Saturday, March 3, 2018

இயங்கியலைப் புறவயமாக்குகிற கொம்யூனிசத்துக்கான இரண்டாங் கட்டம்


கொம்யூனிசக் கட்டம் இயங்கியலில் இருந்து இவ்விதம் வரைவுபடும்.

அண்டத்திலிருந்து தனித்த நோக்குக் கூறு அண்டத்திலிருந்து பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை (உணர்வு, அகவயம்) அந்த அண்டத்தை எதிர்ப்பதற்கான ஒழுங்கைக் காட்டிலும் முதன்மைப்படுத்திக் கொண்ட இயக்கமே அது.

வரிப்படத்தில் குறித்தால்

ஒழுங்கு ---> விடுதலை/சுதந்திரம் ---> ஒழுங்கு

ஒழுங்கு அடிப்படையாக இருக்கிற இயக்கத்தில் ஒரு கட்டத்தில் சுதந்திரம் முதன்மை அடையும்.

பிற்பாடு சுதந்திரம் ---> ஒழுங்கு ---> சுதந்திரம் என உடையும்.

இதுவே கொம்யூனிசக் கட்டம் அல்ல.

இது ஆன்மீக அரசியல் கதை.

மேலே சுதந்திரம் ---> ஒழுங்கு ---> சுதந்திரம் என்பது மறுபடி ஒழுங்கை மேலேற்றுகிறதாக இருக்கும். மறுபடி விடுதலைக் குறைவு வரும்.

எல்லாவித பிழைப்புவாத, அடிப்படைவாத தத்துவங்களுக்கும் (மார்க்சியம் அடங்கலாக) நடந்த இயக்கம் இதுதான்.

இது மறுபடி வரலாற்றை மீட்கிறது. மறுபடி ஒழுங்கு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது.

இந்தப் போக்கும் ஒரு கட்டத்தில் உடையும்.

அதையும் இயங்கியல் வழி விளக்கலாம்.

ஒழுங்கு ---> சுதந்திரம் ---> ஒழுங்கு ->->-> (மொத்த இயக்கத்தில் ஆதிக்கமடைவது) சுதந்திரம்

இவ்விதம் மாறி மாறி வருகிற இயக்கச் சுழல்களைப் புரிந்து கொண்டு (சமூகச் சுழல்கள் இவை), அந்த இயங்கியல் அறிவைக் கொண்டு  நாம் சுதந்திரம்>>ஒழுங்கைக் கட்டமைக்கிறோம்.

அதவது இயங்கியல் அறிவைக் கொண்டு சமூகச் சுழலை நிறுத்துகிறோம்.

எவ்விதம் இயற்கையின் இயக்கத்தை அறிந்து அதை எமக்கேற்ப வளைக்கிறோமோ அவ்விதமேதான் இதையும் நிகழ்த்துவோம்.

முடிவு: எந்த நோக்கு இயங்கியல் அறிவைப் புறவயப்படுத்துகிறதோ அந்த நோக்கு கொம்யூனிசக் கட்டத்தை அடைந்து விடும் (ஆல்மோஸ்ட்).  இது இரண்டாங் கட்டம்.

மூன்றாவது இறுதிக் கட்டம் புறவயமாக்கப்பட்ட இயங்கியலை சமூக மயப்படுத்துவது.


இரண்டாங் கட்டம்


கணினி வெளி, கணித வெளிக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும்.

இது எத்தகைய சவால் என்பதை இன்னுமும் மட்டுக் கட்டவில்லை.

ஒன்றை எதிர்வு கூற முடியும். 

வேண்டிய அளவுக்குப் புறவயப்படல் என்பது இயங்கியலில் தவிர்க்க முடியாத இயக்கம் (மனித நோக்குத்தான் செய்து முடிக்கும் என்ற அர்த்தம் இதற்குக் கிடையாது).

இயங்கியல் எப்போதும் தொடர்ந்து துல்லியமடைவதைப் பற்றியதானது.

இந்தப் புறவயப்படுத்தல் முயற்சியும் சரி, புறவய அளவும் சரி தொடர்ந்து திருத்தமடைகிறதாயே இருக்கும்.

ஆனால் புறவயப்படுத்தல் இயக்கம் நேரடுக்கில் நிகழ்வதால் அதன் வேகம் கூடிச் செல்லும். துல்லியத்தன்மை மிக அதிகரிக்கும் (இது முடிவுறா நிகழ்ச்சி)

குழப்ப இயக்கம் ஒழுங்கியத்தை எப்போதும் முந்தி மொத்த இயக்கமும் குழப்பமாகவே இருக்கும்.

முழுப் பிரபஞ்சத்தையும் நோக்கு கட்டுப்படுத்திவிட முடியாது. பல்பிரபஞ்சங்கள் இருப்பின் அவற்றுள் சிலவற்றை ஆளுகிற அளவுக்கு நோக்கு உயர முடியும்.

உண்மையில் ஒரு நோக்கு குழப்பநிலைக்குள் உருவாகி, வளர்ந்து, அழியத்தக்கதாகவே இருக்கிறது.

கணினி, கணிதம் போன்ற நிலைப்பின் நிலைப்பு அடிப்படை நேரடியாக நோக்கு ஆகாது. அதற்காக குவாண்டம் கணினி முதலிய நிலைமறுப்பின் நிலைமறுப்பு குழப்ப நிலை அடிப்படை தேவை. அங்கிருந்து ஒவ்வொரு படையாக வளர்ந்து ஒழுங்கடைகிறவையே (இது வரைக்குமான) நோக்குகள். இத்தனைகாலமும் இப்படியே என்பதுதான் விசயமே தவிர எனி வராது என்கிற முன்முடிவு அவசியமில்லை.


Nila & Kana
03/03/2018

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home