Friday, March 2, 2018

நிலா திசை, நான் பருமனே

இன்றைக்கு ஒரு நிம்மதியான நாள்.
இருபது வயதுகள் வரையில் பிழைப்புவாதியாக, அரசியல் இன்மையே என்னுடைய அரசியலென்று சொல்லி வந்தேன்.
என்னுடைய உண்மையான பிரச்சினையை எனக்கு உணர்த்தியவர் நிலா.
எனக்கு முரண்பிரச்சினைகள் இருந்தன (எல்லாருக்கும் இருக்கின்றன).
1. அரசியலில் எனக்கு எந்த ஒழுங்கும் பிடிபடவில்லை. அதனால் அரசியல் என்று சொன்னாலே பயந்தோடினேன். கதைச்சு என்னாகப் போகுது என்றிருந்தேன்.
2. ஒழுங்கு பிடித்ததாகச் சொன்னவர்கள் முழுவதும் ஒழுங்கில் நடப்பதாகச் சொன்னார்கள். என்னுடைய சுதந்திரத்தைப் பறிக்கிறார்கள் என்று அவர்களைப் பார்த்தும் பயந்து ஓடினேன்.
என்னுடைய இந்தச் சுத்திச் சுத்தி ஓடுகிற இயக்கத்தை பெருமளவு முயற்சிகளினூடு நிறுத்தியவர் நிலா.
நீங்கள் கொம்மூனிஸ்ட்தானே, அதில் உள்ளதை அப்படியே செய்வதற்கு என்ன மூளை உழைப்பு என்று நான்கு வருடங்களுக்கு முன்பான பிழைப்புவாத சிந்தனையுடன் கேட்டேன்.
அவர் சொன்ன பதிலில் ஆடிப்போனேன்.
கொம்மூனிஸ் கட்சி அறிக்கையின் குறைப்பாடுகளைச் சுட்டிக் காட்டி நீண்ட பதிவுகள் அனுப்பினார்.
என்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக 'அட, அரசியலிலும் ஒழுங்கு பிடிக்கவும், சுய அறிவுடன் தொழிற்படவும் ஒருங்கே முடிகிறதே ' என்று முதல் முறை நினைத்துக் கொண்டேன்.
அங்கு தொடங்கிய பயணம், அவ்வப்போது தொய்ந்து, என்னை ஊக்கப்படுத்திய நிலாவினூடும் இழிவுபடுத்திய அடிப்படைவாதிகளினூடும் அடிபட்டு வளர்ந்து இன்று ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக உணர்கிறேன்.
என்னுடைய இயங்கியலை அதே இயங்கியல் வழி விளக்குவதாயின்
1, 2 இனால் நிலைமறுப்பின் நிலைமறுப்பாக சுற்றி ஓடிக் கொண்டு இருந்த நான் ஒரு இடத்தில் மூன்றாவது பரிமாணத்தை விளங்கிக் கொண்டு மேல் நோக்கி இயங்குகிறேன் (சுழல் ஏணி, சுருள்வில்) .
இந்த நிலைமறுப்பின் நிலைமறுப்பின் ஆதிக்கத்திலிருந்து தொடங்கிய பயணம் இந்த இயங்கியல் சட்டகத்தை வந்தடைகிற பொழுதில் நிலைப்பின் நிலைப்பு ஆதிக்கத்துக்கு வருகிறது.
அடுத்தகட்டமாக நான் இந்த நிலைப்பின் நிலைப்பில் இயங்கியாக வேண்டும். அதாவது என்னுடைய சட்டகத்தைக் காப்பற்ற உழைத்து அதைக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்க வேண்டும். உறுதிப்படுத்துவதன் உறுதிப்பாடாக அது இருந்திருக்கும்.
ஆனால் நான் என்னுடைய இயங்கியல் பலம் கொண்டு இயங்கியலின் திசையையே என் சிந்தனைத் தளத்தில் மாற்றியமைக்கிறேன்.
நான் மறுபடி நிலைமறுப்பின் நிலைமறுப்பாக இயங்கப் போகிறேன்.
இயங்கியலைப் புரிந்து கொண்டு இயக்கத்தை விட சிந்தனை உயர முடியும் என்கிற நம்பிக்கையை நான் தனிப்பட்ட சிந்தனையில் செய்து காட்டிவிட்டேன்.
இது ஆதி முரணற்ற இயக்கத்தை, புதிய முரணற்ற இயக்கமான சிந்தனை (இயங்கியல் சிந்தனை) வெல்லுகிற நிகழ்வாகும்.
சிந்தனை தொடரோட்டத்தில் புறவயப்படுவதால் என்னுடைய சிந்தனையில் நடந்தது இன்னொருவருடைய சிந்தனையிலும், சமூகத்தளத்திலும் நடக்க முடியும்.
அதாவது நான் செய்வதை இன்னொருவரும் செய்ய அதைப் புறவயப்படுத்திக் கொடுக்க முடிவதாய் இருக்க வேண்டும்.
இருக்கிறது என்பதை நிம்மதியுடன் சொல்லி விட்டு ஓய்வெடுக்கப் போகிறென்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home