Thursday, March 1, 2018

இயக்க வரிப்படங்கள்

/அது என்ன இயக்க வரிப்படங்கள்?
//

இயக்கத்தை வாக்கியங்களினூடு விளக்குவதை விட எது எதுவாக மாறுகிறது என்கிற நிலைமறுப்புப் போக்கை (நிலைமறுப்பின் நிலைமறுப்பை) புறவயமாகவும், இலகுவாகவும்  விளக்க உதவுகிற என்னுடைய கருவி அது.

இதை விட முன்னேற்றகரமான கருவிகள் (அசைபடங்கள் இத்யாதி) உண்டு. நான் செய்வதுதான் மிகத் திருத்தம் என்று நான் தவறியும் நினையேன். நீங்களும் நினைக்க வேண்டாம்.

இயக்கவரிப்படங்களில் அ=>ஆ=> இ என்பவை முறையே 

- கீழிருந்து மேலான அடிப்படை இயக்கம் (அ)

- அதன் வழி முதன்நிலை அடைகிற மேலிருந்து கீழான இயக்கம் (ஆ)

- மேம்பட்ட கீழிருந்து மேலான இயக்கம் (இ)

இவற்றைக் குறிக்கிறது. 


இதை எனி அ->ஆ->அ என்றே சுருக்கிக் குறிப்பேன். 


நிலைமறுப்பின் நிலைமறுப்பாக இயங்குபவை ஒரு கட்டத்தில் நிலைப்பின் நிலைப்பாகச் சுருங்க ஆரம்பிக்கும். அதை  ->->-> குறியீட்டினால் சுட்டுகிறென். 

மறுதலையும் அப்படியே.

நிலைப்பின் நிலைப்பு ->->-> நிலைமறுப்பின் நிலைமறுப்பு 


நிலைமறுப்பின் நிலைமறுப்பு ->->->  நிலைப்பின் நிலைப்பு 



என்னுடைய கூற்றுக்களுக்கான இயக்க வரிப்படம்.
"தோழர் நான் பல தடவைகள் உங்களுக்கு எழுதி விட்டேன்.
செயலறிவினூடே கோட்பாடு வருகிறது.
கீழிருந்து மேலான அனுபவத்தினூடே மேலிருந்து கீழான கோட்பாட்டாக்கம் வருகிறது.
கோட்பாட்டுத்தளத்திலிருந்தான பார்வையில் அதற்குக் கீழிருந்து இயங்கிக் கொண்டிருக்கிற அனுபவ இயக்கம் பிற்போக்கானதே. அது முன்னேற்றப்பட வேண்டியதே.
அதே சமயம் கோட்பாட்டுத்தளத்திலிருந்து மேல் நோக்கிய செயலறிவின் திசை மட்டடைவதால் நான் திசையை அறிந்து கொள்வதன் மூலம் செயலறிவோடு பயணிக்கிறென்.
அதனால் செயலறிவு அடிப்படைகளிலிருந்து தோன்றுகின்ற கோட்பாடு என்பது செயலறிவை எப்போதும் வெல்லுவதாக இருக்கிறது.
விஞ்ஞானத்தை வெல்லுவதாகத் தத்துவம் இருக்கிறது. அதனால்தான் அது விஞ்ஞாங்களின் விஞ்ஞானமாகி, அடுத்த படிநிலையில் தத்துவங்களின் தத்துவமாகிறது."

செயலறிவு இயக்கம்
புறம் ---> அகம் (தன்னுணர்வு) ----> புறம்

கோட்பாட்டியக்கம்
செயலறிவு ---> கோட்பாடு ---> செயலறிவு


கோட்பாட்டியக்கம் இந்த இயக்கப் போக்கில் தொடர்ந்து திருத்தமடைந்து வர, பண்புமாற்றமாக உருவாகுவதே விஞ்ஞான இயக்கம்

தொடர்ந்து திருத்தமாடைகிற  கோட்பாட்டியக்கம் ->->-> விஞ்ஞான இயக்கம்

எல்லாவித இயக்கமும் எதிரியக்கங்களை உருவாக்கும் (அவை எதிரும் சமமும் அல்ல).

விஞ்ஞானம் எதையும் உறுதிப்படுத்துவதில்லை, எதையும் நிறுவுவதில்லை, கருதுகோள்களை (தத்துவங்களை) உடைக்கவே முயன்று கொண்டிருக்கும்.

விஞ்ஞானம் எதையும் திட்டவட்டமாக்குவதற்க்கான, திட்டவட்டமான வெளிகளுக்குள் விதிகளை/கருதுகோள்களை முடக்குவதற்கானது.

விஞ்ஞான இயக்கத்தில் அதன் முரண்கூறுகளான பரும்படித்தன்மை, உறுதிப்படுத்துவதிலிருந்து உறுதிப்படுத்துவது (விஞ்ஞானம் உறுதிப்பட்டவற்றை உடைக்கிற முனைப்புடையது)  இன்னொரு இன்னொருவகைக் கோட்பாட்டாக்கத்துறையைத் தோற்றுவிக்கிறது.

தத்துவம்.

விஞ்ஞானச் செயற்பாடு ---> தத்துவம் (புற, அக அவதானிப்பு, பொதுப்பண்பு எதிர்வுகூறல், கருதுகோள் ஆக்கல்) ---> விஞ்ஞானச் செயற்பாடு ->->-> தத்துவங்களின் தத்துவம்.


விளக்கம்

செயலறிவு இயக்கத்தில் முனைப்படைகிற 'தன்'முனைப்பு

அதிலும் பெரிய இயக்கமான (இயக்கநிலைக்) கோட்பாட்டாக்கத்தில் கோட்பாட்டை முன்நிறுத்துகிறது.

அதனால் தன்முனைப்பு தொடர்ந்து புறவயமடைகிறது.


நிலைமறுப்பின் நிலைமறுப்பு (negation of negation) நிலைப்பின் நிலைப்பாவதன் (assertion of assertion) உதாரணம்

விஞ்ஞானம் ---> தத்துவம் ----> விஞ்ஞானம் -->->-> விஞ்ஞானங்களின் விஞ்ஞானம்

விஞ்ஞானங்களின் விஞ்ஞானம் ---> மேம்பட்ட தத்துவம் ----> விஞ்ஞானங்களின் விஞ்ஞானம் ->->-> தத்துவங்களின் தத்துவம்

இவ்விதமே அறிவு வெளி வளருகிறது.

அறிவு வெளியின் ஆகவும் பரும்படி இயக்கம்

நிலைமறுப்பின் நிலைமறுப்பு ---> நிலைப்பின் நிலைப்பு ---> நிலைமறுப்பின் நிலைமறுப்பு ->->-> நிலைப்பின் நிலைப்பு

அறிவு வெளியின் மொத்த இயக்கம் நிலைப்பின் நிலைப்பே.  புறச்சூழலின் மொத்த இயக்கம் நிலைமறுப்பின் நிலைமறுப்பு.

அதனால்தான் தனித்த தன்னுணர்வு இயற்கைக்கு எதிராகவே இயங்க முடியும்.

இதிலிருந்து வருகிற இயங்கியல் வழி முடிவு தனித்த நோக்குக்கு வெளியிலான அண்ட இயக்கம் கீழ்கண்டது போலவே ஆரம்பித்தது.

நிலைப்பின் நிலைப்பு ---> நிலைமறுப்பின் நிலைமறுப்பு ---> நிலைப்பின் நிலைப்பு

அதனுடைய தொகுத்த இயக்கம் நிலைமறுப்பின் நிலைமறுப்பாகவே இருக்கும்.


நிலைப்பின் நிலைப்பு ---> நிலைமறுப்பின் நிலைமறுப்பு ---> நிலைப்பின் நிலைப்பு ->->->  நிலைமறுப்பின் நிலைமறுப்பு.


இயக்கத்தின் அடிப்படை உள்ளார்ந்த ஆக்கப்பண்பே அன்றி, சுயமுரண் அல்ல.

மனிதர்கள் மட்டுமே தனித்த தன்னுணர்வு நோக்குகள் என்றும், இருப்பது ஒரே ஒரு அண்டம் என்றும் அபத்தமாக புரிந்து கொள்ள வேண்டாம். 

இந்த இயக்கம் பிரபஞ்சங்களின் பிரபஞ்சங்களுக்கும் பொது.

எத்தனை பிரபஞ்சங்கள் இருந்தாலும் அவற்றின் மூலத்தைத் தேடிப் பிடித்தால் இப்படித்தான் வந்து முடியும்.

அவசரப்பட்டு இது அத்வைதம், கருத்துமுதல்வாதம் (கருத்துமுதல் அடிப்படையிலான ஆன்மீகம்)  என்றெல்லாம் கருதிக் கொள்ள வேண்டாம். இந்த இயங்கியலைக் கொண்டு அந்த இரண்டையும் ஒடுக்க முடியும். அவை அல்ல இது.

இந்த மொத்த இயக்கம் நிலைப்பின் நிலைப்பு அடிப்படையில் ஆரம்பித்து நிலைமறுப்பின் நிலைமறுப்புக்குப் போவது.

இது இயங்கியல் வழி மிகச் சரியானது.

எந்த பண்பில் தொடங்கியதோ அந்தப் பண்பில் முடிக்க வேண்டும் என்கிற இயங்கியல் விரோத சிந்தனை ஹெகலுக்கும் மார்க்சுக்கும் வந்ததன் விழைவுதான் தேவையற்ற கருத்து முதல்வாதமும், பொருள்முதல்வாதமும். 

தத்துவத்தைக் கொல்ல முடியாது. ஒடுக்கலாம். பொருத்தமான வெளியில் பாவிக்கலாம். 

இயங்கியல் எவ்விதம் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதத்தை ஒடுக்கிப் பாவிக்கிறது என்பதை எழுதியிருந்தேன்.

ஆதிமுதல் விசயங்களுக்காக உருவாக்கபட்ட கருத்து பொருள் முதல்வாதங்களை நான் ஒவ்வொரு இயக்கச் சுழலுக்குள்ளும் 
ஒடுக்கி ஒவ்வொரு சுழலையும் சரிபார்க்க பயன்படுத்துகிறேன்.

இயக்கச் சுழலைச் சரிபார்ப்பது கருத்தும் பொருளும் என்றால் மொத்த இயக்கத்தின் சுழலையும் சரிபார்க்கிற
 எல்லைகளாக  இருக்க வேண்டியவை அவைதானே என்ற சந்தேகம் வரலாம் (வர வேண்டும்).



அங்கேதான் மார்க்ஸ் ஹெகலைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஹெகலின் கருத்துவெளிக்கான இயங்கியலை அனைத்துக்குமாக வெளிக் கொண்டுவந்தார்.

கருத்துவெளி இயங்கியல் நிலைமறுப்பின் நிலைமறுப்பில் ஆரம்பித்து நிலைப்பின் நிலைப்புக்குப் போகிற நான் மேற்சொன்ன அறிவு இயக்கம்.

மார்க்ஸ் ஹெகலின் கருத்துவெளி அடிப்படையான நிலைமறுப்பின் நிலைமறுப்பை அண்டத்தின் தோற்றத்துக்கும் அனைத்துக்குமான அடிப்படையாகவும் போட்டுக் கொண்டது தவறு.

கருத்தும் பொருளும் இருக்கிற வெளிக்குள் நடக்கிற இயக்கச் சுழல்களைத் திருத்தவே நான் பாவிக்கிறேன்.

இவ்விதத்தில் ஹெகலும் மார்க்சும் நிகழ்த்திய அதி முக்கிய இயங்கியல் தவறை நான் செய்யவில்லை.

இயங்கியல் வழி என்னுடைய இயங்கியலை உடைக்க முன்பாக இயங்கியல் பொருள்முதல்வாதம் உடைந்து விடும். ஆகையால் மறுபடி இயங்கியல் பொருள்முதவாதத்தை நியாயப்படுத்துகிற வழி (எனக்குத் தெரிந்து) கிடையாது.





கருத்துக்கும் அண்டத்துக்கும் ஒரே அடிப்படையை மார்க்ஸ் தவறாக முன்வைக்கிறார் (நிலைமறுப்பின் நிலைமறுப்பு).

இதைச் சடைந்து நியாயப்படுத்த பருப்பொருளைத் தேவையற்று முதன்மையாக்குகிறார். அதாவது இயங்கியலின் வழி முனையாமல் ஒரு முன்முடிபை எடுத்து 'சரியாக' வருகிறதா என்று பார்த்து விட்டு (அது வரத்தானே செய்யும்) எல்லாமே நிலைமறுப்பின் நிலைமறுப்பு அடிப்படைதான். அதுவின்றி இயக்கம் இல்லை என்று மிகத் தவறான முடிவை எடுக்கிறார்.

இதை வேண்டுமென்றே ஏதாவது 'நோக்கத்துக்காகச்' செய்திருந்தால் வரலாறு மார்க்சை மன்னிக்காது.  வரலாறு என்று மழுப்பிச் சொல்லவில்லை. மானுட விடுதலை வேண்டி நிற்கிற எவரும் மன்னிக்க மாட்டார்கள். 

மார்க்சின் துதிபாடிகளுக்கு எனி மானுடவிடுதலையின் இயக்கத்தில் வேலையில்லை. 





இயங்கியல் பொருள்முதல்வாதிகளுடன் மார்க்சியர்களுடன் 'விவாதிக்க' தயார்.

இயங்கியலாளர்களுடன்தான் 'விவாதம்' செய்ய முடியாது. உரையாட மட்டுமே முடியும்.

இயங்கியல் (இயக்கவியல்) பொருள்முதல்வாதிகள், மார்க்சியர்கள் இன்னுமும் அந்தக் கட்டத்தை நெருங்கவில்லை. அதனால் 'விவாதம்' செய்வோம் தோழர்களே.

நிலைப்பின் நிலைப்பு அடிப்படைகள் பற்றிய மேலதிக (இயங்கியல்) தர்க்கங்கள்.

நாம் எம் உரையாடற் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இயக்க வரைவுகளைக் கொண்டு உரையாடத் தவறின் வினைத்திறன் வெகு குறைவாயிருக்கும்.

இவ்வகையில், இந்த இயக்கத்தைக் கையில் எடுத்தால், அதன் போக்கில்,எல்லாவித கருத்துக்களையும் இயக்க அடிப்படைகளில் வரைவு செய்யும் ஆற்றலை நாம் பெற்றிருப்போம்.

இந்த வரிப்படங்களை விடச் சிறப்பான, பயன்பாட்டுக்கு உகந்த, இலகுவான, திருத்தமான முறைகளையும் தேடி முன்னேற்றிக் கொண்டிருக்க வேண்டும்.



உரையாடல்கள்/விவாதங்கள்

//vaளர்க்கவில்லை குழப்புகிறீர்கள்,,,வளர்த்தெடுப்பதாக கற்பனை செய்கிறீர்கள்.//

வளர்ப்பதையும் குழப்புவதையும் எவ்விதம் வேறுபடுத்துகிறீர்கள் என்றுதான் கேட்கிறேன்?

வளர்ப்பதென்பது நிலைப்பின் நிலைப்பு ஆதிக்கமாயிருக்கிற இயக்கம். சுருளிவில் இயக்கத்தின் வட்டப் பரப்புக் குறைந்து போவதைக் கொண்டு அதை அறியலாம்.

குழப்புவது நிலைமறுப்பின் நிலைமறுப்பு ஆதிக்கமாயுள்ள இயக்கம். சுருளிவில்லின் வட்டப்பரப்புக்  அதிகரித்துச் செல்வதைக் கொண்டு துணியலாம்.

என்னுடைய இயக்கம் தொகுத்தறிந்து இயங்குகிற நிலைப்பின் நிலைப்பு இயக்கம்.

மறுத்தால் என் இயக்கம் எதுவென வரைந்து காட்டுங்கள். வளைத்து வளைத்துக் குழப்புகிற  வார்த்தை ஜாலங்கள் வேண்டாம்.

நீங்கள் வளைத்து வளைத்து இயக்குவது நிலைமறுப்பின் நிலைமறுப்பு இயக்கம் என்பதையும் அது அறிவியக்கம் அல்ல என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.


********************


சனி ஞாயிறு எதுவும் எழுதப் போவதில்லை. பொதுவெளிக்கும் வரப்போவதில்லை. அதற்காகப் பொறுப்புக் கூறாமல் நழுவுகிறேன் என்று அர்த்தமல்ல. நிச்சயம் செய்வேன்.

இந்தச் சிந்தனை முறை என்னைத் திசைப்படுத்திய (திசைப்படுத்தல் என்கிற செயலின் கனம் இயங்கியல்வாதிகளுக்கே மிகத் தெளிவாய்ப் புரியும்) அன்புத் துணைக்கான அன்பளிப்பு.

இது எல்லோருக்குமானதுங் கூட. இது பொதுவுடமை.

அதற்காக இதைத்தான் எல்லோரும் பயன்படுத்தவேண்டும் என்று திணிப்பதாகக் கொள்ளக் கூடாது.

இந்த முறையிலிருந்து மானுட விடுதலைக்காக உருவாகிற அனைத்தும் அனைவருக்குமானது.

இந்த முறையை உடைக்கிற பொறுப்பும் 


**********

நான் ஒரு இயங்கியலாளன் என்னைச் சீண்டாதீர்கள் என்று ஒவ்வொரு அடிப்படைவாதிக்கும் சொன்னேன். அவர்கள் என்னை மார்க்சை உடைத்தெறிகிற வரையில் விரட்டி வந்தார்கள்.

இரண்டு தேவைகளுக்காக மார்க்ஸை உடைத்தெறிய முடிவெடுத்தேன்.


முதன்மை - மார்க்சியத்தை உடைத்தே மார்க்சிய செயலை முடிக்க முடியும் என்பதை இயங்கியல் கொண்டு விளங்கினேன்.

இரண்டாம் நிலை - இந்த விளக்கத்தைச் செயற்படுத்தத் தடையான அடிப்படைவாத இயக்கமூலமான மார்க்சிய அடிப்படைவாதக் கூறையும் உடைத்து பின் தொடரிகளை விடுவிக்க விழைந்தேன்.

மார்க்சு, மார்க்சிய மூலவர்களின் படங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறவர்கள் ரொம்ப நாள் அதைச் செய்யப் போவதில்லை.


************


மனித வரலாற்றின் 'அடிப்படைவாதம்/மதவாதம்' களைந்த முதல் தத்துவம் என்னுடைய இயங்கியல். அதனால்தான் அதை இயங்கியல்'வாதம்' என்று அழைப்பது தவறு. 



There's a strong tendency to derive the theory of everything from this new logic.

This is the first time in history (history of organisms)that dialectics is proven by dialectical logic itself.

Actually, this is the first ever proof in history.


This is the first perpetual philosophy and the philosophy of superintelligence.


-Nila

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home