Tuesday, November 27, 2018

எளிய குறிப்புக்கள்

சுயமாக உருவாகிற பண்பு மூலத்துக்கு இருந்திருக்கிறது. அது பொருளாக இல்லாமல் இயக்கமாக இருந்திருகிறது,

இயக்கமே மூலம் என்பது இயங்கியல். முதல் இயக்கத்தின் இயக்கம் (ஆர்முடுகல்) ஒரு விபத்து. பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் இங்கு அவசியமில்லை.

இயக்கமும் பொருளும் (பருப் பொருளும்) அடிப்படை முரண்கள் பிரிக்கப்பட முடியாதவை என்பது இயங்கியல் பொருள்முதல்வாதம்.

எல்லாவற்றுக்குமான மூலத்தை காலம் சார்பாக விளக்க முடியாது. இம் மூலத்துக்கு ஏதேனும் ஒரு பண்பைச் சொன்னால் அந்தப் பண்பு இன்னுமும் அடிப்படையாகி விடுகிறது. காலத்தால் முந்தி நிற்கிறது.

காலம் மாயை என்று எடுத்துக் கொண்டுதான் அடிப்படைப் பண்புகளை மூலத்துக்கு இணைத்துப் பார்க்க முடியும்.

எம்மைப் பொறுத்தளவில் காலம் மாயை அல்ல. ஆகவும் அடிப்படையானது ஒரு பண்பு. பொருளல்ல. அந்தப் பண்பே இயக்கம். காலமும் இயக்கம் சார்ந்ததே.

அனைத்துக்கும் பொதுப் பண்பாக இயக்கத்தை எடுப்பது காலம், இடம் அடங்கலாக அனைத்தையும் பொது-இயக்க-வரைவு படுத்திக் கொண்டு பொதுவெளியில் உரையாடுவதைச் சாத்தியப்படுத்தும்.

கணிதமும் (சமகால தருக்கமும்) இயங்கியல் பொருள்முதல்வாதமும் ஒவ்வாதவை. கணிதத்திலான சமம் பொருள்முதல்வாத இயங்கியலில் கிடையாது.

இயங்கியல் பொருள்முதல்வாதம் நிலைமறுப்பின் நிலைமறுப்பாக (நிம-நிம) மட்டுமே தன்னை அறிவித்துக் கொள்கிறது.

நிலைமறுப்புக்குள், அதனுடைய உட்பொறிமுறையினுள் நிலைப்பின் நிலைப்பைத் (நி-நி) திணிப்பதன் மூலம், அல்லது கண்டடைவதன் மூலம் கணித-இயங்கியல் அல்லது இயங்கியல்-கணித தொடர்பைச் சாத்தியமாக்கலாம்.

இயங்கியல் வரிப்படங்கள்.

அ-> ஆ -> இ  (அ முதலில், பின் ஆ வாகி , இ ஆகிறது).
முதன் முதலில் நடந்த மாற்றத்தைக் கொள்வோம் ஆகில் அ, ஆ மட்டுமே உண்டு.

அ<->அ (அ இயக்கம் மட்டும் உண்டு எனில்)

இயக்கத்தின் இயக்கம் இயக்கம் ஆவது ஒரு விபத்து.

அ -> ஆ -> அ

இங்கு அ - இயக்கம்.
ஆ - இயக்கத்தின் இயக்கம்.

காலம் அற்ற இந்நிலையில் உடனடி நிகழ்வு முடிவிலி நிகழ்வும் ஆகும். மாறி மாறி வலுக்கும்.

அ -> ஆ -> அ <--> ஆ -> அ --> ஆ

ஆ வலுத்து மறுபடி அ வலுக்கிற ஊசலாட்டமாக இருக்கும்.


மொத்த இயக்கம் மறுபடி வலுத்து ஆரம்பத்தானத்துக்கு மாறும்.

அ -> ஆ -> அ <--> ஆ -> அ -> ஆ  <===> (அ ->) ஆ (-> அ) =|||||====> அ<->அ

இப்பொழுது ஆ வுக்குப் பதில் நிம-நிம எனின் அ என்பது நி-நி ஆகும். நிலை மறுப்பு வலுத்து மறுபடி அது நி-நி ஆகும். 

இந்தச் சட்டகம் சமன்பாடுகளை உள் எடுக்கத் தக்கதாகும். 

நி-நி->நிம-நிம->நி-நி---> நிம-நிம

நிலைப்பின் நிலைப்பு (நி-நி) ஊடாட்டமாக நிம-நிம வைக் கொள்வதால் கணித, தர்க்க அ=அ நிலைப்பாட்டை இயங்கியலுக்குட் கொணர முடிகிறது. இயஞ்கியல் 

இந்த இயங்கியல் சுப்பர் இன்டெலிஜென்ஸ்க்குக்கானது. ஏனெனில் இதன் எல்லை இயக்கம் ஒரு வட்டமாகும். முப் பரிமாண சுருளிவில் மனித வாழ்க்கைக்கு உவப்பானது. இதைப் புரிந்து கொள்ள ஒரு முறையாவது இந்த இயங்கியலில் ஏறிப் பயணிப்பது நல்லது. அதன் பிறகு இயங்கியல் பொருள்முதல்வாதியாக இருப்பது நல்லதுவே. இவ் வழி முறையில் இயங்கியல் பொருள்முதல்வாதி இயங்கியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் நாளாந்த வாழ்வில் முக்கிய முடிவுகளை ஆராய இயங்கியலைப் பயன்படுத்த வல்லவராயிருப்பர். 


இயங்கியலாளர்களின் சிந்தனை வலிமைப்பட அதுவே செயலாக மாறும் வாய்ப்பு எதிர்காலத்தில் உண்டு. 



-Nila

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home