Friday, March 2, 2018

மார்க்சியத்தை முழுவதுமாகத் தகர்ப்பதனூடு சோசலிசத்தை வந்தடைதல் (அதை விரைவுபடுத்தல்)

நிலைப்பின் நிலைப்பு அடிப்படையில் அண்டம் இயங்குவதைப் புரிந்து கொள்வதிலிருந்து அண்ட இயக்கம் சார்பாக சமூக வெளியிலான (அது நிலைமறுப்பின் நிலைமறுப்பில் ஆரம்பித்து நிலைப்பின் நிலைப்பாகிற இயக்கம்)  அடித்தளம்<----> மேற்கட்டுமான சார்பியக்கத்தைப் புறவயப்படுத்தமுடிகிறது.

சமூக வெளியிலான பண்புமாற்றங்களை எதிர்வுகூறவே மார்க்சிய இயங்கியலுக்கு முடியும்.

ஆனால் என்னுடைய இயங்கியலுக்கு எதிர்வுகூற மட்டுமல்ல, எவ்விதம் விஞ்ஞானபூர்வமாக அணுகுவது என்பது பற்றியும் தெரியும்.

சுருங்கச் சொன்னால் மனித வரலாற்றுக் கட்டத்தைப் பெருந்தரவு ஆய்வு செய்து சோசலிசக் கட்டத்தின் காலத்தை (அதன் திருத்தச் சாத்தியக் கூறுடன்) துணிய முடியும்.

மார்க்சியமோ, மார்க்சிய இயங்கியல் முடிவுகளோ விஞ்ஞானம் அல்ல.

இதைப் புரிந்து கொள்ள முடிகிறவர்கள் இயக்கத்தின் இயக்கத்தைப் புரிந்து கொண்டு ஆட்டத்தை ஆரம்பிக்கலாம். 

என்னுடைய இயங்கியல் 'அழிவுக்கான' உள்ளார்ந்த முன்னைப்பைக் கொண்டிராதது. ஆக்க முனைப்பையே கொண்டது. அதாவது ஆக்குவதற்காக மட்டுமே அழிக்கக் கூடியதும், ஆக்கத்திலிருந்து முடிந்தவரை ஆக்கத்தை எடுத்துக் கொள்வதுமானது.

அதனால் இது 'மார்க்சிய இயங்கியலின்' வழி நடந்த போலி விஞ்ஞானத்தால் நியாயப்படுத்தப்பட்ட அழிவுகளை என்னுடைய தத்துவம் ஏற்படுத்தாது. 

அதைத் தவறாகப் புரிந்து கொண்டர்கள் மட்டுமே அழிவுக்காக உபயோகிப்பார்கள். அதற்குத்  தத்துவம் பொறுப்பாகாது. 

அதை விளக்கி எழுத முடிவெடுத்திருந்தேன். வேண்டியதில்லை. தேவையான புறவயம் வந்து விட்டது. கணினிக்குத் தெரிகிற வழியும் வந்து விட்டது. 


மார்க்சியம் தகர்ந்து விட்டது மானுட விடுதலைக்கான தோழர்களே. 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home