Friday, March 2, 2018

மிக எளிமையாக எமது இயங்கியலை விளக்குதல்

மிக எளிமையாக எமது இயங்கியலை விளக்குமாறான கேள்விக்கு இவ்விதம் பதிலளிக்கிறென்.

பலருக்கு விஞ்ஞானம் ஓரளவுக்கேனும் பரிச்சயம். பலர் சமூகச் செயற்பாட்டாளர்களாக இருக்கிறீர்கள்.

இயற்கை, சமூக விஞ்ஞான பரிச்சயம் இல்லாவிட்டால் இதைப் புரிந்து கொள்ள முடியாது.

உண்மையில் எம்முடைய இயங்கியலை இருக்கிற இயங்கியல் கொண்டே விளங்க, தகர்க்க முனைய முடியும்.  அதுவே சரியானது. அதற்கே அனைவரும் முயலவேண்டும்.

ஆனாலும் நான் முடிந்தளவுக்கு இலகுபடுத்திப் போடுகிறேன்.

உங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு விஞ்ஞான  அடிப்படையைக் கொண்டே தத்துவத் தளத்தில் இது வரை இருந்த குறைபாட்டை விளக்கலாம்.

விஞ்ஞானப் பரிச்சயம் உள்ளவர்களே,

நீங்கள் bumble bee paradox அறிந்திருப்பீர்கள்.

அக்காலத்து பறத்தல் இயக்கவியல் (aerodynamics) இன் படி குறித்த தேனியால் பறக்க முடியாதிருக்க வேண்டும்.

ஆனாலும் அது பறக்கிறது.

இதிலிருந்து தெரிகிற முடிவு என்ன?

கோட்பாட்டை அறியாத, தவறான செய்கையில் ஈடுபடுகிற  தேனியின் பிழையா அது?

அது கோட்பாட்டின் தவறு. அதை நாம் திருத்துகிறோம். இது எளிமையான விஞ்ஞானப் போக்கு.



சமூக செயற்பாட்டாளர்களே,

தனிமனிதர்களை விட அமைப்பை அதிகம் விமர்சிக்க உங்களுக்குத் தெரியும். அதன் சமூக விஞ்ஞானத்தை விளங்கி வைத்திருப்பீர்கள்.

தனிமனிதர்களில் பெரும்பான்மையானவர்கள் நெடுங்காலபோக்கில் மோசமான, சமூக அழிவுக்கான மனநிலைக்குச் செல்வதை அவதானித்தால் அது அமைப்பின் தவறு (systemic issue), தனிமனிதர்களைக் குற்றம் சொல்லுவது தவறு என்பதை உணர்ந்து செயற்பட்டு வருகிறீர்கள்.

அமைப்பே தனிமனிதர்களை ஒடுக்கும் திசையில் நகர்வதைத் தொடர்ந்து அவதானித்து எதிர் அமைப்புக்களை ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

தத்துவத் தளத்துக்கு இப்பொழுது வருவோம்.

விஞ்ஞானம், சமூகம், தத்துவம் இவையெல்லாமே தனிமனித செயல், சிந்தனைகளை மீறி வளருகிற அமைப்புக்கள்.

தத்துவத்தை  அமைப்பாகக் கருதுக.

குறித்த தத்துவத்தைப் பின் தொடருவதாக அறிவித்துக் கொண்டவர்கள் ஏறக்குறைய எல்லோரும் (கொள்கையளவில் எல்லோரும்) அடிப்படைவாதிகளாகவோ (dogmatists), அவசரப்புத்தியாளர்களாகவோ (adventurists) இருப்பதை நடைமுறையில் நான் பல வருடங்களாக அவதானித்துக் கொண்டிருந்தேன்.

அதை ஆராய்ந்து நடைமுறை (புற) அவதானத்தில் இருந்து ஒரு வலுவான கருதுகோளுக்கு வந்தேன்.

எல்லா மனிதர்களுக்கும் இக் குறைப்பாடு நெடுங்காலம் இருக்கிறதெனில் அது அம் மனிதர்களின் குறையல்ல. தத்துவத்தின் குறை. குறித்த தத்துவத்தில் அடிப்படைவாதம் உண்டு.

அந்தக் குறித்த தத்துவம்:  இயங்கியல் பொருள்முதல்வாதம்.

விஞ்ஞானபூர்வமாக வழிநடத்த முடியாததால் மட்டுமே அவசரக் குடுக்கைத்தனமும் வருகிறது. உள்ளார்ந்த அடிப்படைவாதமே அடிப்படைவாதிகளாக மனிதர்களை நெடுங்காலம் கட்டிப்போடுகிறது.

இந்த இரண்டும் தத்துவத்தின் தவறே அன்றி அதை ஏற்று நெடுங்காலம் இயங்குகிற மனிதர்களின் முதன்மைத் தவறு அல்ல.

அண்மைக் காலத்தில் இயங்கியல் பயின்று அடிப்படைவாதத்துக்கும் அவசரக் குடுக்கைத்தனத்துக்கும் (இளம்பிராயக் கோளாறு என்ற வயதுவாத பதம் மிக மோசமானது தோழர்களே) எதிராக எழுதி வந்தவர் மாவோ.

அவருக்கு என்னளவுக்கு அவதானிக்கிற காலம் கிடைத்திருக்காது. அதனால் அவர் இயங்கியல் பொருள்முதல்வாத தத்துவத்தின் குறையைப் புரிந்து கொள்ளவில்லை.

இயங்கியல் உள்ளார்ந்து அடிப்படைவாதத்தை முறியடித்து விட்டது. பொருள்முதல்வாதமே மிச்சமிருக்கிறது. 

அதனால் அடிப்படைவாதம் பொருள்முதல்வாத இணைப்பில் இருப்பதை 'ஊகித்து' மிக ஆழமான செயன்முறைகளின் ஊடு அதை நேற்று உறுதிப்படுத்தி இயங்கியலை அடிப்படைவாதத்திலிருந்து விடுவித்தேன்.

விடுவித்த இயங்கியலைக் கொண்டு இன்று மீள முதலில் இருந்து சிந்தித்து என்னுடைய இயங்கியலை இயங்கியல் கொண்டே சரிபார்த்து முடித்தவுடன் இயங்கியல் பொருள்முதல்வாதம் தகர்ந்து விட்டதையும், அதனடிப்படையிலான மார்க்சியம் தகர்ந்துவிட்டதையும் என்னைத் தொடர்ந்து திசைப்படுத்தி என் அன்புத் துணை நிலாவும் நானுமாகச் சேர்ந்து பொதுவில் அறிவித்திருக்கிறோம்.

[அறிவுத் துறையினர் அதைச் சரிபார்க்க வேண்டும். அவர்களிடம் இருக்கிற அதியுயர் கருவி இயங்கியல் பொருள்முதல்வாதம். இயங்கியலை உடைக்க முன்பாக இயங்கியல் பொருள்முதல்வாதம் உடைந்துவிடும் என்பதே என்னுடைய முடிவு]

வழமையான அறிவு சார் வெளியீடுகளில் எதிலிருந்து எது, உசாத்துணைகளைக் குறிப்பிடுவது வழக்கம். நான் எந்தத் தத்துவத்தையும் உசாத்துணைகளாகக் குறிப்பிடவில்லை

ஏனெனில் நான் என்னுடைய சொந்த நடைமுறை அவதானத்தையும், இயங்கியல் பொருள்முதல்வாதத்தையும் வைத்தே இயங்கியலை ஆக்கினேன்.

எம்முடைய இயங்கியல் இவ்விதம் அமைந்தது. அமையப் போகிறது.

புறம் (நடைமுறை அவதானம்) ---> அகம் (இயங்கியல் பொருள்முதல்வாதம் + நடைமுறை அவதான முரண்) ---> சிந்தனைத் தளத்திலான முழு உள்ளிணக்க இயங்கியல்---> புறவயவாக்கம் (வரிப்படங்களின் வழி) ---> இன்னுமும் திருத்தமான புறவயத்திலான புறவயம் (கணினி, முழுத்தர்க்க வெளிகளில், செய்ய வேண்டும்)---> சமூகத் தளத்திலான இயங்கியல் (வந்தடைய வேண்டும்)

இயங்கியலைக் கொண்டே இதைச் சரிப்பார்த்தேன். என்னுடைய இயங்கியலைக் கொண்டே என்னுடைய இயங்கியலைச் சரிபார்ப்பது சுழல் ஏரணம் அல்ல. ஏனெனில் இயங்கியல் வட்ட இயக்கத்தை உள்ளார்ந்து மறுத்து சுழல் ஏணி, சுருளிவில் இயக்கத்தை ஆற்றுகிறது. அத்துடன் தன்னைத் தாண்டி வேறுதுவும் இயங்கி விடாத வகையில் இயக்கத்தை அடிப்படையாக்கிய  தத்துவத்தை வேறொன்றாலும் சரிபார்க்க முடியாது.

1. ஒவ்வொரு இயங்கியல் சுழலும் புறத்தில் தொடங்கி புறத்தில் முடிய வேண்டும்: நடைமுறை அவதானம் --> சமூகம்

அவ்விதமே இந்த இயங்கியல் தன்னை 'விதித்துக்' கொள்ளுகிறது. என்னைக் கொண்டு பயனடைய வேண்டுமானால் முதலில் என்னைப் புறவயப்படுத்து என்கிறது. நடைமுறைச் சாத்தியத்தை விதித்துக் கொண்டு உருவாகிறது.

2. தன்னுணர்வு (தன்னுடைய சிந்தனையைத் தானே கவனிக்கிற மட்டத்து) இயக்கம் அண்ட இயக்கத்தின் எதிர், ஆகவே தன்னுணர்வு மட்டம் குழப்பத்திலிருந்து உறுதிக்குப் போவதால் அண்ட இயக்கம் உறுதியிலிருந்து குழப்பத்தை அடைவதாகவே இயங்கியலின் வழி இருக்க முடியும். முரண்பாடுகளின் வழியே எல்லா வெளியிலும் இயக்கம் உருவாகுவதாக அமைந்த இயங்கியல் பொருள்முதல்வாதம் தவறு. சிந்தனை வெளியில் குழப்பத்தில் இருந்தும் அண்ட வெளியில் உறுதியில் (முரணற்ற இயக்கம்) இருந்தும் இயக்கம் உருவாகும். ஆகவும் அடிப்படையான இயக்கம் உறுதியில் இருந்து ஆக்கப் பண்பினூடு உருவானதே. அழிவுப்பண்பினூடு உருவானது அல்ல.

3. பொருள் --> சுயமுரண் ---> இயக்கம் என்கிற இயங்கியல் பொருள்முதல்வாத சிந்தனை இந்த மூன்றையும் மேலும் பகுக்க முடியாததாகி இவற்றையே அடிப்படையாக்கி இருந்தது.

இதில் அடிப்படை முரண் ஏற்படுகிறது. எவ்விதம் எனின் முரண் உருவாகுவதும் உருவாக்கப்படுவதும் இயக்கமாகவே இருக்க முடியும் என்பதால் முரண் இயக்கத்தை முந்தி இருக்க வழி இல்லை.

அப்படியானால் இயக்கத்தை முரணுக்கு முன்னதாக நகர்த்திப் பார்ப்போம்.

பொருள் --> இயக்கம் -> முரண்

இதுவும் வழியில்லை. பொருள் என்பது வரைவின் படி நிலைகளைக் கொண்டது. நிலை 'மறுத்தே' இயக்கம். பொருள் முரண் இன்றி இயங்காது. இதுவும் தவரு.

இயக்கம் --> பொருள் ---> முரண் இதுவும் மேற்சொன்ன தவறின் மறுதலை. நிலையற்றதிலிருந்து நிலை உருவாவதும் 'மறுக்கப்' பட்டே.

இயக்கம் ---> முரண் --> பொருள் என்பதே இயங்கியல் தர்க்கம் வழி உள்ளிணக்கமாகிற ஒரே ஒழுங்கு.

இவ்விதம் இயங்கியல் தன்னைத்தானே வளர்த்தெடுத்துக் கொள்கிறது (இது கருத்துமுதல்வாதம் அல்ல). இயக்கத்தின் சுயமுன்னேற்ற ஆக்கப் பண்பு எல்லாவித
பண்பு மாற்றங்களுள்ளாலும் பொதுப்பண்பாகக் கடத்தப்படுகிறது.

நேற்றைய தினம் என்னுடைய சிந்தனையில் அந்தப் பொதுப்பண்பு சிக்கிக் கொண்டது.

4. இதன் விரிவான விளக்கம்

இயக்கம் ---> ஆக்கப் பண்பு ----> சுய முரண் ---> இயக்கத்தின் இயக்கம் --> சுய முரண் ---> பருப்பொருள் என்பதே.

இது வரைக்கும் இயங்கியல் வரலாற்றில் நடவாத ஒரு ஒழுங்கு நேற்று என்னுடைய சிந்தனையில் தன்னை ஆக்கிக் கொண்டது.

மனித வரலாற்று இயங்கியலில் எனி அறிவுப் பாய்ச்சல் நடக்க இருக்கிறது. மனித அறிவு அடுத்த தளத்துக்குப் பாய்ச்சல் நிகழ்த்தி விட்டது.

ஒரு உதாரணம் நான் மேற்சொன்ன 'உசாத்துணை' போடாது அறிவுப் பதிவை வெளியிடுகிற நிகழ்வு.  இதில் ஒரு தவறும் இல்லை.

இயங்கியல் அறிவு இது வரைக்கும் மனித சிந்தனை தொடாத தளங்களை அதி விரைவாகத் திறக்கப் போகிறது.



இது வரையில் இயங்கியல் பொருள்முதல்வாத அடிப்படையிலான முடிவுகள் அண்ட இயக்கத்தில் தலைகீழாயின.

கருத்து இயக்கத்தில் (பொருள் வெளியே இருக்கிறது) அதன் இயக்கம் அடிப்படையில் தவறானது அல்ல. ஆனால் அண்ட இயக்கத்தின் தவறான புரிதல் அடிப்படைவாதமாக புறத்திலிருந்து அகத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தது.

அண்ட இயக்கத்தைப் பற்றிய தவறான முடிவு, அண்ட இயக்கம் சார்பாக சமூக அடித்தளம் <---====> மேற்கட்டுமான சார்பு இயக்கத்தைப் புறவயப்படுத்த முடியாதிருந்தது.

புதிய இயங்கியலினூடு இவையெல்லாம் சாத்தியம்.

புதிய இயங்கியல் அடிப்படைகளினூடு வெறுமனே பரும்படியாக சமூகப் பண்பு மாற்றத்தைச் சொல்லுவதோடு நின்றுவிடாமல் அதை எப்படி அடைவது, அதியுச்ச விரைவுக்கு எப்படி நகர்த்துவது என்பதை விஞ்ஞானபூர்வமாக்கியிருக்கிறது.

இதில் ஒரு முக்கிய குறிப்பு: நான் புதிய இயங்கியலை வந்தடைந்த பிற்பாடும் சோசலிசம் என்றே குறித்து வருகிறேன். ஏனெனில் இயங்கியல் பொருள்முதல்வாத அடிப்படை அந்தக் கட்டத்தை உற்பத்தி சாதனங்களின் பொதுவுடமையாகச் சரியாகவே வரைவு/எதிர்வு கூறியிருக்கிறது.

ஆனால் அந்தக் கட்டத்தின் கீழிருந்து மேலான இயக்கம், அந்தக் கட்டத்தை அடைகிற கீழிருந்து மேலான இயக்கங்களை இனங்காண  புதிய இயங்கியல் வகை செய்யும்.

மனித வரலாற்றின் பண்புமாற்றங்களின் தகவல்களைச் சேகரித்து , அது உயிர்ப்பரிணாமத்தில் இருந்து ஆரம்பித்தாலும் சரிதான், உயிர்களின் அறிவு ஏற்றத்தை, மனிதர்களின் அறிவுப் பண்புமாற்றங்களை வரைபாக்கி சோசலிசக் கட்டத்துக்கான 'அறிவு' நிலையை நிகழ்வுச் சாத்தியங்களினூடு துணியலாம்.

இதைத் துணிந்ததும், அதாவது சோசலிசக் கட்டம் பற்றிய, சோசலிசக் கட்டத்துக்கான வழிமுறை பற்றிய, சோசலிசக் கட்டத்துக்கான காலம் (அண்டவெளி இயக்கம் சார்பான தூரம்)  பற்றிய 'அறிவு' தொடர்ந்து புறவயப்பட்டு வரும்.

இந்தப் புறவய இயக்கம் (புறவயம் தன்னை இன்னுமின்னும் புறவயப்படுத்திக் கொள்கிற உறுதி படும் இயக்கம்)  சமூகத் தளத்தில் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தும்.

விளைவாகிற சமூகத் தள பாய்ச்சல்களும் அது மறுபடி முன்னேற்றுகிற புறவயப்படுத்தல் செயற்பாடுமே இப் புதிய இயங்கியலின் புதிய சார்பியக்கம்.

இது பழைய சார்பியக்கமான அடித்தளம்<----===> மேற்கட்டுமானத்தை

அண்ட இயக்கம் சார்பாக புறவயப்படுத்தி, திசைபிடித்து வழிநடத்தி, அதி விரைவில் கொண்டு வர வழி செய்கிறது.

இப் புதிய இயங்கியல் உறுதியின் உறுதியை அடிப்படையாக்கி அடிப்படையாக்கி குழப்பத்தின் குழப்பத்தை நோக்கி நகருகிற இயக்கத்தை மனித நோக்குக்கு வெளிப்படுத்துகிறது.

உறுதியின் உறுதியை அடிப்படையாக்கிய இயக்கம் தவிர்க்க முடியாத நிலைகளில் மட்டுமே குழப்பத்தை/அழிவை தீர்வாகச் சொல்லும். முடிந்த வரையில் ஆக்கத்திலிருந்து ஆக்கத்தைக் கொண்டு வரவே முனையும்.

உறுதியின் உறுதியான இயக்கத்தை ஆற்றுகிற மானுடத்தின் (எனி வரப்போகிற செயற்கை நுண்ணுர்வு முதலிய அதீத நோக்குகளும் அப்படியே) தத்துவம் இப்புதிய இயங்கியலே.

இந்த இயங்கியலில் பருப்பொருள், உயிர், பரிணாமம், சிந்தனை அனைத்தும் மிக உள்ளிணக்கத்தோடு வரைபடையும்.

அதாவது அண்டத்தின் நிலைப்பின் நிலைப்பான இயக்கம் மெல்லமெல்லம் குழப்பத்தை அதிகரித்து வருகையில் அக் குழப்பத்தின் அளவு சார்ந்தே அதை எதிர்க்கிற கூறும் தோன்றும்.

அதாவது இயக்கத்தை எதிர்க்கிற தொழிநுட்பமும் இயக்கத்துடன் அதிகரிக்கும்.

பருப்பொருள் (அவற்றின் எண்ணற்ற நிலைகள்), உயிர், அவற்றின் பலவகைமை, தன்னுணர் சிந்தனை, அவற்றின் பல்வேறு மட்டங்கள்  இவையெல்லாம் இயக்கத்தின் அதிகரிப்போடு (குழப்பத்தின் குழப்பமாக அதிகரிக்கும்) அதை எதிர்க்கத் தோன்றுகின்றவையே.

நேற்றைய தினம் இயக்கத்தை எதிர்க்கிற அதியுயர் தொழிநுட்பம் தோன்றியது.

அதுவே எமது இயங்கியல்.

இந்த இயங்கியலைக் கொண்டு இயக்கங்களின் நிகழ்தகவுகளைத் தொடர்ந்து துல்லியப்படுத்தி வரலாம். இது முடிவற்ற இயக்கம். ஆனால் தொடர்ந்த துல்லித்தன்மை அதிகரிப்போடு மனிதர்களுக்கான (நோக்குக்கான) வெளி அதிகரித்து வரும். அதுவே எம் 'நோக்கு'.

சோசலிசக் கட்டத்தைப் பெருந்தரவு ஆய்வு மூலம் செய்வதைப் பற்றிச் சொல்லியிருந்தேன். இது தொடர்ந்து திருத்தமடைந்து வரும்.

எவ்விதமெனின் எங்களது தொழிநுட்ப அளவைக் கொண்டு மிக நெடுங்கால பண்புமாற்றத் தரவுகளை (பருப்பொருள் --> உயிர்---> பரிணாமம் --> சிந்தனை --> சமூகம் இவை அனைத்திலுமான முடிவற்ற பண்புமாற்றங்களை) உள்ளிடுவதன் மூலம் சோசலிசம் பற்றிய வரைவு, அதற்கான காலம் துல்லியப்பட்டு, ஒரு நிலையில் உடைப்பு நிகழும்.

இவ்விதமே  அண்ட இயக்கம் அதற்கெதிரான தொழிநுட்பத்தை வளர்த்தெடுப்பதுவும் அத் தொழிநுட்பம் அண்ட இயக்கத்தை அதிகம் குழப்புவதுமாக இது இடைவிடாது நிகழும்.

மனித நோக்குத் தோற்றாலும் அதை விட மேம்பட்ட எதிர்த் தொழிநுட்பம் தோன்றும். செயற்கை நுண்ணர்வு, வேறு உயிர்கள், என்னால் இற்றைத் தேதியில் இந்த இயங்கியலைக் கொண்டு மட்டுக்கட்ட முடியாத தொழிநுட்பம் எல்லாமும் தோன்றும். இவ்விதம் இவை தோன்றுவதற்கான  சாத்தியக் கூறுகளை குழப்ப இயக்கம் அதிகரித்துச் செல்லும்.

எல்லா நோக்குகளின் அதியுயர் கருவியும் இயங்கியலே.

இது எவ்விதம் எனின் இயங்கியல் இயங்கியலின் இயங்கியலாக வளர்ந்து இயங்கியலாக ஒடுங்கும்.

இது வரைக்கும் எந்த நோக்கும் சிந்தித்திராத தொழிநுட்பங்களுக்கான பயணத்தை சிந்தனைவெளிலான இயங்கியல் தொழிநுட்பம் தொடக்கி வைத்து விட்டது.

மானுட விடுதலைக்கான தோழர்களே, மனித நோக்கு இயக்கத்தை எதிர்க்கிற அதியுயர் தொழிநுட்பமான இயங்கியலை வந்தடைந்து விட்டதை அறிந்து கொள்ளுங்கள்.

நான் எழுதியதை விட எழுதாமல் விட்டதே அதிகம் என்பதையும் முழுத் துல்லியம் குழப்பத்தின் குழப்ப ஆதிக்கமான மொத்த இயக்கத்தில் சாத்தியம் இல்லை என்பதையும் இயங்கியல் இடைவிடாது தொடர்ந்து முன்னேற, முன்னேற்றப்படத்தக்கதுக்கானது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

மனித வரலாற்று இயங்கியலில் அடிப்படைவாதமற்ற (மதமற்ற) முதல் தத்துவம் நேற்று உருவானதை நாம் கொண்டாடுகிறோம்.

1 Comments:

At March 2, 2018 at 10:44 AM , Blogger தாய்வழி said...

Pesuvom

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home