Friday, March 9, 2018

இயங்கியல் புரிதலை உறுதிப்படுத்த இரு எளிமையான கேள்விகள்

புதிய (அதி திருத்தமான) இயங்கியல்  தொடர்பான அனைவருக்குமான இறுதிப் பதிவு. எனி கணினி, கணித வெளிகளுக்குள் இட்டுச் செல்லவும், புத்தகங்களாகக் கொண்டு வரவுமே செயற்படுவோம். மிகப் பொறுமையாக எங்களது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுரண்டாதே அதை நாம் செய்வோம். 

சென்ற வார எங்களுடைய ஆய்வு வேகத்தை இயங்கியல் வழி விளக்கல் பதிவிலிருக்கிற மிக முக்கிய பகுதி. தனியாக்கி ஓரிரு விசயங்களை மேலும் சேர்த்திருக்கிறோம். 

நமக்குப் புலனாவதே, நமக்குத் தோற்றுகிற அளவே, நமக்கு விளங்குவதே அனைவருக்குமானது என்கிற தவறான சிந்தனை வேண்டாம்.

இந்த வேறுபாடுகள் இயல்பானவை. இயக்கம் சார்ந்தவை. ஆனால் இச் சார்பு நிலையை விஞ்ஞான பூர்வமாக அணுகமுடியும். சார்பு இயக்கங்களைப் புரிந்து கொள்வதனூடு அவற்றைப் புறவயப்படுத்துகிறோம் (இயங்கியல் வழி புரிதல், கணித, விஞ்ஞான வழி புறவயப்படுத்தல் - இரண்டும் மறுபடி இயங்கியலாகவே ஒடுங்கும்).

சார்புக் கோட்பாடுகள் (Special Theory of Relativity and later the General Theory of Relativity) வந்த பொழுது முழு புறவய எதார்த்தம் (அனைவருக்கும், அனைத்துக்கும் பொதுவான புறநிலை எதார்த்தம்) என்கிற மார்க்சிய நிலைப்பாட்டை உடைத்துவிட்டதாக பல எதிர்ப்புக்கள், புத்தகங்கள்  வெளியாயின. இன்னுமும் அப்படியான புத்தகங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன்.

இது இயங்கியலிலிருந்து மார்க்சியத்தை (மார்க்ஸ் முதலானவர்களின் முறை மற்றும் முடிவுகள்) அணுகாமல் மறுதலையாக அணுகியதால் வந்த விளக்கக்கேடும் அடிப்படைவாதமுமே.

தத்துவத்தளத்தில்/சிந்தனை வெளியில்  இப்போது மார்க்சியம் முழுவதுமாக மீறிச் செல்லப்பட்டிருக்கிறது.

இதை அறிவித்த பின்னரும் கூட மறுபடி மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ என மேற்கோள்கள் காட்டி 'ஆதாரங்களை' முன்வைப்பது மிக மேலோட்டமான சிந்தனை.

இயங்கியலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

இது வரையிலான மார்க்சியர்கள் இயங்கியலை முறியடித்து வந்தார்கள். "இன்னாரின் இயங்கியல்" என்று சொல்லுவதில் எமக்கு உடன்பாடில்லை.

அடைமொழியினூடு இயங்கியல் அடையாளப்படாதது. 

இயங்கியலின் படி புறவயம் தொடர்ந்து புறவயப்பட்டும், அகவயம் தொடர்ந்து அகவயப்பட்டுமே இயங்கும்.  எளிமையாகச் சொன்னால் புறவயவெளி பல மொழி ---> ஒரு பொருள் திசையிலும் அகவயவெளி ஒரு மொழி ---> பல பொருள் திசையிலும் தொடர்ந்து நகரும்.

என்ன அடைமொழியோடு, எப்படிச் சொன்னாலும் இயக்கத்தைப் புரிந்து கொண்டு சொன்னால் அது சரியானதே (பல மொழி ---> ஒரு பொருள் (ஒரே இயக்க வரைவு)) 

மார்க்சிய இயங்கியல், பொருள்முதல் இயங்கியல், இயங்கியல் பொருள்முதல்வாதம், மாவோவின் இயங்கியல், லெனினின் இயங்கியல் இவை எல்லாவற்றினதும் அடிப்படை இயக்கம் ஏறக்குறைய ஒன்றுதான்.

அது பருப்பொருள் என்கிற சாரா மாறியிலிருந்து கருத்து என்கிற சார் மாறிக்கு வந்தடைவது.

இயங்கியலில் சாரா மாறி  (independent variable) என்பது கிடையாது.

ஹெகலியர்கள், மார்க்சியர்கள் இற்றைத் தேதி வரையில் பயன்படுத்துகிற முக்கூற்று ஏரணம் ஒரு உள்ளார்ந்த எடுகோளை முன்வைக்கிறது. அது இயங்கியலை 'முடிவற்றதாக்குகிறது'.  அந்த முன்வைப்பைப் புரிந்து கொண்டு அந்த எடுகோளை நீக்கும் விதமாக, ஆனால் தவறான முடிவாக ஹெகல், மார்க்ஸால் இணைக்கப்பட்டதே கருத்தும், பருப்பொருளும்.

இது இயங்கியலை முறித்து வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது.

1. முக்கூற்று ஏரணத்திலிருக்கிற (Dialectical Triad, Not Syllogism, The correct term might be 'இயங்கியல் மும்மை/முக்கூற்று ', முக்கூற்று ஏரணம் அரிஸ்டோடிலின் Syllogism'க்கு வழக்கத்தில் இருக்கிறது ), அதை முடிவற்றதாக்குகிற, அதி உள்ளார்ந்த (ஆனால் மிக வெளிப்படையான) அந்த எடுகோள் என்ன?

2. அதை நாம் எவ்வாறு இயங்கியலைக் கொண்டே "புதிய" இயங்கியலில் (இதுதான் ஒரே இயங்கியல்) திருத்தியமைத்தோம்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடையளிக்க முயன்றால் உங்களுக்கு இயங்கியல் பிடிபட்டுவிட்டது. 

இதற்கு விடையளிப்பதனூடே (அதற்கு மிக முயல்வதன் ஊடே), பருப்பொருள், கருத்து முதல் முடிவுகள் ஏன் தவறானவை என்பதையும் இயங்கியல் பொருள்முதல்வாதம், மார்க்சியம் ஏன் சிந்தனைவெளியில்  முழுவதுமாகப் பின் தள்ளப்பட்டது (முழுமையாகத் தகர்ந்தது) என்பதையும் புரிந்து கொள்வீர்கள். 

இந்த இயங்கியல் மிக மிக மிக முக்கியமானது.

அதனால் மட்டுந்தான் இது வரையில் 'tag' செய்யாதிருந்த நாங்கள் பலரை 'tag' செய்தோம்.

இந்த இயங்கியல் அனைவருக்குமானது. இதிலிருந்து வருகிற முடிவுகள், திட்டவட்டங்கள், சூத்திரங்கள் எவையும் காப்புரிமைக்குக் கீழே போய்விடக் கூடாது. அவையெல்லாம் அனைவருக்கும் பொதுவானதாய் இருக்க இது பற்றிய விழிப்புணர்வு முன்கூட்டியே வருதல் அவசியம்.

Nila & Kana
10/03/2018
12:23 PM SGT


பிற்சேர்க்கை: ஏற்கனவே  பல தடவைகள் எழுதிய விடயமே. எந்த ஆழமான ஆய்வையும் மேற்கொள்கிற பொழுது உங்களுக்கு இருக்கிற சிந்தனைச் சட்டகத்தைக் கண்காணித்து தொடர்ந்து முன்னேற்றுங்கள். இவ்வகையில் புரிதல்/கற்றல் வேகம் நேரடுக்குகளில் நிகழும்.


11/03/2018
13.04 SGT

மூன்றாவது மிக எளிய கேள்வி. 

அளவு மாற்றம் ---> பண்பு மாற்றம் என்கிற மார்க்சிய (தவறான) இயங்கியல் வாய்ப்பாட்டை புதிய (சரியான) இயங்கியல் உடைத்து விட்டது. 

கேள்வி: பழைய, மார்க்சியர்களின் (தவறான) இயங்கியலைக் கொண்டு அளவு மாற்றம் பண்பு மாற்றமானது எப்படி என விளக்குக? அதாவது கால மாற்றமின்றி பண்பு சடுதியாய் மாறியது எப்படி என்பதை விளக்குக. 

புதிய இயங்கியல் மிகத் தெளிவாக விளக்கி விட்டது. 

-Nila

2 Comments:

At March 9, 2018 at 9:05 PM , Blogger Nila Loganathan said...

Tholar Velan
//முழுமையான ஆய்வு எனது கட்டுரையில் உள்ளது.

நாம் தங்களின் எழுத்தை வாசிக்காது விமர்சிக்கவில்லை. முடிந்தால் எனது எழுத்தை வாசித்து விமர்சியுங்கள்.//
//

//நல்லது வாசிக்காமலே கற்றுக் கொள்ள முடியும் என்பதை உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன் நன்றிகள்.//

Kanarupan Kularatnarajah

'முழுமை', முழுமையாக வாசித்தல் இதெல்லாம் இயங்கியல் வழிமுறைகள் அல்ல.

இயங்கியல் தளத்தில் ஏறாமல் இந்த அதி திருத்தமான (அதாவது முதலில் சரியாக வரைவுபட்ட ஒரே) இயங்கியலை புரிந்து கொள்ள முடியாது.

எம்முடைய கடைசிப் பதிவிலான (மிக எளிய) கேள்விகளுக்கு மிக நேரடியான ஒற்றைவாக்கியப் பதில் அளிக்கிற வரையில் உரையாட மாட்டோம். வார இறுதி விடுப்பு வேறு.
Sorry, 'reading' and comprehending are two different things. You haven't comprehended. Can only continue this discourse if and only if you could answer those questions in the shortest manner possible. 3,4 words each? Or prove those questions are invalid.

வேலன் தோழர் நீங்கள் எதையும் வாசிக்காமல் மறுப்பு எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் முதல் பத்திகளிலேயே கண்டு கொண்டேன்.

கேள்விகளுக்குப் பதில் தந்தால் மட்டும் உரையாடலாம். அல்லது வேண்டாம். வேண்டியளவுக்கு மேலதிகமாகவே 'புதிய' இயங்கியல் அடிப்படைகள் பற்றி எழுதியாகிவிட்டது.

இப்போது அதை முடிந்தவரையில் புறவயப்படுத்துகிற, கணினி, கணித வெளிகளுக்குள் நகர்த்துகிற வேலையில் இருக்கிறோம்.

தனிப்பட்ட வெளியைச் சுரண்டுவதில்லை என்று முடிவெடுத்திருப்பதால், வார இறுதி விடுப்பு தினங்களில் அவசரத்துக்கன்றி, நீண்ட நிதான உரையாடல்கள், வாசிப்பைச் செய்வதில்லை (குறைத்துக் கொண்டிருக்கிறோம்).

நீங்கள் கேள்விகளுக்குக் குறிப்பான ஒற்றை வாக்கியப் பதில் அளிக்கிற வரையில் உரையாடலைத் தொடர்வதற்கில்லை.

 
At March 9, 2018 at 10:30 PM , Blogger வேலன் said...

http://xn--velan-68n6cxa6nmc.blogspot.fr/2018/03/blog-post.html

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home