Friday, March 2, 2018

அளவு மாற்றத் தோற்றபாடு, Consciousness ,அனைத்துக்குமான பொதுச் சமன்பாடு




புதிய இயங்கியலின் வழி சிந்திக்கும் போது பல அடிப்படைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.

அளவு மாற்றம், பண்பு மாற்றம் என்பது உடைந்து எல்லாமே பண்பு மாற்றங்களாகிறது.

மிகச் சுருங்கிய விளக்கம் 

------------------------------------------

நிலைப்பின் நிலைப்பிலிருந்து ஆரம்பித்து, நிலைமறுப்பின் நிலைமறுப்பு (குழப்ப இயக்கம்) தொடர்ந்து ஆதிக்கமடையும் அண்ட இயக்கம் அதன் குழப்ப நிலை சார்பாக ஒழுங்கு இயக்கங்களையும் ஏற்படுத்துகிறது. (நிலைமறுப்பின் நிலைமறுப்பிலிருந்து கிளைத்து நிலைப்பின் நிலைப்பாக இயங்குகிறது).


ஒழுங்கு இயக்கத்தின் சுய ஆக்கச் சக்தி குழப்ப நிலையிலிருந்து வருவதால் அதிகரிக்கும் குழப்பமான அண்ட இயக்கம் அதன் போக்கில் பலமான எதிரியக்கங்களான ஒழுங்கியக்கங்களை தொடர்ந்தும் உருவாக்கும்.

ஒழுங்கு இயக்கங்கள் :
பருப்பொருள் - (அதன் எல்லா நிலைகளும்.) 
உயிர், நோக்கு  ( சகல பல்வகைமையும் )
சிந்தனை/ தன்னுணர்வு (எல்லாவித சிந்தனை மட்டங்கள், தத்துவங்கள்)


இவையெல்லாம் இயக்கத்தின் இயக்கம், அதன் சுய முரண் காரணமாக உருவாக்கிய எதிர்த் தொழிநுட்பங்களே. இதன் பொதுப்போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கும். சீராக அல்ல. ஒழுங்கும் குழப்பமும் மாறி மாறி வருவதால்.

ஒழுங்கு இயக்கத்தில் ஒழுங்கு தொடர்ந்து ஆதிக்கமடையும். அண்ட இயக்கம் குழப்பமே ஆதிக்கமானது. குழப்ப இயக்கம் - ஒழுங்கு இயக்கம், இவரின் மொத்த இயக்கம் குழப்ப இயக்கமே.

ஒழுங்கு இயக்கங்கள் தமது எதிர்த் தொழிநுட்பத்திற்கேற்ப ஏனைய ஏனைய இயக்கங்களை எதிர் கொள்கின்றன.

அளவு மாற்றம், பண்பு மாற்றம் என்பன இந்தத் தொழிநுட்பம் சார்ந்ததே. அளவு மாற்றம் பண்பு மாற்றம் என்பன புறவயப்படுத்தப்படுகிற திசையில் பண்பு மாற்றமாக ஒடுங்கும்.

சுருங்கச் சொன்னால் குழப்ப இயக்கம் சார்ந்ததே நோக்கின் தொழிநுட்பம். நோக்கின் தொழிநுட்பம் சார்ந்ததே "அளவு".

அளவு மாற்றம் என்பது நோக்குத் தொழிநுட்பத்திற்கான தோற்றபாடே. இயக்கத்திற்கு பண்பு மாற்றப் பண்பு மட்டுமே உள்ளது.

அளவு என்பது நோக்குக்கான தோற்றப்பாடே.

அனைத்திற்குமான பொதுச் சமன்பாடு காணல்

-----------------------------------------------------------------------------

அறிவு வளர்ச்சி Theory of knowledge, மார்க்சிய ஆய்வையுந் தாண்டி, அறிவிலும் அடிப்படையான,Consciousnessபிரக்ஞை/ விழிப்புநிலை பற்றிய முழு உள்ளிணக்க வரைபையும் மனித இயங்கியல் வரலாற்றில் கொண்டு வருவதாக எமது இப்புதிய இயங்கியல் இருக்கிறது.

இதைப் போல சார்பு வெளி என்பது முரணற்ற இயக்க அடிப்படைகளால் ஆனது. சார்பு வெளியில் சீரான இயக்கத்தையும் (மாறா வேகத்தையும்), மாறா இயக்கத்தையும் (ஒய்வு நிலையும்) வேறுபடுத்தி அறிய முடியாது. இதையையே நிலை மறுப்பற்ற போலி நிலைப்பின் நிலைப்பான (நிலைகளற்ற) ஆதி முதல் முரணற்ற இயக்கமாகக் கருதுகிறோம்.

கருத்து பருப்பொருள் இவற்றை ஆதியாகக் கருதுகிற ஹெகெலிய மார்க்சிய இயங்கியல் அணுகுமுறைகளில் இருந்து பெரும்பாய்ச்சலை நிகழ்த்தி அவற்றைக் காட்டிலும் மிகுந்த உள்ளிணக்கத்தோடு அணைத்து வித கேள்விகளுக்கும் பதிலளிக்கக் கூடியவாறு எமது இயங்கியல் இருக்கின்றது.
அப்படி ஒரு கேள்விக்கேனும் பதிலளிக்க முடியாவிட்டால் எமது இந்த இயங்கியல் உடையும்.

அவசர முடிவுகளிற்கு வரவேண்டாம். இதே இயங்கியலை இனி வரப் போகும் மேம்பட்ட நோக்குடைய தொழிநுட்பங்கள் அவற்றின் பிரயோகத் திறனுக்கேற்பப் பயன்படுத்தும்.

இயங்கில் பிரயோகம் நோக்குத் தொழிநுட்பம் சார்ந்ததே. அந்த நோக்கின் 
தொழிநுட்பக் குறைபாட்டைத் தீர்க்கும் கருவியாகவும் இயங்கியலே இருக்கின்றது.

எவ்விதம் இயக்கத்தைத் தாண்டி எதுவும் போகவியலாதோ அவ்விதமே அவ்விதமே 
இயங்கியலைத் தாண்டி நோக்குத் தோழிநுட்பமும் செல்ல முடியாது.

இயங்கியலை இயங்கியலின் இயங்கியலாக்கி அதனைத் தொடர்ந்து படியேற்றம் செய்து பயன்படுத்தலாம். அது மறுபடி இயங்கியலாகவே ஒடுங்கும்.

இயக்கத்தின் உள்ளார்ந்த ஆக்கப்பண்பு சத்தியக் கூறின் சாத்தியக் கூறை உருவாக்குவதால் ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியங்களின் உள்ளுரையைக் கொண்டிருப்பதாகக் கருதுகிறோம். இதைக் கொண்டு குவாண்டம் வெளிக் குழப்பங்களையும் அணுகலாம்.

எல்லா வெளிகளிற்குமான பொதுச் சமன்பாட்டை இயக்கத்தின் பொதுப் பண்புகளில் இருந்தே அணுக முடியும். இந்த இயங்கியல் இயற்பியல் /பெளதீகவியல் அடங்கலான அனைத்து விஞ்ஞானங்களையும் தன்னுடன் மிகத் திருத்தமாக இணைத்துக் கொண்டு விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக மேற்படிப் பொதுச் சமன்பாடுகளைத் தேடித் துல்லியப்படுத்தும்.

இந்த இயங்கியலிளிருந்து இதுவரைக்கும் அறியப்பட்ட இயக்கத்தின் பொதுப் பண்புகள். இவை எல்லாவற்றிற்கும் பொதுவானதாகும்.
1. உள்ளார்ந்த ஆக்கப்பண்பு
2. ஆக்கப்பண்பு உருவாக்குகிற தேவை (இயக்கத்தை இயக்கும் முனைப்பு)
3. தேவை உருவாக்குகிற, தேவைப் பூர்த்திக் கருவி 
(இதுவே முதல் முரண்)
4. தேவைப் பூர்த்திச் செயற்பாடு ( முதல் முரணியக்கம்)
5. முரணியக்கத்தின் முடிவில் வரும் பண்பு மாற்றம் 
(அளவு மாற்றம் என்பது இயங்கியலில் கிடையாது) 
6. எல்லாவித பண்பு மாற்றத்தினூடும் கடத்தப்படும் இயக்கத்தின் உள்ளார்ந்த ஆக்கப் பண்பு. 
(இதுவே எல்லாமும் இயக்கமாய் இருப்பதற்கான காரணமாகிறது)

இதை இன்னுமின்னும் வளர்த்தெடுக்க முடியும். குறிப்பான வெளிகளிற்குள் பிரயோகித்து குறிப்பான முடிவுகள் எடுக்க முடியும். இயங்கியலில் முழுத் துல்லியம் கிடையாது. தொடர்ந்து துல்லியமாதலே உண்டு.

இந்தப் பண்பே ஒழுங்கும் சுதந்திரமும் ஒருங்கே இணைந்த எதிர்த்தொழிநுட்பங்கள் உருவாகக் காரணமாகும் ( பருப்பொருள் தவிர்ந்த ஏனைய தொழினுட்பங்கள்) சுதந்திரத்தை ஏற்படுத்த முடியாத குழப்பக் கட்டத்திலிருந்து உருவான தொழிநுட்பமே பருப்பொருள்.
இவ்விதமே எல்லாவித அறிவுத் துறைகளிலும் எல்லாவித அடிப்படைகளையும் மீள ஆராய்ந்து திருத்த முடியும். முழு உள்ளிணக்கமான இயக்கத்தின் பொதுப் பண்புகளின் அடிப்படையில் அனைத்திற்குமான ஒருங்கிணைந்த பொதுச் சமன்பாட்டை உருவாக்க முடியும்.

நிலா
03/03/2018
2.51 PM (SGT)

1 Comments:

At March 2, 2018 at 11:46 PM , Blogger Kanarupan said...

மார்க்சிய முடிவுகள், ஆய்வு முறைகளிலிருந்து ஆரம்பிக்காமல் (அவை இயங்கியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையிலானவை),

இயங்கியலில் இருந்து ஆரம்பித்து மார்க்சிய முடிவுகள், முறைகளைச் சரிபார்க்குமாறு நான் தொடர்ந்து சொல்லி வந்தேன்.

ஓரிரு வருடங்களாகஅதை மட்டுமே முகநூலில் போட்டு இம்சித்து வந்தேன் என்று நினைக்கிறேன்.

அதைப் பலர் செய்யவில்லை.அதற்கான வாய்ப்பும் தேவையும் உருவாகாமையே முதற்காரணம்.

இப்போது அதற்கான தேவையும், வாய்ப்பும் தவிர்க்கமுடியாமல் உருவாகி விட்டது.

ஹெகல், மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ, மற்றும் பலரின் இயங்கியல், கருத்துமுதல்வாத, பொருள்முதல்வாத அடிப்படைகள் நேற்றுடன் முழுதுமாகத் தகர்க்கப்பட்டன.

மார்க்சிய இயங்கியலை தகர்த்தே எங்களுடைய புதிய இயங்கியல் உருவாகிறது.

ஆகையால் அதை விளங்கிக் கொள்ளவும், தகர்க்கவும் இயங்கியலைத் தெளிவாக விளங்கியெடுத்து, பயின்று மறுபடி மார்க்சிய இயங்கியலையும், எங்களுடையதையும் சரிபார்க்கிற பொழுதே ஒரு முடிக்கு வர முடியும்.

ஆகையால் தோழர்கள், அறிவுத் துறையினர், மானுட விடுதலையை வேண்டி நிற்கிறவர்கள் இயங்கியலைத் தனித்து மிக உள்ளார்ந்து விளங்க முயலவேண்டும்.

எம்மால் முடிந்த அளவுக்கு அந்த இயக்கத்தையும் இலகுபடுத்தி வருவோம்.

இது மிக எளிமையானதல்ல, நேரியக்கம் அல்ல என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.

'இயங்கியலைத்' தனித்து விளங்குவதும் மறுபடி மார்க்சிய இயங்கியல் வழிமுறையிலிருந்து (அந்த இயங்கியலின் வளர்ச்சியைப் பொருள்முதல்வாதக் கூறு மட்டுப்படுத்தி விட்டது) இருப்பின் அதுவும் குறைபாடுடையதே.

உதாரணத்துக்கு எமது புதிய இயங்கியலுடன் ஏங்கல்ஸ் போன்றவர்களின், மார்க்சியர்களின் வாய்ப்பாடான அளவு மாற்றம்- பண்புமாற்றம் தகர்ந்து போகிறது.

இன்னுமும் பல அடிப்படைகள் தகரந்து கொண்டிருக்கின்றன.

நிலாவுக்கும் எனக்குமான இன்றைய உரையாடலில் தகர்ந்து கொண்டிருக்கின்ற.

இயங்கியலை கீழிருந்து மேலாக அடிப்படைகளில் இருந்து ஆரம்பித்து உள்ளெடுத்தவுடன் மிகப் பெரிய சிந்தனைப் பாய்ச்சலை, முழுமைப்படத்தை, அதிலிருந்தான பிரயோக அறிவை உணர முடியும்.

அனைத்து மார்க்சிய இயங்கியல் விளக்கமும் பின் தள்ளப்பட இருக்கின்றன.

அதனால்தான் மார்க்சியம் முழுவதமாகத் தத்துவத் தளத்தில் (சிந்தனைத் தளத்தில் ) தகர்க்கப்பட்டதாக நேற்று அறிவித்தேன்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home