Tuesday, November 27, 2018

பல வழிகளில் பதிலை வந்தடையலாம்.

நிலைப்பின் நிலைப்பு - இது தன்னை மறுத்து இயங்குகிற இயக்கம் அல்ல.

நிலை மறுப்பின் நிலை மறுப்பு இயக்கத்தைபி





என்னுடைய துணை நிலாவின் விளக்கம் இது. சுருக்கமான, எனக்கு உவப்பானது இற்றைத் தேதியில் இதுதான்.


இயங்கியல் பொருள்முதலின் இயக்க வரிப்படம் இருபரிமாண சுருளி வில். ஸ்பிரல்.

ஆனால் இயங்கியல் காட்டும் வரிப்படம் ஒரு முப்பரிமாண சுருளிவில், ஒரு சுழல் ஏணி. Hஎலிக்ஷ்.

இம் மேலதிக பரிமாணம் நிலைமறுப்பின் நிலைமறுப்பாக இல்லை. அதாவது தொடர்ந்து வளைவடைகிற இருபரிமாண ச்பிரல் அல்ல.

இது திசைப்பட்டதாக, தனக்குள் முரணின்றி இருக்கிறது. எல்லாவித அடையாளங்களும் முரண் நிலைகளை உருவாக்கும். ஆனால் அம் முரண் நிலைகளை எதிரி நிலைகள் அன்டகொனிச்டிc ஆக்காத இயக்கத்தை, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உத்தியை நிலைப்பின் நிலைப்பு கொண்டிருக்கிறது.

இயங்கியல் பொருள்முதலில் கட்டமைந்த மார்க்சிய ஆய்வும் முடிவும் (உடல் அன்ட்/ஒர் மனதளவில்) நலிந்த மக்களை ஒடுக்கு முறைக்கு எதிராகத் திரட்டியது. ஆனால் அடிப்படைகள் அரைத் திருத்தமாக இருந்ததனால் ஆரம்பித்த போராட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் வழிமுறை மார்க்சியத்துக்கு வாய்க்காது. தற்காலிக வெற்றிகளும் மீளும் முதலாளித்துவமும் அதன் போக்காயிருக்கும்.   ஒரு கட்டத்தில் நிலைத்த வெற்றி கிட்டும். அது எத்தனையாவது வெற்றி? எப்போது? பத்து, நூறு, ஆயிரம் வருடங்கள்? அதி விரைவு படுத்த என்ன செய்யலாம்?

இவை மார்க்சிய ஆய்வுக்கு எட்டாத கேள்விகள்.

இந்த பிரச்சினை ஏங்கல்சின் விதிகளில் இருந்தே ஆரம்பிக்கிறது. அளவு மாற்றம் எவ்விதம், எப்போது, எங்கனம் நேர மாற்றமின்றி அளவு பண்பாக மாறுகிறது என்பதை விளக்குந் திறன் இயங்கியல் பொருள்முதல்வாத விதிகளுக்குக் கிடையாது. உண்மையை மறைக்கிற பிற்போக்குத்தனம் இயங்கியல் பொருள்முதல்வாதத்தில் மிச்சம் இருப்பதால் அது சில சூழமைவுகளில் அதி திருத்தமாகவும் பல சூழமைவுகளில் திருத்தமற்றதாகவும் இருக்கிறது.


-Nila

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home