Thursday, March 1, 2018

அனுபவவாதம், வயதுவாதம், சிறப்புத்தேர்ச்சிவாதம் இவற்றை முறியடித்தல்


இந்தப் பதிவுக்கான எதிர்வினை

//இந்தப் பதிவுக் கருத்துகளில் பெரும்பாலும் சிறப்பானவையே. இதில் வருந்த வேண்டியது என்னவென்றால், இதில் பல கருத்துக்கள் தங்களுக்கும் சரியாகப் பொருந்துகிறது. இந்தக் கருத்துக்களில் பெரும் பாலானவற்றை நான் மார்க்சீயத்தை வேதமாகவும், எந்திரவியலாகவும் புரிந்துக் கொண்டுள்ள பழைய மார்க்சீயர்களுக்கு எதிரான வாதமாக வைத்து வருகிறேன். யாரிடமிருந்தும் இதுவரை பதில் இல்லை.

தாங்களும் மார்க்சீயத்தின் அடிப்படைகளையே சரியாகப் புரியாமல், இத்தகைய விமர்சனங்களை வைப்பது உண்மையிலேயே உங்களைப் பற்றிய அதிக தன்னம்பிக்கை தான். அதற்கு வாழ்த்துக்கள். அதே சமயம், தாங்கள் தங்கள் தவறுகளை தராக்கவியல் படி சுட்டிக் காட்டினால் அதனை புரிந்துகொள்ள இயலாமல் இருக்கும் வரை, தங்கள் கருத்துக்களில் பல தங்களுக்கும் பொருந்தும்.

நான் ஒரு விசயத்தை என்னை விட இன்னொருவர் இன்னும் சிறப்பாக விளக்குவார் என்றால், அவ்விசயம் பற்றி எனக்கு தெரியாது என்று அர்த்தமல்ல. அவ்விசயம் பற்றி, அவர் தொடர்ந்து விளக்கிக் கொண்டிருக்கிறார், அதில் அதிக அனுபவம் பெற்றிருக்கிறார் என்றுப் பொருள். என்னைப் பொறுத்தவரை அவ்விசயம் சாதாரணமானது, எனவே அவ்விசயத்தை விளக்க விரும்பாத விசயம் என்று பொருள். அவ்விசயத்தில், அவர் கருத்தை சார்ந்திருக்கிறேன் என்பதல்ல.//


Chengo M



//நான் ஒரு விசயத்தை என்னை விட இன்னொருவர் இன்னும் சிறப்பாக விளக்குவார் என்றால், அவ்விசயம் பற்றி எனக்கு தெரியாது என்று அர்த்தமல்ல//



தெரியும்-தெரியாது, முழுமை-ஒன்றுமில்லை, இல்லை, சரி-பிழை, விளங்கிவிட்டது-விளங்கவில்லை என்று பழைய தர்க்கத்தைப் பேசிக் கொண்டிருந்தால் எப்படி தோழர்?


உங்களுடைய இயக்கத்தின் திசையை இவ்விதம் அறிய முடியாதே.

//என்னைப் பொறுத்தவரை அவ்விசயம் சாதாரணமானது, எனவே அவ்விசயத்தை விளக்க விரும்பாத விசயம் என்று பொருள்.//

சாதாரணமான விசயத்தைச் சொன்னால் எனக்கு மதிப்புக்கேடு. அதைச் சொல்ல உறவுபாலாவைக் கோர்த்தேன் என்பது, அடிமைக் கூறு அதன் எதிர்நிலையாக உருவாக்குகிற போலி அதிகாரமாகவே எனக்கு விளங்குகிறது. 

//அவ்விசயம் பற்றி, அவர் தொடர்ந்து விளக்கிக் கொண்டிருக்கிறார், அதில் அதிக அனுபவம் பெற்றிருக்கிறார் என்றுப் பொருள். //

அதிக அனுபவம் என்று நீங்கள் சொல்லுவது சிறப்புத் தேர்ச்சிவாதமும், வயதுவாதமுமே. 

நானும் எத்தனைதரம்தான் என் பதிவுகளில் பருமனல்ல, திசையே முக்கியம் என்று எழுதுவது. பல ஆயிரந் தடவைகள் எழுதிவிட்டேன். 

எதையும் விளங்குகிற நிலையில் நீங்கள் இல்லை. நீங்கள் விளங்குகிற முனைப்பில் உரையாடுவதில்லை. இது உங்களது பொழுதுபோக்கு. 

இன்னுமும் 'அனுபவம்', 'சிறப்புத் தேர்ச்சி' போன்ற பருமன்களை முன்வைக்கிறீர்களே ஒழிய திசையை முன்வைக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அந்தத் திசையைப் புரிந்து கொண்டால் அனுபவமும், சிறப்புத் தேர்ச்சியும் உங்களை எவ்வகையிலும் முந்த முடியாது போகும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறீர்கள். 

நான் மார்க்சை விட அதிகம் சிந்திக்க எனக்கு மார்க்சை விடவும் அதிக அறிவுத் திறன் வேண்டியதில்லை.

ஏனென்றால் நான் ஆரம்பிப்பதே மார்க்சின் தோள்களில் ஏறி நின்று கொண்டுதான்.

மார்க்சின் கால்மாட்டை நோக்கி நகராமல் தோள்களில் ஏறுகிற திசை என்னுடைய பருமனில் பெரும்பாய்ச்சல் நிகழ்த்துகிறது.

நான் உருவாக்குகிற மிக எளிய, முதல்நிலை அறிவும் மார்க்சைத் தாண்டிச் செல்வதாக இருக்கிறது.

மார்க்சின் தோள்களில் ஏறி நின்றே நான் மார்க்சின் தலையில் ஏறி அங்கிருந்தும் பாய்கிறேன். 

மார்க்சின் தோள்களில் ஏறி, தலையில் கால் மிதித்து உதைத்து மேலே பாயாதவர்கள் மார்க்சியவாதிகள் அல்லர்.

'மிதித்து மேலேறுகிற' செயற்பாட்டு அறிவு வெளியில் மிகச் சரியானது.

தவறான வெளிகளுக்குப் பொருத்திக் கொண்டு அபத்தவாதம் செய்யக் கூடாது.

உதாரணத்துக்கு, பொதுவெளியில் நான் ஒரு அற்பம். வரலாறு என்னை விடத் திருத்தமான தனித்த, தன்னுணர்வு நோக்குகளைக் கட்டமைத்துக் கொண்டே இருக்கும்.

அதே சமயம், தனிப்பட்ட வெளியில், என்னுடைய குடும்ப தனிப்பட்ட உறவுகளில் என்னைப் போல இன்னொருவரைக் கட்டமைக்கும் வாய்ப்பும் வழியும் வரலாற்றுக்குக் கிடையாததால் நான் மிகத் தனித்துவமான, ஒவ்வொரு தனிப்பட்ட உறவையும், மனிதர்களையும் மிக மதித்து முக்கியப்படுத்துகிறவனாக இருப்பேன். 

மார்க்சை எனக்குத் தனிப்படவும் தெரியாது. இப்போது அவர் இருந்தாலும் அவருடனான உரையாடலை இரசிக்க மாட்டேன் என நினைக்கிறென். 

//அதில் அதிக அனுபவம் பெற்றிருக்கிறார் என்றுப் பொருள். என்னைப் பொறுத்தவரை அவ்விசயம் சாதாரணமானது, எனவே அவ்விசயத்தை விளக்க விரும்பாத விசயம் என்று பொருள். அவ்விசயத்தில், அவர் கருத்தை சார்ந்திருக்கிறேன் என்பதல்ல.//

நீங்கள் சொல்லுவது மிகவும் தவறான கருத்து தோழர். 

நீங்கள் தோழர் உறவு பாலாவின் தோள்களில் ஏறவில்லை. வேறொங்கோ இடைநடுவில் தங்கி விட்டீர்கள்.

இது நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ தோழர் உறவு பாலாவைச் சார்ந்தே உங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் படி ஆக்குகிறது. 

இந்த அடிமைக் கூறு சுயமரியாதைக் குறைவைப் போலியாக மறைக்க போலி அதிகாரக் கூறுகளைக் கட்டமைக்கிறது - "என்னுடைய தராதரத்துக்கு இதற்கெல்லாம் கருத்துச் சொல்லுவது சிறுமை, அதனால்தான் அவரைக் கூப்பிட்டேன்"

இந்தச் சுழல்களுக்குள் சிக்கிக் கிடக்கிறீர்கள். மீண்டு வாருங்கள். 

"போய் மீளுங்கள்." என்பதே சரி. ஏனென்றால் இதுதான் உங்களுக்கான என்னுடைய கடைசிக் கருத்து.

தொடர்ந்த தேடலுக்கு வாழ்த்துக்கள்.



//\ என்னுடைய தராதரத்துக்கு இதற்கெல்லாம் கருத்துச் சொல்வது சிறுமை, அதனால்தான் அவரைக் கூப்பிட்டேன்// இதுவும் தங்களது தவறான புரிதல். இது தெரிந்தோ தெரியாமலோ தோழர் உறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணி அவர்களை சிறுமை படுத்துவதாக அமையும்.

என்னுடைய தராதரத்துக்கு என்பதை, நான் விவாதிக்க விரும்பாத விசயத்தில் அவர் விவாதிக்க விரும்பலாம் என்று நினைத்து தான் அவர் பெயரை குறிப்பிட்டேன் என்பது தான் உண்மை. எல்லாவற்றிலும் தங்கள் கருத்துதான் சரியானதாக இருக்கும் என்ற தங்களது அகநிலை பார்வையை அகற்றுங்கள். அகம் புறம் இரண்டையும் சேர்த்து பார்த்து ஆழமாக ஆராயுங்கள். தங்கள் கருத்துக்கள் மேலும் மேம்படலாம். வாழ்த்துக்கள்
.//

மோசமான குற்றச்சாட்டோடு முடிக்க வேண்டாம்.

நீங்களாக முன்வந்து  ஒரு கருத்தை முன்வைக்கிறீர்கள். அதை விளக்கச் சொன்னால் வேறொருவைக் கூப்பிடுகிறீர்கள். அந்தக் கருத்தை மிகச் சுருக்கமாக ஓரிண்டு வரிகளில் அதன் அடிப்படையைச் சொல்ல உங்களுக்கு முடியவில்லை. 

உங்களுக்கு இயலும், இயலாது, விருப்பு, விருப்பமில்லை என்பதல்ல பிரச்சினை. 

என்னை இளம்பிராயக் குறைப்பாடுள்ளவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிற நீங்கள் சின்னஞ்சிறு பிள்ளையாக நீங்கள் போட்டக் கருத்துக்கு விளக்கம் கேட்டால் இன்னொருவரைக் கூட்டிவருவதென்பது என்ன?

எனின், உறவு பாலா இல்லாமல் நானும் நீங்கள் உரையாட முடியாதென்பதென்ன? 

மறுபடி மறுபடி அகநிலை என்று மேம்போக்காகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

நான் இயக்கப் படிமுறைகள் எழுதுகிறேன். நீங்கள் தெரியும், தெரியாது, விரும்பவில்லை  என்றெல்லாம் மிக மேம்போக்காக, உங்களுடைய அகநிலை என்னவென்று வெளித்தெரியாத வகையில், பின்னவீனத்துவவாதிகளை மோசமான மொழியில் உரையாடுகிறீர்கள்.

நான் அகநிலையைத் தொடர்ந்து புறவயப்படுத்துகிறவன். முடிந்தளவுக்கு வரிப்படங்களைப் போடுகிறவன். 

வளைத்து வளைத்து ஏமாற்றுகிற பிழைப்புவாதிகள் எவராலும் எதையும் புறவயப்படுத்த முடியாது. 

என்னை அகநிலைவாதி என்பது உங்களுக்கு அதைப்ப்பற்றிய எந்த விளக்கமும் இல்லை என்றே காட்டுகிறது.

என்னுடைய பக்கத்தில் நீங்கள் மிக மேம்போக்கான குற்றச்சாட்டுகளோடு ஒரு கருத்தைத் தூவிவிட்டுப் போவதை அனுமதிக்க முடியாது. 

உங்களது பக்கத்தில் எனிப் போட்டுக் கொள்ளுங்கள்.





தோழர்
/அனுபவம்
என்பது சிறப்புத் தேர்ச்சி வாதம்.வயது வாதமும் ஆகும்,,,/
மனித சமூக வரலாற்றில் குறிப்பிடத்தக்க மனிதர்களின் எதிர் வினையாலேயே வளர்ச்சி வருகிறது.

அவர்களது அனுபவத்தை கவனம் கொள்ளத் தேவை இல்லை என்பது.மனிதன் பிறக்கும் போதே அறிவுடன் பிறக்கிறான் என்ற கருத்துமுதல்வாத தப்பென்ணத்திற்கு ஈட்டுச்செல்கிறதோ.
மனிதர்கள் சொந்தமாகவும் பலரின் மறைமுக அனுபவம் வாயிலாகவுமே
அறிவு வளர்ச்சி அடையப்பெறுகிறது.
சொந்த அனுபவங்கள் வாயிலாகவே அறிவை பெற முடியும் என்பது தேவையற்ற கால விரயத்தை உண்டாக்கும் #சுற்றுப்பாதையே ஆகும்.
இதை குறிப்பானது #தன்னுணர்வுக்கு அழுத்தம் தருவதாகும்.
இது வரலாற்றில் அராஜகவாதத்திற்கு ஈட்டுச்சென்றுள்ளது என்பதே,,//


தோழர் நான் பல தடவைகள் உங்களுக்கு எழுதி விட்டேன்.
செயலறிவினூடே கோட்பாடு வருகிறது.
கீழிருந்து மேலான அனுபவத்தினூடே மேலிருந்து கீழான கோட்பாட்டாக்கம் வருகிறது.
கோட்பாட்டுத்தளத்திலிருந்தான பார்வையில் அதற்குக் கீழிருந்து இயங்கிக் கொண்டிருக்கிற அனுபவ இயக்கம் பிற்போக்கானதே. அது முன்னேற்றப்பட வேண்டியதே.
அதே சமயம் கோட்பாட்டுத்தளத்திலிருந்து மேல் நோக்கிய செயலறிவின் திசை மட்டடைவதால் நான் திசையை அறிந்து கொள்வதன் மூலம் செயலறிவோடு பயணிக்கிறென்.
அதனால் செயலறிவு அடிப்படைகளிலிருந்து தோன்றுகின்ற கோட்பாடு என்பது செயலறிவை எப்போதும் வெல்லுவதாக இருக்கிறது.
விஞ்ஞானத்தை வெல்லுவதாகத் தத்துவம் இருக்கிறது. அதனால்தான் அது விஞ்ஞாங்களின் விஞ்ஞானமாகி, அடுத்த படிநிலையில் தத்துவங்களின் தத்துவமாகிறது.
வெற்றுப் பதங்களைப் பாவியாமல் இயக்கத்தை விளங்கி உரையாடலை வினைத்திறன் ஆக்குங்கள் தோழர்.
கீழுள்ளதையும் பல தடவைகள் எழுதி விட்டேன்.
நான் சொல்லுகிற பதங்கள் இயக்க வரைவுகளையே கொள்ளும்.
நான் முறை என்பது உண்மையில் முறை---> சட்டகம்--> முறை என்கிற இயக்கம்.
நான் கோட்பாடு என்றாலும், அனுபவம்/செயலறிவு/நேர்காட்சிவாதம்/சீழிருந்துமேல் என்று எப்படிச் சொன்னாலும் அது
செயலறிவு--->கோட்பாடு--->செயலறிவே.
இயங்கியல் தளத்தில் உரையாடலை நிகழ்த்த வரவே மாட்டீர்களா?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home