கொம்மூனிஸ்ட் கட்சி அறிக்கையுடன் நீங்கள் முரண்படுகிறவற்றை முன்வையுங்கள்
மார்க்சியம், கொம்மூனிஸ்ட் கட்சி அறிக்கை, லெனினிசம், ஒக்டோபர் புரட்சி இவையெல்லாம் வரலாற்றின் மீச்சிறு நிகழ்ச்சிகள்.
இவற்றை வைத்துக் கொண்டு உங்களுடைய சோசலிச பிம்பத்தை அமைத்துக் கொண்டிருந்தால் அது கற்பனையானதே.
வரலாற்றின் மீச்சிறு நிகழ்சிகளிலிருந்து முடிவுகள் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்திய, தொடர்ந்து அடுக்கேற்றம் பெறுகிற வரலாற்றின் வரலாறு இயக்கத்தைக் கவனியுங்கள் என்று புதிய தளம் அமைத்த மார்க்சியத்தையே நீங்கள் அதனூடு முறியடித்தீர்கள்.
சிந்தனை முறையைப் பற்றிப் பேசுகிற தளத்துக்கு கடைசி வரை வராமல், முடிவற்ற தகவல்களைக் கொட்டி உங்களையும், உங்களை "நம்புகிறவர்களையும்" ஏமாற்றிக் கொண்டே இருக்கிறீர்கள்.
"நம்பிக்கை" கருத்து முதல்வாத இயக்கம்.
அறிவினூடு வந்தடைகிற எதிர்பார்ப்பே மாற்று.
கற்பனைவாத சோசலிசம் நம்பிக்கைகளில் கட்டமைந்தது. அறிவின் அதிகாரப் படிநிலைகளூடு அடிப்படைவாதமாக இயங்குவது.
கருத்து சொல்லுவார். விளங்குங்கள் என்றால் என்னை விட 'இவர்தான்' மிக அழகாக விளக்குவார் என்று சொன்னார்
ஒரு தோழர். அந்த இவரைக் கேட்டால், இன்னொருவரை... இப்படி மார்க்ஸ் வரைக்கும் போகிறது. மொத்தத்தில் மார்க்சும், லெனினும் (இந்த மாதிரி மாமேதைகள், பேராசான்கள்) எழுதியதை ஏற்கிற அடிப்படைவாதிகளின் இயக்கமாக கற்பனாவாத சோசலிசம் இருக்கிறது.
சொந்தக் கருத்தென்பது கற்பனாவாத சோசலிச இயக்கத்தின் படிநிலையில் எவரிடமும் இல்லை.
ஒவ்வொருவரும் தங்களது 'ஆசான்களை' அண்ணாந்து பார்த்துக் கொண்டு சுயமரியாதையும், சுயபுத்தியும் இல்லாத அடிமைக் கூறுகளைக் காவித் திரிகிறார்கள். அடிமைக் கூறுகளினூடு மானுட விடுதலையைக் கட்டமைக்க வாழ்த்தும் அன்பும் உங்களுக்கு.
இந்த கற்பனாவாத சோலிச இயக்கத்தின் மூலம் - 'பேராசான்களான' மார்க்சிய மூலவர்களின் முடிவுகள்.
இது மிக வெளிப்படையான மதவாதம்.
முறையாக இருந்தால் கொஞ்சம் பரவாயில்லை, முறையும் தொடர்ந்து மாறும்.
விளங்கியோ விளங்காமலோ (தமக்குச் சாதகமான) மாற்றங்களைப் பற்றிச் சிந்திப்பதால் இருக்கிறவைகளை விட முற்போக்கான மதமாக இருக்கிறது. உடைப்பது கொஞ்சம் கஷ்டந்தான்.
கற்பனைவாத சோசலிசத்தை முன்னெடுக்கிற மனப்பாட மார்க்சியர்கள் குறைந்த பட்சம் ஒரு மார்க்சிய அடிப்படையை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மார்க்சியத்தை மாற்றுவதே (தேவையற்றதாக்குவதே) மார்க்சிய செயல்.
இந்தத் தேவையற்றதாக்குகிற செயல் அளவுமாற்றங்களினூடு பல பண்புமாற்றங்களைத் தாண்டி நடப்பது. காலத்துடன் மார்க்சியத்தின் ஒவ்வொரு கூறும் தொடர்ந்து பொய்த்து வரும். மார்க்சியம் மட்டுமல்ல எல்லாமும் வளர்க்கிற திசையில் தேய்ந்து கொண்டும் இருக்கிறது.
வளர்த்தெடுப்பதென்பது தேவையற்றதாக்குகிற செயற்பாடே.
மார்க்சியத்தைக் கட்டிக் காப்பாற்றிக் கொண்டே 'மார்க்சிய செயலை' ஆற்ற முடியாது.
திரிபுவாதிகளை எதிர்ப்பதென்பது மார்க்சிய செயல் அல்ல.
திரிபுவாதிகளால் உங்களுடைய இயக்க வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத படி நீங்கள் இயக்கத்தை இயக்கித் தொடர்ந்து முன்னேற்றிக் கொண்டிருப்பதே மார்க்சிய செயல்.
அப்படி இயக்கத்தை இயக்கிக் கொள்ளுகிற அடுக்கேற்றம் பெறுவதே நீங்கள் திரிபுவாதி அல்ல என்பதற்கான ஒரே ஒரு ஆதாரம். இதற்கு வேறு கிளைகள் கிடையாது.
நான் மார்க்சின் சிந்தனைகளைத் தொடருகிறவனோ, 'மார்க்சியவாதியோ' அல்லன்.
என்னை வேலை மினக்கெட்டு மார்க்சுக்கு ஆதரவாக எழுத வைத்திருப்பது அந்த மனுசன் எழுதியதை எல்லாம் உங்களுடைய சிந்தனை மட்டங்களுக்கு ஏற்றவாறு திரித்து மார்க்சை முழுக் கோமாளி ஆக்கிக் கொண்டிருக்கிற இடைவிடாச் செயற்பாடே.
உங்களது சிந்தனை மட்டத்தை மார்க்சியத்தை வைத்து முன்னேற்றாது, மார்க்சியத்தை உங்களது சிந்தனை மட்டத்துக்குக் கொண்டு வருகிற அளவுக்கு பெரும் சிந்தனையாளர்கள் நீங்கள். நன்று.
சொந்த சிந்தனை மட்டத்தை மாற்ற முயலாது மனித வரலாற்றையே புரட்டிப் போட உழைக்கிறவர்கள் நீங்கள். நன்று.
அடுத்தது என்ன, சீரியஸாக உட்கார்ந்து மார்க்சியம், சோசலிசம், இடதுசாரியம் ஏன் பின்னடைந்தது என்று 'வாதித்து'...
வாதம் என்பது எந்த முடிவுக்கும் வராத இயக்கம், இயங்கியலில் விவாதம் என்பது கிடையாது, இரு தரப்புக்கும் திசை பிடிக்கும் முறை தெரியும். பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு திசையைத் துல்லியமாக்குவது அது. இயங்கியலில் இந்த பரஸ்பர உதவி உரையாடலே உண்டு. அதற்கு இரு தரப்பும் இயங்கியல் பயிலுகிறவர்களாக இருக்க வேண்டும்.
என்னை ஒருவர் ட்ரொஸ்கியிஸ்ட் என்று குற்றம் சுமத்தியிருந்தார்.
இன்றைய சூழலில் ஸ்டாலின் எதிர் ட்ரொட்ஸ்கி சண்டை ஒரு அஜித் எதிர் விஜய் சண்டை.
எந்த இரண்டு வாதங்களை நான் வாசித்தாலும் இரண்டிலிருந்தும் பொருத்தமானதை எடுத்து மூன்றாவதைக் கட்டமைத்து வாதத்தை முடித்துக் கொள்ளாதவரை நான் ஒரு இயங்கியலாளன் அல்ல.
'வாதம்' என்பது உடனடி முடிவுக்கு வருகிற இடைநிலைப்படி. முடிவுக்கு வரமுடியாவிட்டால் அது எங்களது (எனது) சிந்தனைக் குறைபாடு. அதை நான் திருத்திக் கொள்ள முயலுவேன்.
வருசக்கணக்காக 'வாதிட்டுக்' கொண்டிருப்பதென்பது... மிக நன்று.
எவரும் எல்லாவற்றையும் சரியாக எழுத முடியாது.
நான் எல்லா இடதுசாரிகளையும் சாடுவதாகவோ, அல்லது மார்க்ஸ் லெனினை சாடுவதாகவோ திரிக்க வேண்டாம்.
நான் சாடுவது இந்த அடிப்படைவாதப் பண்பைக் கொண்டவர்களை.
நீங்கள் அடிப்படைவாதியா இல்லையா என்பதை மிக எளிமையாக அறியலாம்.
உதாரணத்துக்கு உங்களுக்கு கொம்மூனிஸ்ட் மனிபெஸ்டோவுடன் எத்தனை சதவீதம் உடன்பாடிருக்கிறது?
குறைந்த பட்சம் ஒரு முரண்பாடு இருக்கும்.
100% என்பது இயங்கியல் விரோத, மார்க்சிய விரோத, விஞ்ஞான விரோதப் பதில்.
அதை விடக் குறைந்த வீதமாக மட்டுமே இருக்க முடியும்.
ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் கொமூனிஸ்ட் கட்சி அறிக்கையுடன் முரண்படுகிற விசயங்களையும், அதனுடன் ஒத்துப் போகிற விசயங்களையும் பொதுவில் முடிய வேண்டும்.
இல்லை, முழு உடன்பாடு என்று பொய்யாகச் சாதிக்கிற பிழைப்புவாதிகளுக்கு இதைச் சொல்லிக் கொள்ளுகிறேன்.
100% திருத்தம் என்பது இயங்கியல் அறிவு தொடர்ந்து நோக்கி அசைகிற எல்லை.
நீங்கள்தான் முடிவுநிலை இயங்கியலாளர் என்று கருதினால் எல்லாவித தத்துவ 'வாதங்களுக்கும்' மிகச் சுருக்கமாகத் தீர்வளிக்க உங்களுக்கு முடியுமாயிருக்கும்.
இது மனித வரலாற்றில் இன்னுமும் நடந்தேறாத நிகழ்வு.
அதுவும் மீச்சிறு நிகழ்ச்சிதான், ஒப்பீட்டளவில் கொஞ்சம் பெரியது, அவ்வளவுதான், அதனால் அக்டோபர் புரட்சியை கேள்விப்படுகிறதை விட இதைக் கேள்விப்படுகிற சாத்தியம் அதிகம் என்பதால் ஓரளவுக்கு உறுதியுடன் சொல்லுகிறென்.
100% உடன்பாடு என்று அடித்து விடாமல் கொம்மூனிஸ்ட் கட்சி அறிக்கையுடன் நீங்கள் முரண்படுகிறவற்றை முன்வையுங்கள்.
வாதம் என்பது எந்த முடிவுக்கும் வராத இயக்கம் - அல்ல
இரண்டில் ஒன்று என்கிற வாதம் என்பது போலி முடிவுகளுக்கு மட்டும் வர முடிந்த இயக்கம்.
ஒன்றும் இரண்டும் சேர்ந்து மூன்றாவது என்பதே இயங்கியல்.
இந்த மூன்றாவது தனக்கு எதிரான நாலாவதையும் உருவாக்கிக் கொண்டுதான் உருவாகும்.
அ=அ அல்ல என்கிற இயங்கியலை எல்லாம் இரண்டு என்று அபத்தமாகப் புரிந்து கொள்ளக் கூடாது. எல்லாமும் ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் ஒருங்கே இருப்பவை என்பதையும், சாத்தியப்பாடுகளைத் தோற்றுவிப்பவை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இயக்கத்தின் இயக்கம் சாத்தியப்பாட்டு அடிப்படைகளில் நிகழ்வதைக் கொண்டே நியதிவாதத்தை நாம் மறுக்கிறோம்.
நிலைமறுப்பின் நிலைமறுப்பாக இயங்குகிற முரணோட்டத்தை நிலைப்பின் நிலைப்புக்குள்கொண்டு வருகிற நிலைப்பின் நிலைப்பான (உறுதிப்படுத்துவதை உறுதிப்படுத்துகிற) இயக்கமே
இயங்கியல் சிந்தனை. மார்க்சிய சிந்தனையும் அதுதான்.
என்னைப் புறக்கணிக்கலாம். அது பிரச்சினையில்லை.
'எல்லாம் வல்ல' மார்க்சின் பெயரால் மார்க்சைப் பேய்க்காட்டாதீர்கள்.
பிழை திருத்தம்
வாதம் என்பது எந்த முடிவுக்கும் வராத இயக்கம் - அல்ல
இரண்டில் ஒன்று என்கிற வாதம் என்பது போலி முடிவுகளுக்கு மட்டும் வர முடிந்த இயக்கம்.
ஒன்றும் இரண்டும் சேர்ந்து மூன்றாவது என்பதே இயங்கியல்.
இந்த மூன்றாவது தனக்கு எதிரான நாலாவதையும் உருவாக்கிக் கொண்டுதான் உருவாகும்.
அ=அ அல்ல என்கிற இயங்கியலை எல்லாம் இரண்டு என்று அபத்தமாகப் புரிந்து கொள்ளக் கூடாது. எல்லாமும் ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் ஒருங்கே இருப்பவை என்பதையும், சாத்தியப்பாடுகளைத் தோற்றுவிப்பவை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இயக்கத்தின் இயக்கம் சாத்தியப்பாட்டு அடிப்படைகளில் நிகழ்வதைக் கொண்டே நியதிவாதத்தை நாம் மறுக்கிறோம்.
நிலைமறுப்பின் நிலைமறுப்பாக இயங்குகிற முரணோட்டத்தை நிலைப்பின் நிலைப்புக்குள்கொண்டு வருகிற நிலைப்பின் நிலைப்பான (உறுதிப்படுத்துவதை உறுதிப்படுத்துகிற) இயக்கமே
இயங்கியல் சிந்தனை. மார்க்சிய சிந்தனையும் அதுதான்.
என்னைப் புறக்கணிக்கலாம். அது பிரச்சினையில்லை.
'எல்லாம் வல்ல' மார்க்சின் பெயரால் மார்க்சைப் பேய்க்காட்டாதீர்கள்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home