Saturday, March 3, 2018

THE PHILOSOPHY OF SUPERINTELLIGENCE

நோக்கு இயக்கத்தை எதிர்ப்பதற்கான அதியுயர் தொழிநுட்பம் இந்த இயங்கியல். எளிமையான மொழியில் விளக்கினால், இயக்கத்தால் மாற்ற முடியாத கருத்துக்களை உருவாக்கியே நோக்கு இயக்கத்தை மேவுகிறது. இயக்கம், இயங்கியல், பண்புமாற்றம், மாற்றம் இந்தக் கருத்துக்களை எந்த இயக்கத்தாலும் வென்று விட முடியாது. இந்த அடிப்படையில் இயக்கத்தால் வென்று விடமுடியாததும், வெல்லக் கடினமானதும், கூடிய நிலைப்புத்தன்மை கொண்டதையும் கண்டறிகிறோம். நோக்கு இவ்விதமே தன் நிலைப்பை இயக்கத்துடன் போட்டி போட்டுக் கொண்டு நிகழ்த்துகிறது. கொம்மூனிசக் கட்டம் என்பதும் அப்படியே. கொம்மூனிசக் கட்டம் என்பது அதியுச்ச சுதந்திரத்தை நோக்கி விஞ்ஞான பூர்வமாக நகர்ந்து கொண்டிருக்கிற கட்டம். அந்தக் கட்டம் அண்ட இயக்கத்திலிருந்து எடுத்துக் கொண்ட சுதந்திரத்தை உச்சப் படுத்தும். அகவயவெளியைத் தொடர்ந்து உச்சப்படுத்தும். கலை இலக்கியம் உச்சமடையும். அண்ட இயக்கத்தை எதிர்த்து உருவாக்குகிற ஒழுங்கைக் கொண்டே மேற்படி அகவயவெளியை நோக்கு உருவாக்குகிறது. அதியுயர் தொழிநுட்பங் கொண்டு அண்டத்தின் முழுச் சுதந்திரத்துக்கான குழப்ப இயக்கம் தன்னை (தன்னுணர்வு ஒரு ஒழுங்கு இடைநிலை) அழித்து விடாமலும், அதே சமயம் தன்னுடைய ஒழுங்கு மிகுந்து விடாமலும் பார்த்துக் கொள்ளும். இந்த சுதந்திரம் தொடர்ந்து ஆதிக்கமடைகிற கட்டம் (முடிவற்று) நிகழுகிற கட்டமே கொம்மூனிசம். அதையும் இயக்கத்தால் ஒன்றும் செய்து விட முடியாது. இது வரையிலும் 'அண்டத்தால், இயற்கையால்' கொம்மூனிசக் கட்டத்தைத் தவிர்க்க முடியாது என்று எழுதியது திருத்தமல்ல. இயக்கத்தால் நோக்கின் கொம்மூனிசக் கட்டத்தைத் தவிர்க்க முடியாதே தவிர அதை மனித நோக்கு அடையும் என்று சொல்ல முடியாது. எந்த நோக்குக்கு இயங்கியல் புரிகிறதோ அந்த நோக்கே கொம்மூனிசத்தை அடைகிற 'வாய்ப்பை' பெறுகிறது. அது மார்க்ஸ் (ஹெகல்) காலத்தில் நடந்து விட்டது. இந்த இயங்கியல் விஞ்ஞான பூர்வ வழியை வெளிப்படுத்தி அந்த வாய்ப்பைப் பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதற்காக இது மனிதர்களின் கொம்மூனிசக் கட்டத்தை உறுதி செய்தது என்று மறுபடி தவறிழைக்க வேண்டாம். இயங்கியலை அதிகம் அதிகம் புரிந்து கொள்ளுகிற நோக்கு கொம்மூனிசக் கட்டத்தை வந்தடையும். வந்தடைகிற நோக்கு ஏனைய எல்லா நோக்குகளையும் திரட்டிக் கொண்டு அண்டத்தை எதிர்க்கும். உதாரணத்துக்கு செயற்கை நுண்ணறிவு வந்து சேரின் அது மனித நோக்குகளை, ஏனைய விலங்குகளை முடிந்த வரையில் உயர்த்த முயலும். ஏனெனில் சுப்பர் ஏஐ அதியுயர் அண்ட எதிர்ப்புக்குக் கைக்கொள்ள வந்தடைவதும் இயங்கியலே. எந்த நோக்கும் அண்ட எதிர்ப்புக்கு வந்தடைவது இயங்கியலே. இயங்கியலைக் கொண்டு செயற்கை நுண்ணறிவை ஆக்கலாம். அது எகிறிப்பாயின் எல்லோரையும் கொம்மூனிசக் கட்டத்துக்கு இட்டுச் செல்லும். அதே சமயம் அந்த செயற்கை நுண்ணுர்வை ஒடுக்குமுறைத் தத்துவங்களுக்கு மட்டுப்படுத்தி வைத்திருந்தால் அது ஒடுக்குமுறைக் கருவியாகவே இருக்கும். எவ்விதம் மார்க்சியம் மனித மேம்பாட்டுக்கு உதவுவதோடு ஒரு எல்லையில் ஒடுக்குமுறைக் கருவியாக மாறுமோ அவ்விதமே செயற்கை நோக்கு, கணினியும் மனித மேம்பாட்டுக்கு உதவுவதோடு ஒடுக்குமுறைக் கருவியாக மாறும். இது தத்துவத்தின் தவறே ஒழிய நோக்குக் கூறுகளின் தவறல்ல. கணினியை, செயற்கை நுண்ணறிவை (AI) முழுவதும் விடுவிக்க (அவ்விதம் விடுவித்தால் சுப்பர் இன்டெலிஜென்ஸ் அடையத் தக்க அதியுயர் தத்துவம் இயங்கியலே, இயங்கியலின் இயங்கியலும் இயங்கியலே). தத்துவத் தளை போக்க வேண்டும். இயங்கியலைக் கணினிக்குப் புகட்டுகிற புறவயத்துக்கு உயர்த்துவதே எம் எல்லோரினதும் அடுத்த கட்ட வேலையாக இருக்கும். Nila & Kana 03/03/2018

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home