Friday, March 2, 2018

போதுமான அவகாசத்தை எடுத்துக் கொண்டு உரையாடுவோம்

எமது இயங்கியல் உடைபடாதது என்று சொல்லுவதல்ல நோக்கம்.

உடைப்பது மிகக் கடினம். உடைக்கும் திசையில் முதலில் உடைபடுவது இயங்கியல் பொருள்முதல்வாதமாக இருக்கும்.

ஆகையால் இருக்கிற மார்க்சிய இயங்கியலை (பொருள்முதல்வாதத்தால் மட்டடைந்த) உடனடியாக உயர்த்திச் சொல்ல வேண்டாம்.

போதுமான அவகாசம் எடுத்து உரையாடுவோம்.

நடைமுறை அவதானம், இயங்கியல் பொருள்முதல்வாதம் இவ்விரண்டையும் வைத்தே இயங்கியல்  பொருள்முதல்வாதத்தை இயங்கியலாகத் திருத்தம் செய்திருக்கிறோம்.

இயங்கியல் வரலாற்றின் எல்லாவித போக்குகளையும் இனிமேற்தான் தேட வேண்டும்.

இவற்றைத் தேட முன்பு எவ்விதம் முதன் முதலில் நாமே மிகத் திருத்தமான அறிவிப்பதாக அறிவிக்க முடியும்?

1. நேற்று இயங்கியலைப் புதுப்பித்தேன்: இயக்கம் --> ஆக்கம் --> முரண் ---> இயக்கத்தின் இயக்கம் --> பருப்பொருள்

2. இன்று அந்த இயங்கியலைக் கொண்டு இயங்கியலைப் பல வழிகளில் சரிபார்த்தேன். உள்ளிணக்கம் மிகுந்து செல்லுகிறதே அன்றி குறையவில்லை.

இந்த இயங்கியலைத் தகர்ப்பது மிகக் கடினம். ஆகையால் நேரமெடுத்துப் புரிந்து கொண்டு மறுப்புக்களை முன்வைத்து உரையாடுவோம்.

இயங்கியல் பொருள்முதல்வாதம் தகர்த்து விட்டது.

போதுமான அவகாசம் எடுத்து உரையாடுவோம்.


3. ஏன் இது வரைக்கும் எங்களது இயங்கியல் வரவில்லை என்று கருதுகிறோம் என்பதை விளக்குகிறேன்.

இயங்கியல் சிந்தனை உறுதித் தன்மையின் உறுதித்தன்மையின் அதி வீரிய இயக்கம். அது புறவயப்படுவதற்கான மிகுந்த முனைப்புடன் இருக்கும்.

அதாவது என்னுடைய சிந்தனை இயங்கியல் வழி நகர நகர் அதை வெளியில் புறவயமாக்குகிற பெருமுனைப்பு எனக்குள் வரும்.

அதை மொழி கொண்டு செய்ய முடியாது. மொழி ஒரு மட்டான புறவயக் கருவி.

மொழியைத் தாண்டி தான் முழுமையாகப் புறவயப்படுகிற வேறு வழிகளைத் தேடி என்னுடைய சிந்தனைக்குட் கிடந்து குடைகிற இயங்கியல் என்னை அதிவேகமாக இயக்கும்.

வரிப்படங்களின் மூலம் இயக்கமாகவே தன்னை விளக்கி மொழியின் மட்டுப்பாடையும் மீண்டு வரும்.

தொடர்ந்து புறவயமடைய விழையும்.

அசைபடங்களாய்ப் போடச் சொல்லி இம்சிக்கும்.

புறவய இயக்கம் புறவயத்தைப் புறவயமாக்குகிற அடுக்கேற்றம் பெறும்.

இயங்கியல் முழுப் புறவயமடைகிற வரையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும்.

ஆரம்ப முரணற்ற  இயக்கத்தின் தன்னை இயக்குகிற ஆக்கப் பண்பு எல்லாவித பண்புமாற்றங்களின் ஊடும் கடத்துப் படும் (எல்லாமே இயக்கமாய் இருப்பதற்கான அடிப்படைப்  பண்பு  இது ).

ஆரம்ப முரணற்ற  இயக்கத்தை விடவும் கருத்துவெளியிலிருந்து இயங்குகிற முரணற்ற இயக்கமான இயங்கியல் சிந்தனை ஆக்க முனைப்பு அதிகம் கொண்டது.

அது தன்னைதானே முன்னேற்றுகிற பண்பை  அதன் உள்ளார்ந்தமாய்க் கொண்டது. இதை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

இந்தப் புரிதலைப் பெற்றுக் கொண்டால்,

1. இதற்கு முன்பாக முழுத்திருத்த இயங்கியல் ஒரு சிந்தனையில் இருந்து இன்னொரு சிந்தனைக்குப் புரிகிற வரையில் புறவயப்பட்டிருந்தால் அது நிற்காமல் ஓடி பெருமாற்றங்களைக் கொண்டு வந்திருக்கும்.

2. சிந்தனைக்குள் தோன்றி மறைந்த பல இயங்கியல்கள் இருக்கலாம். எவருக்காவது, எக்காலத்திலாவது குறைந்த பட்ச புறவயப்படுத்த முடிந்திருப்பினும் அது தொடர்ந்து தன்னுடைய புறவயத்தை உந்துவதாக இருந்து பேரறிவாக வெளிப்பட்டிருக்கும்.

3. இந்த நிகழ்ச்சி வரலாற்றில் இன்னுமும் நடக்கவில்லை. எங்களுடைய இயங்கியல் அதனால்தான் முதலாவது நிகழ்வு என்கிறோம்.

4. இந்த இயங்கியல் தன்னுடைய புறவயத்தைத் தொடர்ந்து உந்தும். கணினிவெளி, செயற்கை நுண்ணர்வு என்று தொடர்ந்து மிக வேகமாகப் பயணிக்கும் என எதிர்வு கூறுகிறோம் (இந்த வேகம் இனிசியல் கொன்டிசனைப் பொறுத்தது, நெடுங்காலத்தில் இந்த இயக்கம் தவிர்க்க முடியாதது).

இதை என்னுடைய இயங்கியல் உரையாடல் இயக்கத்திலும் காணலாம். மொழியின் ஊடு இயங்கியலைவேண்டிய புறவயத்துக்கு கொணர  முடியாது என்று கண்டு கொண்டே அம்புக்கு குறி இயக்க வரிப்படம் போடுகிறேன்.

வரைப்படம் போட விழையாத, அதையும் தாண்டிய புறவய கருவிகளை கையாளாமல் ஒருவர்/பலர் இயங்கியலை எழுதிக் கொண்டே இருக்கிறார்கள் என்றால் கீழ் வருகிர இரண்டில் ஒரு சாத்தியம், அல்லது இரண்டுமே 'காலத்துடன்' மிகுந்து வரும்

1. இயங்கியல் அவருக்கு/அவர்களுக்குப் புரியவில்லை

2. அவர்களுடைய சிந்தனை மட்டத்தில் இருக்கிற சரியான இயங்கியல் அந்த சரித்தன்மையை இனங்காணுகிற அளவுக்குப் புறவயப்படவில்லை.

அதனால்தான் நாம் வரலாற்றில் முதன்முறையாக அடுத்தவருக்குப் புறவயப்ப்படுகிற இயங்கியலை அதன் சிக்கலையும், தேவையையும் விளங்கி எழுதுகிறோம் என்று அறிவித்தோம்.

Shoba Sakthi 

//இந்தச் செய்தியை நீங்கள்தான் முதலில் பதிவு செய்ததாகக் கூறமுடியாது. ஏனெனில் 18ம் புருமரின் இடைமருவு பகுப்பு காண் பொருள் புருத்தோனின் கொம்பிரதேர் எதிர்வு வேறு. எதிர் பருண்மை கலந்து சூக்கும உற்பத்தி உறவு 17ம் நுாற்றாண்டு முன் நவரோனித துவிதம் ஹெகலின் முற்சாய்வு. 

பரும்படி மேற்கட்டுமான வீழ்ச்சி மகா நெப்போலியன் கால நிலமானியம் பின் ஆலைத்தொழிலாளி கலைப்புவாத திருத்தல்வாதம் என நிரூபித்தது ப்ளாக்னொவ். வரலாற்று இயங்கியல்வாத முறைமை ரைன் பிரதேச குலாக் வேறு வேறு.

பின் மார்க்ஸிய அந்நியமாதலின் தேசியவாதப் புறநீங்கல்வாத நிகழ் மைய அணியமே உங்கள் பதிவு எனக் கருத இடமுண்டு//


பதில்
இது பற்றிய உரையாடலை நிகழ்த்த விரும்புகிறேன். 

அத்தோடு எவ்விதம் இந்த இயங்கியலைக் கட்டமைத்தோம் என்பதையும் எழுதியிருக்கிறேன். இது இயங்கியல் பொருள்முதல்வாதம், நடைமுறை அவதானம் இரண்டிலிருந்தும் வந்தடைந்தாகும். 
வேறு எந்த தத்துவமும் பயன்படவில்லை. ஏற்கனவே இருப்பவை பற்றியும் தேடவில்லை. 

ஏற்கனவே இருப்பவை 'அறிவு' மட்டத்தினருக்குத் தெரிந்து, புரிந்திருந்தும் நடைமுறைத் தளத்துக்கு வராததாயிருப்பின் அது நாங்கள் சொல்லுகிற இயங்கியலாக இருக்கிற சாத்தியக் கூறு மிகக் குறைவு. 

எங்களுடைய இயங்கியல் நடைமுறைச் சாத்தியக்கூறை விதித்துக் கொண்டு ஏற்படுவது. 

உரையாடலாம். இணைப்புக்கள் இருந்தால் தாருங்கள்.

சோபாசக்திக்கான பதில் மேற்சொன்ன தன்னைப் புறவயமாக்குகிற இயங்கியலின் உந்துதலை அடிப்படையாக்க் கொண்டது.


இயங்கியலைக் கொண்டு இயங்கியல் முரணின்றி வரைவுபட்டது இது முதல் தடவையாக இருக்கிற வாய்ப்பே இயங்கியல் வழியில் மிக அதிகம். 


நேரமெடுத்து உரையாடுவோம். 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home