிநுட்பம் போதும், செய்யலாம், மிகுந்த உற்சாகம் அடைகிறேன்). இது சோசலிச இயக்கத்தை வரைவு செய்து (நிகழ்தகவுச் சாதியத்துடன்),
அதற்கெடுக்கும் காலத்தையும் நிகழ்தகவுச் சாத்தியமாய்த் துணியும்

3. புறவயவெளியில் புறவயமாகிற இயக்கத்தினூடு நேர்ப்படியேற்றம் அடைகிற சமூகவெளி இயங்கியல் புரிதலும் சோசலிசம் மனநிலையும் அடுக்கேற்றமடையும்.
4. 2 இல் நடைபெறுகிற இயக்கம் 3 இல் தொடர் உடைப்புக்களை நிகழ்த்துவதால் இவையிரண்டுமே புதிய சார்பியக்கமாக ஒன்றை ஒன்று முன் தள்ளி அதி விரைவான சோசலிசக் கட்டத்தைக் கொண்டுவரும்.
இந்த நான்கு இயக்கங்களையும், இயங்கியல் பொருள்முதல்வாத வாழிமுறையின், அதே தேவைக்கான நான்கு இயக்கங்களோடு நேரடியாக ஒப்பிட்டு அவற்றினுடைய குறைபாடுகளை விளக்கியிருக்கிறோம்.
இயங்கியல் பொருள் முதல்வாத வழிமுறை.
-----------------------------------------------------------------------
1. சிந்தனைத் தளத்தில் வரைவுபடுகிற இயங்கியல் பொருள்முதல்வாதம் (பொருள்முதல்வாதம் இயங்கியல் விரோத அடிப்படைவாதக் கூறு)
2. புறவயவெளியில் புறவயமாக்குகிற தொழிற்பாடு, சமூகப் பண்பு மாற்றங்களைப் பரும்படியாக எதிர்வு கூறுகிற விஞ்ஞான அளவுக்கு மட்டுமே வருகிறது

3. மேற்படி பரும்படி விஞ்ஞான (அரைகுறையான விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக இயங்கியல் பொருள்முதல்வாத இயக்கம் வளர்வதால்) இயக்கம் சமூகத்தின் இயக்கதைப் புரிந்து அதைத் தமக்கேற்ப வளைக்கிற ஆற்றலைக் கட்டுப்படுத்தி வந்தது. இயக்கம் முரணில் இருந்தே தோன்றுவதான தவறான தத்துவம் அழிவை அதிகம் ஏற்படுத்துகிற இயக்கமாக இருந்தது. இதைக் கொண்டு சோசலிசக் கட்ட அடிப்படைகளை வரைவு செய்யவோ, எப்போது வரும் என்பதை அனுமானிக்கவோ விஞ்ஞான பூர்வமாக முடியாதிருந்தது.

4. இயங்கியல் பொருள்முதல்வாதம் 'வரலற்றுப் பொருள்முதல்வாதத்தினூடு' வந்தடைந்த சார்பியக்கம் சமூக அடித்தளம் <----====> மேற்பரப்பு என்பதே. இது அண்ட இயக்கம் சார்பாக சமூக இயக்கத்தைப் புறவயபடுத்தும் திறனைக் கொண்டதல்ல.

இந்த நாலு கூறுகளையும் விட மேற்சொன்ன
எம்முடைய இயக்கக் கூறுகள் மிக மேம்பட்டவை.

இது மனித வரலாற்று இயங்கியலில் பெரும் பாய்ச்சலாகும். இயங்கியல் வரலாற்றில், இயங்கியலை மட்டறுத்த ஹெகலின் கருத்துமுதல்வாத கூறைத் திருத்தி பொருள்முதல் வாதமாக்கியத்தை விட இப்போது நாம் செய்திருப்பது
பெருந்திருத்தமாகும்.
இந்தச் செய்தியை இயங்கியல் வரலாற்றிலும் (மனித சிந்தனை/அறிவு வெளி) மனித வரலாற்று இயங்கியலிலும் (சமுக வெளி) முதன் முறையாகப் பதிவு செய்வதில் மிக மகிழ்கிறோம்.
நிலா & கணா
02/03/2018
11.36 PM (SGT)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home