Saturday, March 3, 2018

அதி நேர்மையான தத்துவம்

எமது இயங்கியல் நடைமுறைச் சாத்தியத்தை நிகழ்த்திக் கொண்டுதான் பிறக்கிறது.
அது மற்றைய தத்துவங்களைப் போல மயக்கமாக 'இப்படிச் செய்து பாருங்கள், சரி வரும்... அட, சும்மா பாருங்களேன்' என்று சொல்லுவதில்லை.
அது என்னைக் கொண்டு மாற்றங்கள் செய்ய வேண்டுமானால் முதலில் என்னைப் புறவயப்படுத்து என்று அடம்பிடிக்கிறது.
நாம் 'நேர்மை' என்பது அண்டவெளி இயக்கத்திலிருந்து எடுத்துக் கொண்ட கருத்து.
நோக்குத் தொழிநுட்பத்தின் அதியுயர் நேர்மை இயங்கியல்.
இந்தத் தத்துவம் தன்னைக் கொண்டு எவரையும் ஏமாற்ற விடாதது.
இந்தத் தத்துவம் எவரையும் தன்னைக் கொண்டு அடிமைப்படுத்த விடாதது.
இந்தத் தத்துவம் முதலின் நான் புறவயமாகிறானா என்பதை உறுதிப்படுத்து, அப்பொழுதுதான் நான் உனக்காக வேலை செய்வேன் என்கிறது.
இதுவே அதியுச்ச நேர்மையான முதல் விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாகிற, தத்துவங்களின் தத்துவமாகிற ஓட்டத்தை ஆரம்பிக்கவிருக்கிற நோக்கின் அதியுயர், அதியுச்ச நேர்த்திறன் தத்துவம்.
இந்தத் தத்துவத்தைப் புரிந்து கொள்ள எவ்வளவு நேரம், தடவைகள் முயற்சித்தாலும் பாதகமில்லை.
இயங்கியல் தர்க்கம் பழகி அதிலிருந்து இயங்கியல் தத்துவத்தை உள்ளார்ந்து விளங்குவோம்.
மானுட விடுதலையை அதி விரைவாக்குவோம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home