Sunday, March 4, 2018

Karl Marx vs Karl Popper

My comment on Karl Marx vs Karl Popper
Marx was right about the Science of Sciences but came up with a wrong/pseudo 'science of sciences'.
Karl Popper was right about Science (as a method) but not really understood 'Science of Sciences'.
Karl Popper's arguments assume that Marx's Science of Science is the real Science of Sciences and 'blindly' attacked the notion itself.
BOTH WERE/ARE WRONG.



A comment on 11/03/2018And Karl Popper is right (in the right direction) about the philosophy of Probability - Propensity. FYI, our new dialectics have better (probably the best) Propensity theory.  

தொடர்புடைய இன்னொரு பதிவு




எனக்கு கார்ல் மார்க்ஸின் (போலி) விஞ்ஞானங்களின் விஞ்ஞானங்களை அடித்து நொறுக்குவதை தனது வாழ்நாள் கடமையாகக் கொண்ட கார்ல் பொப்பர் (Karl Popper) நினைவுக்கு வருகிறார். 

அவர் விஞ்ஞானத்தை மிகத் திருத்தமாக வரையறுத்தார். 

அவரது வரையறையைக் காட்டிலும் அதி திருத்தமான விஞ்ஞான வரையறையை நம் இயங்கியல் வைத்து விட்டது. 

'நோக்கு' (அகவயவெளி கொண்ட இயக்கம், எல்லா உயிர்கள், மனிதர்கள் உதாரணம்) அண்டத்தை எதிர்ப்பதற்கான அதியுயர் ஒழுங்கே விஞ்ஞானம்.

கார்ல் பொப்பர் ஒரு தத்துவவியலாளர்.

அவரது 'சகிப்புத்தன்மை' பற்றிய தத்துவம் பிரபலமானது. 

"சகிப்புத்தன்மை அதிமுக்கியம். சகிப்பின்மையை முடிந்தளவுச் சகித்துக் கொள்ளுங்கள். ஆனால் சகிப்புத்தன்மையையே அழித்துவிடுகிற அளவுக்கு வருகிற சகிப்பின்மையை சகித்துக் கொண்டிராதீர்கள்."

விசயம் சரி. அதை எப்படி நிறுவுவது?

கார்ல் பொப்பர் எந்த விஞ்ஞான முறையைக் காலம் முழுவதும் வளர்த்தெடுத்தாரோ அந்த விஞ்ஞான முறையால் முடியாது.

கார்ல் பொப்பர் எந்த 'அடிப்படையில்' மேற்படி தொகுத்தறி தத்துவங்களை முன்வைக்கிறார்?

அவற்றை எப்படித்தான் சரிபார்ப்பது?

கார்ல் பொப்பர் காலம் முழுவதும் அடித்து, எதிர்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானங்களின் விஞ்ஞானமே அவரையும் சரிபார்க்கிறது. 


கார்ல் பொப்பர் மட்டுமல்ல, கார்ல் மார்க்ஸ் மட்டுமல்ல இதுவரைக்கும் எவர் முன்வைத்த தத்துவமும், கருத்தும் புதிய இயங்கியலினூடு மிக எளிமையாகச் சரிபார்க்கப்படும். 

தயவு செய்து மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ, ட்ரொட்ஸ்கி இப்படிச் சொல்லிவிட்டார்கள், நீ என்ன அப்படிச் சொல்லுகிறாய் என்று அடிப்படைவாதத்தைக் கொட்ட வேண்டாம்.

இந்த அடிப்படைவாதம் இயங்கில் பொருள்முதல்வாதத்திலிருந்து வருவதை உணர்ந்து, அதை எதிர்ப்பதன் மூலம் முழு விடுதலை பெறுவீர்.

-Nila







0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home