Monday, March 5, 2018

எங்களுடைய ஆய்வு வேகத்தை இயங்கியல் வழி விளக்கல்


எங்களுக்கு எவரும் எந்தப் பண உதவியும் செய்வதில்லை. செலவீனம் மிகுந்த நாட்டில் பல மணிநேரம் கூலி அடிமையாய் உழைத்து கொஞ்சமாய் மிச்சம் பிடிக்கிற தனிப்பட்ட நேரத்தில் ஒரு பகுதியைத்தான் இந்த ஆய்வுக்கும் பயன்படுத்துகிறோம்.

அது மிக மெதுவாகவே நகரும்.

வாரத்தில் மூன்று நான்கு மணித்துளிகளே ஒதுக்க முடியும்.  காலம் என்பதை வரைவு பிடித்த முதல் தத்துவமாக இயங்கியல் இருக்கிறது. இயங்கியலாளர்களின் மூன்று-நான்கு மணித்துளிகள் 'வழமையான' மூன்று-நான்கு மணித்துளிகளை விடவும் மெதுவாக நகருகிறது. இப்போது நாம் இருக்கிற இயங்கியல் மட்டத்தில் இந்த வேறுபாடு மிகக் குறைவும் புறக்கணிக்கப்படத்தக்கதுமாகும். ஆனால் இயங்கியல் போக்கில் இது வெளிப்படையாகும்.

நாம் வலிந்து, தனிப்பட்ட வெளியைச் சுரண்டி இந்த (அதியுச்ச முக்கியத்துவமான) ஆய்வை மேற்கொள்ள முயலப்போவதில்லை.

இயங்கியல் வழியே அதை விளக்கவும் முடியும்.

இயங்கியல் பாலபாடத்துக்கு வருவோம்.

ஏன் கருத்துமுதல்வதம் கூடாதென்கிறோம்?

கருத்துமுதல்வாதம் என்பது சிந்தனையில் தொடங்கி சிந்தனையில் முடிந்து கொண்டிருக்கிற இயக்கச் சுழல்கள்.

[வழமையான ஹெகல், மார்க்சிய கருத்துமுதல், பொருள்முதல்களின் 'அனைத்துக்குமான' வெளி ஒவ்வொரு இயக்கச் சுழலுக்குமாக 'மட்டறுக்கப்பட்டன']

இவை புறத்தைக் கவனியாது. தனிமனித தளத்தில் சொன்னால் உணவு முதலிய புறத்தேவைகளைக் கவனியாமால் சிந்தித்துக் கொண்டே இருப்பது.  இது உடலைக் கெடுத்து, உடம்பைக் கொல்வதன் மூலம் தற்கொலை செய்து கொள்ளுகிற சிந்தனையாகும்.

[கார்ல் பொப்பரின் தத்துவங்களை இயங்கியல் கொண்டு மிக எளிதாக விளக்கவும் முடியும். மேற்படி பாலபாடத்தை அவரின் சகிப்புத்தன்மை, சகிப்பின்மை தத்துவத்துக்குப் பொருத்திப் பார்க்க ஊக்குவிக்கிறோம். ]

நாம் இயங்கியலைப் புறவயப்படுத்த நமது தனிப்பட்ட வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ள விழையக் கூடாது. அதுவும் ஒரு 'சிந்தனை' முறையைக் கொண்டுவர உடலையும், நாளாந்த வாழ்க்கையையும் நாசமாக்குவதாய் முடியும். கருத்துமுதல்வாதச் சுழல் அது.

தாம் உட்கார்ந்திருக்கிற கிளையை அடியோடு தறிக்கிறவைதான் கருத்துமுதல்வாதச் சுழல்களும்.


அகவயவாதிகளும், புறவயவாதிகளும் 
--------------------------------------------------------------------------

இதைத்தான் பல இலக்கியவாதிகள், பின்னவீனவாதிகளும் செய்து வருகிறார்கள். தமக்கான அகவயவெளி புறவயவெளியின் மீது ஏற்பட்டு வளர்வது என்பதைக் கவனியாமல் புற ஒழுங்கு தங்களது அகவயத்துக்குப் பாதிப்பு என்று தவறாகக் கருதிக் கொண்டு அதை அடிக்கிறார்கள்.

மறுதலையே உண்மை என்பதை நம் இயங்கியல் காட்டிவிட்டது.

புறவய வெளி தொடர்ந்து புறவயமடைந்து வர அகவயவெளி தொடர்ந்தும் அகவயமடைந்து வருவதை வெளிப்படுத்தி விட்டது.

ஆகையால் நீங்கள் அமர்ந்திருக்கிற கிளைகளின் நிலையை முழுமரம் சார்ந்து (இயக்கம்) புரிந்து கொள்ளுங்கள். அடிகளைத் தறிக்காதீர்கள்.

அதைப் போல புற ஒழுங்கு புறவய வெளிக்கே என்பதை வரைவு செய்து கொள்ளத் தெரியாமல் , அகவெயவெளிகளுக்குட் போய் 'ஒழுங்காக' இரு என்று அச்சுறுத்துவதைச் சில அடிப்படைவாதிகள் செய்து வருகிறார்கள்.

கிளைகள் ஒவ்வொன்றையும் தறித்து மரத்தை வளர்க்க முடியாது. அது மரமும் இல்லை. விரைவில் பட்டுப்போகப் போகிற நிலைக்குத்தான வெறுங் கட்டை. மரம் நெடிந்து வளர சில கிளைகளைத் தறிக்க வேண்டுந்தான், அது தேவையைப் பொறுத்து.

நீங்கள் இயற்கையில் செய்வது 'இயங்கியல்' வழியில் என்பதை உணருங்கள். முதலாளித்துவம் 'இயற்கை' என்பதில் பொய்யும் உண்மையும் உண்டு. எதிலும் சரியும், தவறும் உண்டு.

முரணற்ற இயக்கம் தவிர்ந்த மற்றைய எதுவும் தனக்கு எதிரானதையும் உருவாக்கும் என்பதை உணருங்கள்.

ஒரு பக்கத்தையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். எல்லாப் பக்கங்களையும் முடிந்த வரை பார்த்து குறிப்பான வெளிகளில் குறிப்பான முடிவெடுக்க வேண்டும்.

எல்லா வெளிகளுக்கும் பொதுவான முறைகளை, பொதுத்தன்மைகளைக் கண்டைந்து வளர்த்தெடுக்க வேண்டும்.  அதுவே வினைத்திறனான முடிவெடுத்தல் பயணம்.

புறம் --> அகம் --> புறம் என்கிற திருத்தமான இயங்கியல் சுழல்
-------------------------------------------------------------------------------------------------------

இயங்கியல் சுழல்கள் ஒவ்வொன்றும் (எமது பூச்சிய விதிப்படி) நடைமுறையிலிருந்து ஆரம்பித்து நடைமுறையிலேயே முடிந்தாக வேண்டும்.

சிந்தனை வலுக்க, அதாவது காலப்போக்கில் அகவயம் வலுக்க அது இவ்விதம் மாற்ற மடையும். ஆனாலும் முதலும் முடிவும் நடைமுறையாகவே இருக்க வேண்டும்

புறம் --> அகம்--> அகம்--> .... அகம்--> அகம்---> புறம்

இயங்கியல் பொருள்முதல்வாதம் புறம் --> அகம் ---> புறத்துடன் மட்டடைந்து தவறிழைக்கிறது.

எம்மால் 'முடிந்த' வேகத்திலேயே செல்ல முடியும். ஒரு கட்டத்தில் பாய்ச்சல் நிகழும். அது எமது தொழிநுட்பம் சார்ந்தது. தொழிநுட்பம் சார்ந்ததே 'அளவுமாற்றம்->பண்புமாற்றம்'.

அளவுமாற்றமென்பது நோக்கின் தொழிநுட்பம் சார்ந்த தோற்றப்பாடே. 

இயங்கியளாளர்களின் அக தொழிநுட்பம் முதலாளியம் கடந்து சோசலிசம் கடந்து நேரடியாக கொம்யூனிச/பொதுவுடமைக் கட்டத்தைப் பண்புமாற்றமாக அடைகிறது.

இயங்கியல் பொருள்முதல்வாதிகளின் பண்புமாற்றம் முதலாளியத்தில் அளவுமாற்றம், சோசலிசம், அதற்குள் அளவுமாற்றம், பிற்பாடு கொம்யூனிசப் பண்புமாற்றமாக இருக்கிறது.

முதலாளியவாதிகளுக்கு முதலாளியத்துக்குள்ளே அளவுமாற்றமே முடிவற்று நடந்து கொண்டிருக்கிறது.

அளவு மாற்றமென்பது 'அக தொழிநுட்பம்' சார்ந்த தோற்றப்பாடென்பதை விளங்கிக் கொள்ளுவோம்.

எங்களுடைய அறிவிப்பும், இயங்கியல் தொடர்பிலான நிலைப்பாடும்


நாம் அவசர அவசரமாக  'புதிய' இயங்கியல் (தத்துவத்தளத்தில் ஒரே ஒரு இயங்கியல்தான் உண்டு, தத்துவத்தளத்தில் இயங்கியலுக்கு அடைமொழிகள் இல்லை, விரைந்து போக்க வேண்டும்), விசயங்களைப்  தொடர்புபட்ட  பதிந்ததன் நோக்கு, பிற்போடாமல் இயங்கியலிலிருந்து அனைத்துக்குமான பொதுக் கோட்பாடு ஆக்கிற சாத்தியக் கூறு மிகப் பெரியதாகி விட்டதை அறிவிக்கவும் (நாம் இறந்து போனாலும் வேறு ஆராவது கையில் எடுத்துக் கொள்ளலாமே),

இந்த உண்மையை வேறு ஆராவது அறிந்து தமகேற்ப மட்டுப்படுத்தி வைத்து (ஹெகலியர்கள், மார்க்சியர்கள்  (அறியாமல்?) செய்தது போல) இந்த இயக்கத்தைப் பிற்போடாதிருக்கவும், இதைப் புரிந்து கொள்கிறவர்களுடன் நாம் சேர்ந்து வேலை செய்யவுமே.

விஞ்ஞான விரோத கருத்து, அதீத கற்பனை என்றெல்லாம் பதட்டமடைய வேண்டியதில்லை.

இந்த இயங்கியல் புறவயப்படுத்தினால் அன்றி பிரயோக வெளிக்கு வராதது.


நாம் பல தடவைகள் எழுதியது - இந்தப் புறவயத்தை மனித நோக்கு செய்து முடிக்கும் என்கிற எந்தக் கட்டாயமும் இல்லை. மனித நோக்குக்குக் கொம்யூனிசக் கட்டம் நிச்சயமானதும் இல்லை. அதற்காக நாம் வலிந்து முயலுகிறோம். அவ்வளவுதான். 

இந்த இயங்கியலே அனைத்துவித நோக்குக்குமான கடைசி தத்துவம். The first perpetual philosophy and thus (<=>) the philosophy of super-intelligence.

இதையும் தாண்டிப்போக வேண்டுமானால் பூச்சிய விதியை, அல்லது இயங்கியல் தர்க்கத்தை உடைக்க வேண்டும்.

பூச்சிய விதியின் எல்லைக்கு அப்பால் முழு மாயையையும் (Solipsism), பிரக்ஞை அடிப்படையிலான கோட்பாடுகளும்  (Consciousness), கர்மாவும் (Karma),  பொய்த்தோற்றமுந்தான் (Simulation), யோகி விஞ்ஞானமும் (Yogic Science) தான் இருக்கின்றன.


இது வரையிலான விஞ்ஞான திசையில் மேற்சொன்னவை இல்லை. இனி இருக்க முடியாதென்பதில்லை. இருந்தால் மனித (நோக்கு) முயற்சியின் முக்கிய அடிப்படை - Free Will உடையும்.
மிக நெடுங்கால மனித முயற்சி (நோக்கு முயற்சி) அர்த்தமற்றுப் போகும்.

இவை ஒவ்வொரு மட்டத்திலான விஞ்ஞான விரோத நிலைகளாகும். விஞ்ஞான அணுகுமுறையே தவறு என்று ஏற்பட்டால் ஒழிய (புதிய இயங்கியலின் பூச்சிய விதி உடைந்தால் ஒழிய) இவையெல்லாம் முழுச் சரியாக முடியாது.

பூச்சிய விதி உள்ளார்ந்தமாகப் பல அடிப்படைகளால் நெய்யப்பட்டிருப்பது. பல அடிப்படைகளுக்கான வெளியை உருவாக்கிக் கொண்டிருப்பது. சாத்தியக் கூறு, தன்னிச்சை வெளி, நியதிவாத மறுப்பு, விதிவசவாத மறுப்பு இவற்றையெல்லாம் கொண்டியங்குவது.
மார்க்சியத்தை மீறிச் சென்றது (தகர்த்தது, உடைத்தது, தோற்கடித்தது, பின் தள்ளியது என எல்லாவற்றினதும் இயக்கம் மீறிச்சென்று பெருவெளியை உருவாக்குவதே), மார்க்சியத்தைக் 'காப்பாற்றவே'.

கருத்துமுதல் இயங்கியல், பொருள்முதல் இயங்கியல் மீறிச் செல்லப்பட்டன.

எல்லாவித தத்துவங்களையும் உள்ளிணைத்துக்கொண்டு, எல்லாவித விஞ்ஞானங்களையும் உள்ளிணைத்துக் கொண்டு அதியுச்ச வேகத்தில் நகருகிற முதல் நிரந்தர இயக்கத் தத்துவம் வந்து விட்டது.


இது வரையிலுமிருந்த முறைகள், முடிவுகள் அனைத்தும் பின்னடைந்தன. அதாவது முந்திச் செல்லப்பட்டன.

எவ்வளவு சுத்தினாலும், கடைசியில் நோக்குக்கான தன்னிச்சை வெளி (free-will) இருப்பதற்கான, அதைத் தொடர்ந்து தன்னிச்சையாக அதிகரிப்பதற்கான கடைசித் தத்துவவெளியாக இந்த இயங்கியல் இருக்கிறது. This is not Reductio ad absurdum. Just pointing out the consequences and thus any better philosophy (compared to dialectics) must consider these. 

 மாற்று மெய்ம்மை/எதார்த்த (Alternative Realities) வெளிகள் விஞ்ஞான விரோதமானவை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நமக்குப் புலனாவதே, நமக்குத் தோற்றுகிற அளவே, நமக்கு விளங்குவதே அனைவருக்குமானது என்கிற தவறான சிந்தனை வேண்டாம்.

இந்த வேறுபாடுகள் இயல்பானவை. இயக்கம் சார்ந்தவை. ஆனால் இச் சார்பு நிலையை விஞ்ஞான பூர்வமாக அணுகமுடியும். சார்பு இயக்கங்களைப் புரிந்து கொள்வதனூடு அவற்றைப் புறவயப்படுத்துகிறோம் (இயங்கியல் வழி புரிதல், கணித, விஞ்ஞான வழி புறவயப்படுத்தல் - இரண்டும் மறுபடி இயங்கியலாகவே ஒடுங்கும்).

சார்புக் கோட்பாடுகள் வந்த பொழுது முழு புறவய எதார்த்தம் (அனைவருக்கும், அனைத்துக்கும் பொதுவான புறநிலை எதார்த்தம்) என்கிற மார்க்சிய நிலைப்பாட்டை உடைத்துவிட்டதாக பல எதிர்ப்புக்கள், புத்தங்கள் வெளியாயின. இன்னுமும் அப்படியான புத்தகங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன்.

இது இயங்கியலிலிருந்து மார்க்சியத்தை (மார்க்ஸ் முதலானவர்களின் முறை மற்றும் முடிவுகள்) அணுகாமல் மறுதலையாக அணுகியதால் வந்த விளக்கக்கேடும் அடிப்படைவாதமுமே.

இப்போது மார்க்சியம் முழுவதுமாக மீறிச் செல்லப்பட்டிருக்கிறது.

இதை அறிவித்த பின்னரும் கூட மறுபடி மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ என மேற்கோள்கள் காட்டி 'ஆதாரங்களை' முன்வைப்பது மிக மேலோட்டமான சிந்தனை.

இயங்கியலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

இது வரையிலான மார்க்சியர்கள் இயங்கியலை முறியடித்து வந்தார்கள். இன்னாரின் இயங்கியல் என்று சொல்லுவதில் எனக்கு உடன்பாடில்லை.

இயங்கியலின் படி புறவயம் தொடர்ந்து புறவயப்பட்டும், அகவயம் தொடர்ந்து அகவயப்பட்டுமே இயங்கும்.  எளிமையாகச் சொன்னால் புறவயவெளி பல மொழி ---> ஒரு பொருள் திசையிலும் அகவயவெளி ஒரு மொழி ---> பல பொருள் திசையிலும் தொடர்ந்து நகரும்.

மார்க்சிய இயங்கியல், பொருள்முதல் இயங்கியல், இயங்கியல் பொருள்முதல்வாதம், மாவோவின் இயங்கியல், லெனினின் இயங்கியல் இவை எல்லாவற்றினதும் அடிப்படை இயக்கம் ஏறக்குறைய ஒன்றுதான். அது பருப்பொருள் என்கிற சாரா மாறியிலிருந்து கருத்து என்கிற சார் மாறிக்கு வந்தடைவது.

இயங்கியலில் சாரா மாறி  (independent variable) என்பது கிடையாது.

ஹெகலியர்கள், மார்க்சியர்கள் இற்றைத் தேதி வரையில் பயன்படுத்துகிற முக்கூற்று ஏரணம் ஒரு உள்ளார்ந்த எடுகோளை முன்வைக்கிறது. அது இயங்கியலை 'முடிவற்றதாக்குகிறது'.  அந்த முன்வைப்பைப் புரிந்து கொண்டு அந்த எடுகோளை நீக்கும் விதமாக, ஆனால் தவறான முடிவாக ஹெகல், மார்க்ஸால் இணைக்கப்பட்டதே கருத்தும், பருப்பொருளும்.

இது இயங்கியலை முறித்து வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது.

1. முக்கூற்று ஏரணத்திலிருக்கிற, அதை முடிவற்றதாக்குகிற, அதி உள்ளார்ந்த (ஆனால் மிக வெளிப்படையான) அந்த எடுகோள் என்ன?

2. அதை நாம் எவ்வாறு இயங்கியலைக் கொண்டே "புதிய" இயங்கியலில் (இதுதான் ஒரே இயங்கியல்) திருத்தியமைத்தோம்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடையளிக்க முயன்றால் உங்களுக்கு இயங்கியல் பிடிபட்டுவிட்டது. 

இதற்கு விடையளிப்பதனூடே (அதற்கு மிக முயல்வதன் ஊடே), பருப்பொருள், கருத்து முதல் முடிவுகள் ஏன் தவறானவை என்பதையும் இயங்கியல் பொருள்முதல்வாதம், மார்க்சியம் ஏன் சிந்தனைவெளியில்  முழுவதுமாகப் பின் தள்ளப்பட்டது (முழுமையாகத் தகர்ந்தது) என்பதையும் புரிந்து கொள்வீர்கள். 

இந்த இயங்கியல் மிக மிக மிக முக்கியமானது.

அதனால் மட்டுந்தான் இது வரையில் 'tag' செய்யாதிருந்த நாங்கள் பலரை 'tag' செய்தோம்.

இந்த இயங்கியல் அனைவருக்குமானது. இதிலிருந்து வருகிற முடிவுகள், திட்டவட்டங்கள், சூத்திரங்கள் எவையும் காப்புரிமைக்குக் கீழே போய்விடக் கூடாது. அவையெல்லாம் அனைவருக்கும் பொதுவானதாய் இருக்க இது பற்றிய விழிப்புணர்வு முன்கூட்டியே வருதல் அவசியம்.


விழிப்புணர்வற்ற நிலையில், சமன்பாடுகள் (இடைநிலை) தவறாகப் பயன்படுத்தப்பட்டு, மறுபடி பொதுவுடமைக் கட்டம் பின்னடையலாம்

இப்போது இயங்கியல் அருஞ்சொற்கள், வரிப்படங்கள், அசைபடங்கள், கணித விளக்கங்கள் இவற்றை மெல்ல மெல்ல செய்து வருகிறோம்.

இந்த இயங்கியலை உடைப்பதற்கு நாங்கள் எடுக்கிற, எடுத்த முயற்சிகளையும் பதிவேற்றுகிறோம். எங்களால் முடியாததை, நாங்கள் தவற விட்டதை இன்னொருவர் செய்ய முடியும். 

எமது 80%க்கும் அதிகமான எழுத்து வேலைத்தள நேரத்தை மிக முயன்று மிச்சம் பிடித்து எழுதப்பட்டது.

எமக்கு முடிந்ததையே நாம் விதித்துக் கொள்ளுகிறோம். எமக்கு முடிந்த அதியுச்ச நிலையைத் தேடியறிவதே இயங்கியல். அதைத் தாண்டிப்போகதிருப்பதுவும் இயங்கியலே.

எமது தனிப்பட்ட வெளியைச் சுரண்டி பொதுவேலை செய்வது இயங்கியலுக்கு விரோதமானது. அதை மெதுவாகத்தான் பேண்தகு வழியில் குறைக்கவேண்டுமே தவிர, அடியோடு நிறுத்துகிறேன், இந்தா பாய்கிறேன் என்று முடிவெடுப்பதும் இயங்கியல் விரோதமே. அளவு மாற்றம் என்பது தோற்றப்பாடு. எல்லாமும் பண்புமாற்றமே.

இந்த ஆய்வை விரைவுபடுத்த இயங்கியலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதொன்றே வழி. ஒரு சில தனிநபர்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது. இது கூட்டுமுயற்சி.

எம் பதிவுகள் அதற்கானவை. முதற்கட்ட இயங்கியலாளர்களாக நாம் திரள விரும்புகிறோம். நாம் இணைத்துக் கொள்ளப்போவதில்லை. நாம் அதில் இணைவோம்.

அனைவருக்கும் பொதுவானதாய் நாம் அறிவித்த இயங்கியலை உடைக்கிற, வளர்க்கிற கடமை இதை விளங்கிக் கொள்ளுகிற சிந்தனை மட்டங்களுக்கு வந்து சேர்கிர அனைவருக்குமானது. 

Nila & Kana
06/03/2018

Last Updated
10/03/2018
12:23 PM SGT


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home