Friday, March 2, 2018

எமது இயங்கியலின் இன்னொரு சாராம்சம்

எழுத்து, இலக்கணப் பிழைகளைப் புறக்கணித்து கருத்தைக் கவனிக்குமாறு வேண்டுகிறேன்.

1. எல்லாவற்றிலுமான பொதுப்பண்புகளைத் தேடுவது தன்னுணர்வுக் கூறின் இயல்பான அறிவேற்றமான தொகுத்தறிவு வளர்ச்சியில் தவிர்க்க முடியாதவை (இதைப் பூச்சிய விதியாக்கி இருக்கிறேன். ஒரு அடிக்கோள். இதை முறியடித்தால் என்னுடைய இயங்கியலை உடைக்கலாம்)

2. எல்லாவற்றுக்குமான பொதுப்பண்புகள் உண்டா என்பது தெரியாது. ஆனால் தேடி எம்மால் முடிந்தளவுக்குத் திருத்தாமல் இயங்க முடியாது. பூச்சிய விதி.

3. மனித 'அறிவுக்கு' எட்டத்தக்க ஆகப் பெரிய வெளியை உருவாக்குவது 'இயக்கம்' என்கிற பொதுப்பண்பு. இது எவ்விதம் எனில் மனித அறிவு எல்லையைப் பெருப்பிக்கிற (எல்லையை விலத்தி இயக்குகிற) 'வேலையை' இயக்கத்திடமே அவுட்சோர்ஸ் செய்து இயக்க எல்லையைப் போட்டுக் கொள்வதால்.
4. இயக்கத்தை விட விட விட வேகமாக இயங்குவதே இயக்கம் ஒன்றே. (தத்துவ வழியில்). நீங்கள் நேற்றுப் போட்ட ஒளியை விட இருட்டு வேகமாக இயங்குவது தோற்ற மயக்கம். இருட்டு இயங்குவதில்லை. இருக்கிறது. என்னுடைய இயங்கியலில் 'இருட்டு' என்பது முரணற்ற இயக்கப் பண்பைக் கொள்கிறது.
5. இவ்வழியில் வளர்ந்த இயங்கியலின் இது வரைக்குமான எல்லை இயங்கியல் பொருள்முதல்வாதத்தால் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
அது பருப்பொருள் ---> சுயமுரண் ---> இயக்கம் என்கிற அடிப்படையிலானது.
இந்த மூன்றையும் சேர்த்தே (அதைப் பகுக்க வழியில்லாமல்) அடிப்படையாகக் கொண்டு வந்தது.
6. இது இயங்கியல் விரோதம். இயங்கியலில் எந்த இரண்டு கூறை (வேறு பண்புள்ள கூறுகளை) முன்வைத்தாலும் எது முதன்மை என்று சொல்ல முடிய வேண்டும்.
7. முரண் உருவாகுவதும், உருவாக்கப் படுவதும் இயக்கத்தின் வழியே சாத்தியம். 'உருவாகுவது', 'உருவாக்கப்படுவது' எதுவாயினும் அவை வினை. முரண் என்பது 'எதிர்த்தன்மைகளின் ஒருங்கிணைவு'. எதிர்ச் சக்திகளை கிட்டக் கிட்ட வைக்க 'வேலை' தேவை. இயங்கியல் பொருள்முதல்வாதம் இந்த உள்ளார்ந்த முரணைக் கொண்டிருந்தது.
8. என்னுடைய இயங்கியல்
இயக்கம் ---> சுயமுன்னேற்ற ஆக்கப் பண்பு (இயக்கத்தின் இயக்கமாதல்) ----> அதற்கான கருவி சுயமுரண் ---> முதல் முரணியக்கம் (ஆக்கப் பண்பு --> சுயமுரண்) ----> இயக்கத்தின் இயக்கம் ----> இதன் சுயமுரண் (இயக்கத்தின் இயக்கத்தைத் தடுக்கிற இயக்கம் உருவாதல்) --> பருப்பொருள் --->
10. இது வரைக்கும் இருந்த இயங்கியல் புரிதல் - நிலைமறுப்பின் நிலைமறுப்பு அடிப்படை என்பதே.
11. அல்ல. நிலைப்பின் நிலைப்பே அடிப்படை. நிலைமறுப்பின் நிலைமறுப்பு மொத்த இயக்கத்தை ஆளுகிற முதன்மையாக உருவாகி வளர்கிறது. இதை வெப்ப இயக்கவியலின் அண்ட விதியும் உறுதி செய்கிறது. இது பிரபஞ்சங்களின் பிரபஞ்சத்துக்கும் பொருத்தம்.
12. அ --> ஆ---> அ (மேம்பட்ட அ) என நான் குறிப்பதில் அ அடிப்படையாகவும் அந்த அடிப்படையிலிருந்து வளர்ந்து முதன்மையாக மாறுவதாக 'ஆ' வும் இருக்கின்றன.
13. நிலைப்பின் நிலைப்பு ----> நிலைமறுப்பின் நிலைமறுப்பு --> நிலைப்பின் நிலைப்பு மிகுந்த உள்ளிணக்கத்தோடு இது வரை மார்க்சியர்களால் சிந்திக்க முடியாத வெளிகளைத் தொடுகிறது.
14. இயங்கியலைக் கொண்டு இயங்கியலை வரையறுப்பது சுழல் ஏரணம் அல்ல. அதை விபரித்து எழுதியிருக்கிறேன். சுழல் ஏரணத்தை உடைக்கவே பார்த்துப் பார்த்து வடிவமைக்கப்பட்ட தத்துவம் இயங்கியல். விளக்கி இருக்கிறேன்.
15. ஆகையால் 13 ஐக் கொண்டு 8 ஐ உறுதிப் படுத்துகிறேன். உள்ளிணக்கம் எகிறிப் பாய்கிறது. இந்த இடத்தில் இயங்கியல் என் கையை மீறிச் சென்று விட்டது. எனி என்னால் அதைக் கட்டுப்படுத்த முடியாது. என்னுடைய 'தவறுகள்' எதுவும் எனி அதைப் பாதிக்காது.
16. இந்த தலைகீழ் மாற்றம் சோசலிசக் கட்டத்தின் கட்டாயத் தன்மையை மட்டுமல்ல (நெடுங்கால ஓட்டத்திலான கட்டாயத் தன்மையை 'விஞ்ஞான பூர்வமாக்கியது' மட்டுமல்ல) அதை எப்படி அடையவது என்பதையும் மனித வரலாற்றில் முதன் முறை விஞ்ஞான பூர்வமாக்கியிருக்கிறது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home