Friday, October 25, 2019

மீ-இயங்கியல் விதிகளும் நாம் உச்சபட்சமாகச் செய்யத்தக்கவையும்

எவரைப் பார்த்தாலும் அடுத்தவருக்கு உபதேசம். ஆருக்காவது ஏதாவது உருப்படியாகத் தெரியுமா என்றால் இல்லை.

இந்த கோட்பாட்டாளர்கள் , இயங்கியல் பொருள்முதல்வாதிகள்,  புத்திசீவிகள், மார்க்சிஸ்ட்டுகள், சமூகப் போராளிகள், செயற்பாட்டாளர்கள், இடதுசாரிகள், முற்போக்காளர்களின் மூடத்தனங்களை, நேர்மைக் குறைபாடுகளைச் சில சமயங்களில் பொறுக்கமாட்டாமற் சுட்டிக் காட்டினேன்.

பெரும்பாலும் நான் கடந்து சென்று விடுவதன் காரணம் குறைந்த பட்ச நேர்மை இருந்தால் ஏன் அவர்கள் இடதுசாரியாகவோ, மார்க்சியவாதியாகவோ இருக்கப் போகிறார்கள் என்பதால்தான். அறிவைக் கடத்தலாம். தெளிவைக் கடத்துவது மிகச் சிரமம். நேர்மையற்றவர்களுக்கு தெளிவு தூரம்.

என்னால் முடிந்தளவுக்கு மென்மையாக சிலருக்குக் கருத்திட்டேன்.  மென்மையாக செய்ய அவர்களொன்றும் பச்சைப் பிள்ளைகள் அல்ல. சிந்தனை வளர்ச்சி குறைந்தவர்கள் என்பதால் ஒரு ஆரம்பத்துக்காக அப்படிச் செய்தேன்.

விட்டுப் பிடித்தேன், காலக் கெடு விட்டேன், ஒரு பயனுமில்லை.

ஐயோ, சட்டாம்பித்தனம், நடைமுறை என்று வந்துவிட்டால் இது இது இப்படித்தான்  என்று அரற்றினார்கள். 

இவர்களுக்கு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல என்ன அருகதை இருக்கிறது? 

மார்க்ஸ், லெனின், ஈ வெ ரா, அம்பேத்கர், ரோசா லெக்சம் பேர்க், பேர்னாட் ரஸல், கிராம்ஸி, சொம்ஸ்கி அப்படித்தான் சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் அரைவேக்காடுகளைத் துணைக்கழைத்து அவர்களுடைய மட்டான, மிக மழுங்கிய கோட்பாடுகளை உளறிக் கொட்டுகிறார்கள்.

முடிந்தளவுக்கு அவரவர் பதிவில் கருத்திடுவதைக் குறைத்திருக்கிறேன். எனக்கு ஆயுள் போதாது இவர்களுடைய முட்டாள்த்தனங்களைத் தனித்தனியே கையாள.

அடிப்படைப் பிரச்சினைகளை விளக்கியிருக்கிறேன். விதிகளைத் தருவித்து அளித்திருக்கிறேன். எனக்கு இந்தக் கீழ்த்தரப் பொதுவெளியிலிருந்து விடுப்பு வேண்டும். வைத்துப் பினைந்து கொண்டிருக்காமல் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தீர்க்கிற வழியைப் பாருங்கள். 

பொதுவெளிக்கான தமது நேரத்தைத் தொடர்ந்து சீராகக் குறைக்கிற வகையில் செயலாற்றாதவர்கள் பிரச்சினைக்குரியவர்கள். ஆபத்தானவர்கள். சுரண்டலாளர்கள். 

அழுத பிள்ளைதான் பால்குடிக்கும், மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்கிற கீழ்த்தர அரசியல் சொல்லடைகள் இருக்கின்றன. 

இவற்றின் கீழ்த்தரங்களையும், கயமைகளையும் சிந்தித்துணரும் பொறுப்பை உங்களிடமே விடுகிறேன். எல்லாவற்றையும் தீத்திக் கொண்டிருக்க முடியாது. 


வருசத்துக்கு அஞ்சாறு பொதுவெளிப்பதிவுகள். அதற்கு மேலெனின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுரண்டுகிற ஈனச் செயலாகவே அது முடியும். நான் சுரண்டலுக்கு எதிரானவன்.

அடுத்தடுத்தடுத்த வருடங்களில் இன்னுமின்னும் முன்னேறி ஓரிரு அரசியல் பதிவுகளாகக் குறைத்து விடுவேன். அதற்கும் அப்பால் எனக்காக இயந்திரத்தைத் தத்துவம் பேச விடுவதுதான் திட்டம். 

இன்னுமும் தொழிநுட்பத்தை எதிரியாகச் சித்தரித்துத் தமது மூடத்தனத்தனத்தையும்,  தெளிவு பெற வாய்ப்புக் குறைந்த மனிதர்களுக்கு (மக்கள் என்பது மந்தைப் பதம்) தகவலை அள்ளிச் சொரிந்து அவர்களைத் தம்மில் தங்கியிருக்கும் அடிமைகளாக வைத்திருக்கிற கயமை முற்றிய இடதுசாரிகள் இருக்கிறார்கள். 


இந்த LUDDITE மனநிலையை இருபத்தோராம் நூற்றாண்டிலும் வைத்துக் கொள்வது மனித சிந்தனைக்கே அவமானம். 

2018 மார்ச்'இன் இன் பின்னரான மார்க்சியம் மனித சிந்தனையின் அவமானச் சின்னம். 

தேவைப்பட்டால் தெளிவடைக, அல்லது எச்சை அரசியல் செய்து, பொதுவெளியில் பிம்பம்  கட்டிப்/காட்டிப் பிழைப்பு நடத்தி எல்லாரையும் நாசமாக்குக.

இந்தப் பதிவைப் பீடித்திருப்பது குறைந்த பட்ச அறச் சீற்றம்.

கருத்தியல் வெளியில், சிந்தனை வெளியில் மட்டும் தனிநபர் தாக்குதல் எதுவுமின்றி, எல்லாப் பொதுவெளிச் செயற்பாட்டாளர்கள் (மீதும் முடிந்தளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட காட்டத்துடன் முன்வைக்கப்படுகிறது.

இதற்கு மேல் எல்லாம் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. 

நேர்மையை உபயோகியுங்கள். அது கிளர்த்தும் புதிய சிந்தனையை உபயோகியுங்கள். 
                                                                **************************************************************************

முதல் மீ-இயங்கியலாளனான (Meta-Dialectician) எனக்கு தெளிவுக்கான சிந்தனை வெளியில் மேலிருந்து கீழான முறைமையே ஒப்பீட்டு முக்கியம் பெறுகிறது.

1. இலட்சிய/அதி-சிறந்த தெரிவுகளிலிருந்து அடுத்தடுத்த சரியானவற்றை நோக்கிப் போவது.

2. அவ்விதம் நகர்கிற பொழுது ஏன் ஒவ்வொரு தெரிவும் குறித்த சூழமைவில் நடைமுறைப் படுத்த முடியாதுள்ளது என்பதை விபரித்து/ஆவணப்படுத்துவது.

3. கடந்த தடவை தெரிந்ததையே எடுத்துக் கொண்டிராமல், ஒவ்வொரு தடவையும் இதைச் செய்வது.

இவ்விதம் மட்டுமே நோக்கு விடுதலைக்கான உச்ச விரைவு கிட்டும்.

சற்றுக் கூர்ந்து சிந்தித்தால், மேற்படி 1, 2, 3 படிநிலைகளும் உச்ச விரைவுக்கான இலட்சிய தெரிவையே விபரிக்கின்றன.

இவ்விதமே மீ-இயங்கியல் தான் இனங்கண்ட எந்தவொன்றையும் அதன் மீதே முதலில் எறிகிறது; அதனைக் கொண்டே அதனைப் பரிசோதிக்கிறது. 

இவ்விதமே பிரபஞ்சத்தின் எந்தச் சிந்தனையாலும் முந்த முடியாத அடிப்படை இயக்க எல்லை வரை ஒவ்வொரு சிந்தனைத் துகளையும் அது கொணர்ந்து அதி உச்சமாகப் புரிந்து கொள்கிறது.

சிந்தனை வெளியில் மீ-இயங்கியலுக்கு மட்டுப்பாடுகள் ஏதுமில்லை.

மேற்படி கூற்றையும் மீ-இயங்கியல் அதன் மீதே முதலில் எறிகிறது.

அதாவது 'மட்டுப்பாடுகள் எதுவுமில்லை' என்கிற மட்டுப்பாட்டை (குறைபாடின்றிய குறைபாடு, தோல்வி இன்றியதல் வருகிற தோல்வி...) அதனது இயக்க எல்லையின் எரிபொருளாக (இயக்கத்தின் இயக்கமாக) உபயோகிக்கிறது.

மிக மட்டான மார்க்சிய சட்டகத்தில் 'முதலில் சுய-விமர்சனம்' என்று வெற்று வாய்வார்த்தைக்குச் சொல்லிக் கொண்டிருப்பார்களே, அதை இங்கிருந்து முறைப்படி உச்ச பட்ச துல்லியத்துடன் நிறுவலாம். சுயவிமர்சனம் செய்து கொள்கிற எவரும் கீழ்த்தரமான மார்க்சிய சிந்தனைக்குள் வெகுநாள் கிடந்து அழுந்த மாட்டார்கள்.

அவையவற்றை அவ்வவ் சூழலில் பொருத்திப் பார்க்க வேண்டும் என்கிற மார்க்சிய மனப்பாட வாய்ப்பாடு மிகவும் மட்டானது.

எல்லாச் சூழலுக்கும் பொதுவான முடிவிலி அடிப்படைகள் உண்டு. 

அவற்றைக் கையாள இயங்கியல் பொருள்முதல்வாத சட்டகத்துக்கு இயலாது. மீ-இயங்கியலுக்கு வருகிறவர்களால் நான் சொல்லுவதைப் புரிந்து கொள்ள முடியும்.

தேசியவாதம், மதம் இவை அயோக்கியர்களின் இடைநிலைப் புகலிடமாக இருப்பதைப் போல, பின்னவீனவாதம்
மார்க்சியவாதம் (இயங்கியல் பொருள்முதல்வாதம்) இவையும் உண்மைத்தன்மை, நேர்மையற்றவர்களின் புகலிடமாகவே இன்று வரை இருக்கின்றன.

நடைமுறைச் சாத்தியங்களால் கூட்டு வெளியில் இலட்சியத் தெரிவுகள் சாத்தியமில்லாது போனாலும் தனிமனித வெளியில் அவை நிச்சயம் இயலும். முதலில் உங்கள் சிந்தனையை அதன் மீது (உங்கள் சிந்தனை மீது) ஓங்கி அறையுங்கள்.

ஒருவர் சில தினங்களுக்கு மேல் (எண்ணிக்கை அவரவர் ஆரம்ப சிந்தனைத் திறனைப் பொறுத்தது) தன்னை ஒரு மார்க்சியவாதி/மாவோயிசவாதி/லெனினியவாதி/ட்ரொக்சியவாதி/ஸ்டலினிசவாதி/இடதுசாரி என்றெல்லாம் அடையாளப் படுத்திக் கொண்டிருப்பாராயின் அவர் நேர்மையற்றவர்; தெளிவற்றவர்; சுய மரியாதையோ சுய விமர்சனமோ அவருடைய முதன்நிலை அணுகுமுறைகள் அல்ல.

சுய விமர்சனம் செய்து கொள்கிறவர்களிடம் இயங்கியல் பொருள்முதல்வாதம், மார்க்சியம் தாக்குப்பிடிக்காது, சில தினங்களிலேயே தகர்ந்து விழும்.

மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ போன்றவர்களை பேராசான், ஆசான், மாமேதை, சைர்மன் என்றெல்லாம் பவ்வியமாகக் குறிப்பிட்டு அண்ணாந்து பார்க்கிறவர்கள், இத்தகையவர்களின் படங்களை வைத்துக் கொள்கிறவர்கள், மேற்கோள்கள் போடுகிறவர்கள் தமது அடிமை மனநிலையிலிருந்து விடுபட வேண்டும்.

இத்தகையவர்கள் மேற்படி 'ஆதர்சங்களின்' (இன்னொருவரை ஆதர்சமாகக் கொள்ளுவதே ஒரு அடிமைச் சிந்தனைதான்) சிந்தனை முறையை உள்வாங்கி, அவை மிக மட்டானவை என்பதைப் புரிந்து கொண்டு புதியதை உருவாக்க வேண்டும்.

சிலருக்கு இது வருசக்கணக்காகலாம். ஆனால் முப்பது, நாப்பது, ஐம்பது வருடங்கள் மார்சியவாதியாய், இயங்கியல் பொருள்முதல்வாதியாய் வாழ்ந்து எந்தத் தெளிவும் வாய்க்காமல் கடைசித் தருணம் வரை சஸ்பென்ஸுடனேயே சாவதற்கு முயன்றாவது பார்க்கலாமே.

ஈ வெ ராவைப் 'பெரியார்', அம்பேத்கரை 'அண்ணல்', சித்தார்த்தனைப் 'புத்தன்' என்றெல்லாம் ஆ'வெண்டு அழைக்கிற எதுவித சுய மரியாதையும் அற்ற அன்பர்கள் மறந்துமிந்தப் பதிவை விருப்பிவிடாதீர்கள்.

அல்துசார், கிராம்ஸி, சொம்ஸ்கி என அடுத்தகட்டக் கும்பல்களோ, கான்ட், ஹெகல் கூட்டங்களோ வந்து விருப்பிட்டு என்னை இழிவு படுத்தித் தொலைக்காதீர்கள்.

என்னை மீறிச் செல்ல மட்டுமே என்னை வாசியுங்கள், உண்மை, தெளிவேதும் உங்களுக்குத் தேவையாக இருந்தால்.

பொதுவெளியை இல்லாதொழிப்பதே என் பொதுவெளி இருப்பின் முதல் நோக்கம். 

அல்லது நானும் இன்னொரு ஈனப் பிறவியாக மனித குல, இன்னுமும் ஆழமாகச் சொன்னால் நோக்கு வரலாற்று அவமானச் சின்னமாக இருப்பேன்.  

பின் தங்கிய சமூகத்தில் விருப்பக் குறியீடுகளின் எண்ணிக்கையோடு என்பதிவுகளின் தரம் தாழ்ந்துதான் போகும்.

விருப்பக் குறியீடுகளை நான் விரும்புவதில்லை. அது அடுத்தவர் அங்கீகாரத்துக்காக ஏங்குகிற பரிதாபத்துக்குரியவர்களின் அவா.

நான் செய்வது சரியா, தவறா என்பது உச்ச துல்லியத்துடன் எனக்கே தெரிகிற பொழுது அங்கீகாரம் எனக்கு அறவே வேண்டியதில்லை.
                                                                **************************************************************************

எழுதுவது, வாசிப்பது, புத்தகம் போடுவது (விற்பது) இவற்றின் மூலம் எல்லாம் தெளிவடைய முடியுமென்று நம்புகிற வளர்ச்சி மிகக் குறைந்த சிந்தனை முறை இன்னுமும் இருக்கிறது.

மேம்பட்ட சிந்தனை மட்டத்தவர்கள் ஏதேனும் ஒரு உருப்படியான புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தால் (அது ஆயிரம் பக்கங்கள் இருக்கிறதெனக் கொள்க)  முதல் மிகச் சில (பொதுவாக பத்து அல்லது அதற்கும் கீழ்) பக்கங்களை வாசிப்பதை மட்டும் கொண்டு மொத்தப்புத்தகத்தின் சாரத்தை உய்த்தறிகிறவர்களாக இருப்பார்கள். மிகுதி எல்லாம் வெற்றுக் கிசுகிசுக்கள்.

வரலாற்றுத் தகவல்களைக் கொண்டு 'உண்மையைத்' தெரிந்து கொண்டேன் என்று சொல்லுகிற அளவுக்குத் தெளிவற்றவர்கள் இருபத்தோராம் நூற்றாண்டிலும் இருக்கிறார்கள்.

மேம்பட்ட புத்தகம் எனின் அதுவும் மல்லுக்கு நிற்கும்.

நீ என்ன பத்துப் பக்கங்களில் என்னை விளங்குவது, நான் மூன்றே பக்கங்களில் என்னுடைய முக்கிய பகுதிகளை/அருஞ் செய்தியை (முழுமை, 100%, வட்டம் இவற்றின் வெளி கற்பனை) நான் தருகிறேன் என்று போட்டி போடும். கொஞ்சம் அறிவு மட்டம் குறைந்தவர்கள் 10 பக்கம். அதை விடக் குறைந்தவர்கள் 20 பக்கம் வாசிப்பார்கள்...

ஆகவும் குறைந்த சிந்தனை மட்டம் கொண்டவர்கள் கடைசிப்பக்கம் வரை வாசித்துக் கொண்டு.. வாசித்துக் கொண்டேஏஏஏஏ இருப்பார்கள். இவர்களுடைய வாசிப்புப் போதைக்கு இவர்கள்தான் மருந்து உருவாக்க வேண்டும்.

வரலாறு என்பது வெற்றுக் கிசுகிசு மூட்டை. கிசுகிசு வெறியர்கள் அதற்குள் உண்மைகளைத் தேடி மட்டான புரிதலுடன் திருப்தி அடைவார்கள்.

மீ-இயங்கியலாளர்கள் எந்தப் புத்தகத்திடமும் தோற்றுப் போகிறவர்கள் அல்லர். மூன்றே விதிகளில் எந்தப் புத்தகத்தின் சாரத்தையும் அவர்கள் சிறைப்படுத்துவார்கள்.

புத்தகத்தை மட்டுமல்ல  மொத்தத்துவத்தையும் அப்படியேதான்.

புத்தகம், மொத்தத்துவம்  என்று சந்தமாக எழுதுகிற இழி நோக்கமெல்லாம் எனக்குக் கிடையாது. நான் ஒன்றும் கலை இலக்கிய ஏமாற்றுப் பேர்வழி அல்ல. இது தற்செயல். 

இற்றைத் தேதியில் மீ-இயங்கியலின் அனைத்துக்குமான பொதுக்கோட்பாட்டு சாரம்/விதி/அடிக்கோளும்/கொள்கையும் "மூன்றே". 


1. எதனதும் ஆகக் குறைந்தது மூன்று

2. இது மூன்றாவது


எளிய விளக்கம்: ஒன்றுமற்றதை, ஒன்றை, இரண்டை, எதை எடுத்தாலும் ஆகக் குறைந்தது மூன்று தனித்தறியத்தக்க கூறுகள் இருக்கும். மீ--இயங்கியல் என்பதால் தனக்கும்/அதன் விதிகளுக்கும் அதையே கொள்கிறது.

'இடைநிலை' வளர எப்போதும் இடமளிக்கிறது/இடமிருப்பதை ஏற்கிறது/உறுதி செய்கிறது.

கடந்த வருட கோட்பாடுதான்.

அ->ஆ->அ<==> ஆ->அ->ஆ இந்த ஊடாட்டத்தில் இடைநிலையே வலுத்து வந்து மொத்த ஊடாட்டம் புதிய ஊடாட்டமாகிறது. அதாவது இங்கு இடைநிலையாயிருக்கிற <==> கூறே நிலைத்தன்மைக்கு வந்தடைந்து தன்னைக் காட்டிலும் அருவமான இன்னொன்றுக்கு வழி சமைக்கிறது.

புதியது உருவாவது இவ்விதமே.

இயக்கமும், இயக்கத்தின் இயக்கமும் ஊடாடுகிற பொழுது வருகிற நிலைத்ததன்மை - அதாவது அந்த ஊடாட்டமே நிலைத்தன்மையாக மாறுகிறது.

உதாரணத்துக்கு ஒரு மின்விசிறி மிக வேகமாகச் சுற்றுகிற பொழுது சார்பளவில் நிலைத்திருப்பதாகத் தோற்றுவதைப் போல.

நிலைத்த தன்மைக்குள் நுழைந்து பார்த்தால் மூன்று கூறுகள் தென்பட்டாக வேண்டிய விதியால் அது நிலைக்கிற பொழுதே அழிகிறது.

நிலைப்பை நோக்கி, அவ்விதம் நோக்கியதால் நிலையாமையை நோக்கி நகர்கிறது. இந்த மட்டுப்பாடு/விதி/திசை மூன்றாவதாக ஊடறுக்கிறது.

                                                                **************************************************************************

"இவைதான் விதிகள், விடுதலை வழி, பின்பற்றுங்கள்"  என்று சொல்ல/அறைகூவல் விடுக்க  நான் ஒன்றும் மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்ற எச்சை கிடையாது.

நான் எதை முன்வைத்தாலும் அதை முதலில் உடைத்தெறியும் பேராவலையும் என்னுள் உருவாக்கிக் கொள்கிறேன். அதி திருத்தமாகச் சொன்னால் பேராவலை உருவாக்கி, உறுதிப் படுத்திக் கொண்டுதான் முன்வைக்கவே செய்வேன்.

நான் டிபென்ட் செய்வதில்லை. இதை உடைக்க எவரைக் காட்டிலும் அதிகம் முயலப் போவது நாந்தான்.

அது வரையில், உடைந்தழியும் வரையில் இதை நான் எல்லா வெளிகளிலும் அவற்றின் அதியுச்ச, அதியாழ இயக்கங்களை விளங்க உபயோகித்துக் கொள்வேன். கொஞ்ச நாளில் தூக்கிப் போடுவேன்.

ஏதாவது ஒரு நோக்கு அதைக் கொண்டாடினால் அந்த சுய சிந்தனை, சுய-மரியாதை அற்ற அடிமைக்காக மிக வருந்துவேன்.

ஒவ்வொருவரும் தமக்கான தத்துவத்தையும் அனைத்துக்குமான பொதுக் கோட்பாட்டையும் உருவாக்க வேண்டும். அல்லது ஊத்தோப்பியா சாத்தியமில்லை. இதுவே என்னுடைய அறைகூவல். 

ஒரு தொடர்ச்சிக்காக கொம்யூனிசக் கட்டம் என்று பாவித்தேன். எனி எந்த மார்க்சிய சொல்லாடலையும் உபயோகிப்பதாக இல்லை. ஏனெனில் மார்க்சியம் விஞ்ஞான விரோத, மனித குல அழிவுக்கான இன்னொரு வரட்டுத் தத்துவம். எனி ஊத்தோப்பியாதான்.

அனைத்துக்குமான பொதுக் கோட்பாடே மீ-இயங்கியலாளர்களின் சிற்றிலக்கு. பேரிலக்கு அதி அற்புதமான தனிப்பட்ட வாழ்க்கை.

பொதுவெளி, குறிப்பாக அரசியல், பொருளியல் துறைகள் உதிர்ந்து ஒடுங்க மட்டுமே மீ-இயங்கியலாளர்கள் பொதுவெளியில், அவ்வவ் துறைகளில் பங்காற்றுவார்கள்.

மார்க்சியம் என்பது அடிப்படை நேர்மையற்றவர்களின் பிழைப்புவாதம். இவர்கள் பொதுவெளியில் அதிகாரம் தேட எதையும் செய்யத்தக்கவர்களாக இருப்பார்கள்.

அதி திருத்தமாகச் சொன்னால், அதிகாரம் தேடுகிற நேர்மையற்றவர்கள் மார்க்சியம், இயங்கியல் பொருள்முதல்வாதம் வரைக்கும் மிக இலேசாக வந்து விட முடியும்.

மீ-இயங்கியல் இத்தகையவர்களுக்கு எட்டாது. அதைக் கொண்டு இவர்களை நாம் மிக எளிதாகக் கண்டறியலாம்.

உச்ச பட்ச நேர்மையற்றவர்கள் தம் சொந்த சிந்தனையைத் துணிந்து பொதுவெளிக்கான புறவய மாதிரியை முன்வைக்க முயன்றால் பல காரணங்களுக்காக வெலவெலத்துப் போவார்கள். வெருண்ட கூட்டம்.

புத்தகங்கள் எழுதுகிறவர்கள், புத்தகங்களைப் பற்றி வண்டி வண்டியாக எழுதுகிறவர்கள், புத்தகங்களைக் கொண்டாடுகிறவர்களின் தெளிவு மட்டம் மிகக் குறைவு. இந்தப் பின்னணியில் அவற்றையெல்லாம் வாசித்துப் புகழுகிறவர்களைப் பற்றி சொல்லுவதற்கு இதமான வார்த்தைகள் என்னிடத்தில் குறைவு.

ஆரையும் நான் ஏமாற்றி, தந்திரோபாயங்கள் செய்து பிழைப்பதில்லை. மேற்சொன்னது போல கலை-இலக்கியம் எல்லாம் கூட மிக இழிவான தந்திரோபாயங்களே.

அதி உச்ச உண்மையை முன்வைப்பேன். நேர்மைத்திறமுள்ளவர்கள் பாய்ச்சல் நிகழ்த்துவார்கள்.

ஏனைவர்கள் பதறிச் சிதறுவார்கள். நொறுங்குவார்கள். என்னைக் கொல்லத் துடிப்பார்கள். இந்த ஈனர்களை நான் துச்சமாகக் கருதுகிறேன். 'ஒண்ட முகம் ஒனக்குத் தெரியுமாகா' என்று கேட்பேன் என்று பயந்தே இந்த அற்பர்கள் ஒழித்துத் திரிவார்கள்.

நேர்மைத்திறம் அற்ற முதலாளித்துவவாதிகள், சோசலிசவாதிகள், மார்க்சிய வழியிலான, இயங்கிய பொருள்முதல்வாத அடிப்படைக் கொம்மூனிஸ்டுகள் தட்டுத்தடுமாறி எங்காவது போய் பதுங்கிக் கொள்வார்கள். அவர்களுடைய அடிமைகளுக்கு மத்தியில் அவர்களுக்கு அத்தனை ஆனந்தம்.

தமக்கான அடிமைகளை வரித்துக் கொள்ளும் வெறியில் மார்க்ஸ், கிராம்ஸி, ஸொம்ஸ்கி, கான்ட், சித்தார்த்தன் (புத்தன் என்பார்கள் அடிமைகள்), ஈ வெ ரா (பெரியார் என்பார்கள் அடிமைகள்) முதலான அரைவேக்காடுகளின் முதல் தர அடிமையாகத் தம்மை வரித்துக் கொள்ள ஓடித் திரிவார்கள்.

அடிமைச் சங்கிலிகளை, சட்டகங்களை வரித்துக் கொண்டு, படிநிலைகளை உருவாக்கிக் கொண்டு, கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு அங்கேயே அழுந்தி கிடப்பதை விரும்புகிறவர்கள் முற்போக்கு வேசம் கட்டி ஆடக் கூடாது. 

இத்தகைய போலிகளை அடிப்பது என் கடமை. 

சரி, இந்த ஈனர்களை அவர்களுடைய குறுங் குமிழிகளுக்குள் அவர்களுடைய நேர்மையீனம் காரணமாக அழுந்திக் கிடக்க விட்டுவிட்டு மேலிருந்து கீழான அணுகுமுறையில் நாம், நேர்மையாக எதுவும் சிந்திக்க, செயற்பட விழைகிறவர்கள் செய்யக் கூடியவற்றைப் பார்ப்போம்.

1. அனைத்துக்குமான பொதுக் கோட்பாடு.

அரசியல், பொருளியல் வெளி/துறைகளை இது தேவையற்றதாக்கும்.

இதற்கான நேர்மைத்திறமான சிந்தனை இல்லாதவர்கள், ஆழமான சிந்தனை கண்டு மிரள்கிற கோழைகள் இரண்டாம் நிலைக்கு இறங்கலாம்.

2. Clay Institute of Mathematics, Millennium problems

தனிப்பட்ட முறையில் சொன்னால் அந்தப் பட்டியலில் நான் முதலில் அணுக விழைவது P vs NP தான்.

அதி அருவ நிலையில் அது என்னுடைய தத்துவ, அரசியல் சார்ந்த பிரச்சினை. 

தாமாக வந்தடையாவிட்டாலும், விளக்கினால் விளங்கிக் கொள்ளத் தக்கவர்கள் தாமாக வந்தடையத் தக்கவர்களாய் இருந்திருந்தவர்களா?

[நேர்மையற்ற அடிமைகளை வளர்த்து விட்டால் அதைப்போல ஆபத்து ஒன்றுமில்லை. 'முன்னணிப் படையின் முன்னணிப்படை' லெனினிய கேலிக் கூத்துக் கோட்பாடுகளை குறைந்த பட்ச தெளிவிருந்தாலும் மறுத்தான் ஆக வேண்டும்.]

தாமாக ஒன்றை ஈட்ட முடியாவிடினும் சரிபார்க்க அவர்களால் முடியுமாயிருக்குமா?

உதவி எதுவுமின்றி வந்தடைய விட வேண்டுமா அல்லது விளக்கி விரைவு படுத்தவா?

இதற்கும் இயலாதவர்கள், வேண்டிய நேர்மைத் திறன் அற்றவர்கள் அடுத்ததுக்கு இறங்கலாம்.

3. அனைத்துக்குமான பொது வரைவுகள்/வரைவிலக்கணங்கள்

இயக்க அடிப்படைகளிலிருந்து ஒவ்வொரு சிந்தனை/கருத்து/எண்ணத் துகளுக்குமான உச்சபட்ச துல்லிய வரைவிலக்கணங்கள்; புறவயவெளியில் பல சொல் -> ஒரு பொருள் திசையிலும் அகவயவெளியில் ஒரு சொல் -> பல பொருள் திசையிலும் நகரும்.

புறவயவெளியும் அகவயமும் ஒன்றை ஒன்று உந்தி ஒன்றன் மீது ஒன்று கட்டமையும். சுருங்குவது புறவயத்துக்கு உவப்பானது. பரந்து விரிவது அகவயத்துக்கானது. புறவயம் ஒடுங்கி உயர உயர அதன் மேல் ஏறி விரிய அதிக வெளி அகவயத்துக்குக் கிடைக்கிறது. அகவயம் விரிவடைய விரிவடைய புறவயம் புதிய திசைககளில்/பரிமாணங்களில் கிளைக் குச்சிகளை நீட்டுகிறது.

இவையும் இவற்றை ஒத்தவையும் முடியாதவர்களுக்குத் தமது குறைந்த பட்ச நேர்மையை நிரூபிக்கும் கடைசி வாய்ப்பு அடுத்தது. 

4. தன்னுடைய சிந்தனையை பொதுவெளியில் வெளிப்படையாக மாதிரி செய்து முன்வைத்து, தன்னுடைய பொதுவெளிப் பிரசன்னத்தைத் தேவையற்றதாக்குவது.

அதிவிரைவில் அதைச் செய்யும் முனைப்பை ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் சிந்தனைத் துகளிலும் தெறிக்க விடுவது.

தவிர்க்க முடியாத கடமை மட்டுந்தான் பொதுவெளிக்கு ஒருவரைக் கூட்டி வர வேண்டும். பிழைப்பு நடத்தவும், வரலாற்று, வெற்றுத் தகவல்கள், மார்க்சிய, இயங்கியல் பொருள்முதல்வாத கிசுகிசு கதைக்கவும் வருகிறவர்கள் அருவருப்பான எச்சைகள். 

                                                                **************************************************************************

நாம் செய்யத்தக்கவை வரிசையில் மேற்படி பட்டியலுக்குக் கீழே ஒளியாண்டுகள் கீழேதான் இடதுசாரியம், மார்க்சியம் எல்லாம் இருக்கிறது. இவற்றுக்கு ஓரிரு மில்லிமீட்டர்கள் கீழே இந்துத்துவா முதலிய அடிப்படைவாத சங்கிக் கூட்டமெல்லாம் இருக்கிறது. 

இங்கிருந்து பார்த்தால் எல்லாரும் ஒரே மட்டமாகத்தான் தோற்றுகிறார்கள். நாந்தான் வலிந்து அந்த மில்லிமீட்டர்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறேன். அதே கீழ்த்தர உத்திகள். பிரித்தாளுதல், எதிரிக்கு எதிரி நண்பர், தந்திரோபாயம்...

என்னைப் புரிந்து கொள்ளாமல், "ஐயோ தட்டையாகப் பார்க்கிறான், மலையை மடுவை ஒப்பிடுறான்" என்று பொருமுவார்கள். பல் பிரபஞ்சங்களை ஒடுக்கிப் பார்க்கிற பொழுது மலையாவது மடுவாவது. 

வாய்ப்புகள் கிடைத்தும் இவர்களால் ஏன் நேர்மையாக ஒரு எருப்பன் ஏனும் இருக்க முடிவதில்லை என்று சமயங்களின் நான் வருந்துவதும் உண்டு.

நான் எழுதுவதைப் பார்த்து இந்தப் புத்திசாலிகள் சிரிப்பார்கள். ஏனெனில் நான் எல்லோரையும் (பொதுவெளியிலிருக்கிற அனைவரையும்) ஒருமிக்க எதிர்க்கிறேன். ஒருபோதும் ஆரையும் தனிக்கச் செய்து தாக்குவதில்லை. 

பிரித்தாள நான் கேவலமானவன் இல்லை. ஏனெனில் அருவருப்பான தந்திரோபாயங்களைக் கையாள நான் ஒரு மார்க்சிய லெனினிய எச்சை கிடையாது.

அதி திருத்தமாகச் சொன்னால் அருவருப்பான தந்திரோபயங்களென்று ஒன்றுமில்லை. எல்லாத் தந்திரோபாயங்களும் அருவருப்பானவையே. இது மார்க்சிய சட்டகத்தினருக்குப் புரியாது. ஏனெனில் அதன் மொழியே 'முரண்கள்', 'போராட்டம்', 'அதிகாரம்' என்றுதான் இருக்கும்.

'முரண்கள்' இருக்கிற இடத்திலெல்லாம் ஒடுக்குமுறை இருக்கும் என்றெல்லாம் நம்புகிறவர்கள் இந்தக் காலத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

போராட்டம் அற்றுப் போவதற்காக மட்டுமே, கடைசித் தெரிவாக மட்டுமே போராட்டம் என்று சொல்ல இவர்களிடம் உண்மைத்தன்மை கிடையாது. 

பிரச்சினைகள் குறைந்தால் தம் பிழைப்பு என்ன ஆவது என்பதான் இவர்களுடைய பிரச்சினை. இத்தகையவர்களே பெரிய பிரச்சினை.

தன்னுடைய பிம்பத்தைப் பொதுவெளியில் வளர விட்ட, விடுகிற, விடப் போகிற எவரும் முற்போக்கு என்ற பதத்தைப் பயன்படுத்தவே அருகதை அற்றவர்கள். மார்க்ஸ் முதலானவர்கள் படு பிற்போக்குக் குப்பைகள். 

மறுபடி அழுத்துகிறேன். எனக்கு இந்தப் பொதுவெளியிலிருந்து விடுதலை வேண்டும். தனிப்பட்ட வாழ்வில் நான் எவ்வளவோ செய்தாக வேண்டும். என்னுடைய பட்டியல் மிகப் பெரியது.

அதற்காக என்னுடைய பொதுவெளிக் கடமைகளை (அவை இரண்டாம் பட்சமாக இருப்பினும்) உதாசீனம் செய்கிறவன் நான் அல்ல. பொதுவெளிச் செயற்பாடு அனைவரைப் போலவே எனக்கும் இப்போதிருக்கிற படு பிற்போக்குச் சமூகத்தில் கட்டாயமானது. 

இரண்டையும் மிகத் துல்லியத்துடன் திருப்திப்படுத்தி, பொதுவெளியை அழித்தொழிக்கிற ஒரே நோக்கத்துக்காகப் பொதுவெளியில் இயங்குகிறேன்.

எனக்கு உதவ விரும்புகிறவர்கள் நேர்மையாகச் சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். ஏன் ஆரம்பிக்க வேண்டும் என்று அறைந்து சொல்லுகிறேன் என்றால் என்னுடைய அவதானத்தில் உருப்படியாகச் சிந்திக்கிறவர்களைக் காண்கிலேன் இல்லை. நேர்மையை ஆரும் ஆருக்கும் கடத்த முடியாது. அது அவரவர் தெரிவு.

இந்தப் பதிவில் நான் 'மேல்-கீழ்' கருத்தாக்கம் செய்கிறேன். கீழ்மட்டம் என்கிறேன். 'துச்சமாக' மதிக்கிறேன் - இவ்விதம் 'உயர்வு-தாழ்வு' கருத்தாக்கத்தை எந்த மட்டத்தில் நாம் அதி திருத்தமாக வரைவு செய்ய முடியும்?

"இவன் எவ்விதம் இப்படியெல்லாம் எழுத முடியும்? இவனை விட ஆழமான வரையறையை நான் காட்டி இவனை மேவிப் போவேன்" என்று இன்னேரம் சிந்திக்க ஆரம்பித்திருந்தீர்களானால் உங்களுக்குள் குறைந்த பட்ச தேடல் இருக்கிறது. சுய-மரியாதை இருக்கிறது. தன்னம்பிக்கையும் துணிவும் இருக்கிறது.

அல்லது எனக்கு அடிமையாகவே இருந்து தொலைத்துவிடுவீர்கள். அடிமைகளை மேய்க்க நான் மார்க்சியவாதி அல்லன். ஆழமான, உறுதியான உண்மைகளால் அடித்துத் துரத்துவேன்.

எல்லாவற்றையும் விளக்காமல் அவரவர் அவரவர் வழிகளில் மீ-இயங்கியலை வந்தடைய வேண்டும் என்றே விரும்புகிறேன்.

நேர்மையை உபயோகித்தால் அது தன்னால் நடந்தேறும். நான் தேவையே இல்லை. ஆரும் தேவையில்லை.

கற்றல், படித்தல், ப்ராக்டிஸ் பண்ணுதல் இவையெல்லாம் குன்றிய மனநிலையின் வெளிப்பாடுகள் - தெரிவது, உயயோகிப்பது இவையினூடு புரிந்து கொள்வது அவ்வளவுதான்; நான் எதையும் உபயோகிப்பேன்.

ஒரு பிடி தகவல் போதும் மொத்த அறிவுப் பிரபஞ்சத்தையும், ஆர்முடுக்கும் வேகத்தில் விரியத்தக்க தெளிவுப் பிரபஞ்சத்தையும் உருவாக்க. 

சிந்தனை வளர்ச்சி மிகக் குறைந்தவர்களோ பக்கம் பக்கமாக வாசித்துக் கொண்டும் எழுதித் தள்ளிக் கொண்டும் புத்தகங்களை விற்றுக் கொண்டும் இருக்கிறார்கள்.

இன்றில்லாவிட்டால் நாளை, அல்லது அடுத்தடுத்த தலைமுறைகள், மனிதர்கள் இல்லாவிட்டால் வேறு ஏதெனும் நோக்கு  நான் சொல்லுகிறவற்றைப் புரிந்து கொள்ளும்.

எந்தப் பிரபஞ்சத்திலும் எக் காலத்திலும் காலமற்ற நிலையிலும் தோன்றத்தக்க அனைத்து நோக்குகளுக்கும் (தம்மை வேறுபிரித்தறியத்தக்கவை) நான் சொல்லுவது பொது...

புரிதலை ஓரளவுக்கு விரைவுபடுத்த அவ்வப்போது கொஞ்சம் எழுதுவேன்.

மானிட விடுதலைக்காக, சமூக விடுதலைக்காக உண்மையாகவே ஏதாவது பங்களிக்க நினைக்கிறவர்களுக்கு இந்தப் புரிதலின் தேவை தவிர்க்க முடியாதது.

அல்லாதவர்கள் மெனக்கெட வேண்டியதில்லை. பிம்பத்தைக்  கட்டிப்/காட்டிப் பிழைப்பு நடத்தலாம். அடுத்தவருக்கு ஆலோசனைகளை அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருக்கலாம்.

ஓரிரு மாதங்களுக்கு மேல் மார்க்சியத்தையும் அடிக்க மாட்டேன். இப்போது கொஞ்சம் பொருட்படுத்துவது, சங்கிகளை விட மார்க்சியர்கள் ஓரிரு மில்லி மீட்டர்கள் மேம்பட்டிருப்பதால் அடித்துப் புடம் போடுகிறேன். சில வாரங்களில் மார்க்சியத்தை, இயங்கியல் பொருள்முதல்வாதத்தைக் கணக்கிலும் எடுக்க மாட்டேன்.

உண்மையில் ஆர் அதிகம் கீழே இருக்கிறார்களோ அவர்களையே நான் அதிகம் பொருட்படுத்தேன். மார்க்சியம் போல மேம்போக்கான தத்துவங்களை நான் உருவாக்குவதில்லை. மார்க்சியர்கள் அதிகாரத்துடன் (அறிவு, பொருள், அரசு) சாயத் துடியாய்த் துடிப்பவர்கள். படுபிற்போக்குவாதிகள். மார்க்சியத்திலும் தாழ்வான ஏனைய அடிப்படைவாதங்களை இன்னுமும் ஆழமாக அணுகுவேன்.  அதற்கு அதிக நேரம் செலவழிப்பேன். 

அடுத்த வருசத் திட்டம் Auto-Dialectics. தானியக்கமாக அது இயங்கினால் எனக்கான பொதுவெளி விடுதலை துரிதமடையும்.

என்னுடைய தத்துவத்தின் பெயரை, பதங்களை, பத்திகளை, உத்திகளை, விதிகளைப் பிடித்துக் கொண்டு பின்னவீனத்துவவாதி போலத் தொங்கிக் கொண்டிருந்தால் ஒரு துகளும் விளங்காது, என்னைத் தாண்டியும் போக முடியாது. 

என்னுடைய அடிப்படை அதியுச்ச நேர்மை. அது இருக்கிற வரையில், உடலில் இயக்கமும், சிந்தனை ஆற்றலும் இருக்கிற வரையில் என்னுடைய சிந்தனை பிரபஞ்சத்தைக் காட்டிலும் அதிகம் ஆர்முடுகும்.

என்னுடைய நேர்மையைத் தாண்டிப் போங்கள். என்னுடைய சிந்தனை குழந்தமை அடைந்து மகிழும். அந்த சந்தோசத்துக்காக ஏங்க நேர்ந்திடுமே என்கிற சாதுவான பயம் இருக்கிறது.

தெளிவு, நேர்மை வெளியினுள் ஒரு போதும் நாம் படிகுறைத்துக் கொள்ளக் கூடாது. மார்க்சியம் போன்ற மீச் சிறு சட்டகத்தினுள் சென்று நான் அடைய முடியாது. அவர்கள்தான் நேர்மை, சுய மரியாதை, தன்னம்பிக்கைக் கயிறுகளை எறிந்து மேலேற வேண்டும்.

மேலேறி வந்து பார்க்கிற பொழுது மீ-இயங்கியல் எந்த இழப்புமின்றி இது வரைக்கும், எனியும் வரப் போகிற சிந்தனைத் துகள்களை ஆள்கிறதைப் புரிந்து கொள்வார்கள்.

அது அல்லது இது மட்டும் என்கிற மட்டான கூத்தும் கயிறு இழுத்தலும் இந்த மட்டத்தில் இல்லை.

ஓஷோ ரஜனீஷ் என்கிற எச்சையின் ஒரு கதையில் மாட்டுச் சாணியில் சூட்டுக் ஒண்டுகிற குருவியின் கதை வரும். ஆனந்த மிகுதியில் பாட்டுப்பாடி அது பூனையிடம் மாட்டிக் கொள்ளும். 

வசதியாக இருந்தால் அப்படியே இரு என்கிற அந்தக் கேவலமான கதை எல்லா மார்க்சியர்களுக்கும் மிகப் பொருத்தமானது.

தமது நேர்மை மட்டத்துக்கு, அதிகார வலையமைப்புக்கு எது வசதியோ அதற்கேற்ப பூசி மொழுகிக் கேவல அரசியல் செய்து கொண்டு முற்போக்கு நாடகம் போடுவதை இவர்கள் கைவிட வேண்டும்.

அறிவை, தெளிவை trickle down செய்து கொண்டு, தகவலைக் கொட்டி மனிதர்களையும் (தாங்கள் அடங்கலாக) வெட்கமின்றி ஏய்த்துக் கொண்டு கீழ்த்தரமான மனிதர்களாக எனியும் இராதீர்.

மார்க்சியர்களை இவ்வளவு மட்டமாக ஏசுகிறேனே என்று எந்த விளக்கங் கெட்டதாவது, அல்லது விளக்கமடைய வாய்ப்புக் கிடையாத என் மரியாதைக்குரிய நபர், யோசித்தால்,

என்றைக்காவது மார்க்சியர்கள் தங்களுடைய ஒடுங்கிய ஓரிரு தெரிவுகளுக்கு மேல் உங்களை அனுமதித்திருக்கிறார்களா?

கேவலம் நோம்ஸ் சொம்ஸ்கிக்கே இதெல்லாம் புரிகிற பொழுது உங்களுக்கு விளங்காதா?

கேவலம் பெர்னாட் ரஸலுக்கே லெனின் ஒரு  அடிமுட்டாள் என்பது புரிகிறது.

புத்திசீவிகள் என்று சொல்லிப் பேய்க்காட்டிக் கொண்டிருக்கிற உங்களுக்கெல்லாம் புரியாதது ஆச்சரியந்தான். 

என்றைக்காவது நான் சொல்லுகிற மட்டத்தில் பங்களிக்க எந்த மார்க்சிய லெனினிய எச்சையாவது அறைகூவல்/அழைப்பு/ஏற்பு விட்டிருக்கிறதா?

இவர்கள் அடிமட்ட எச்சைப் பிழைப்புவாதிகள் என்பதில் எனக்கு எதுவித சந்தேகமும் கிடையாது. மனித குல விரோதிகள். தெளிவற்ற, ஆபத்தான பிற்போக்காளர்கள். இதைச் சொல்லியாக வேண்டியது என்னுடைய நேர்மையின் இருப்புகுத் தேவையானதாகும். அடுத்தகட்டச் சிந்தனைக்கும் அதற்கும் மேலும் போக இது அத்தியாவசியம்.  

இதில் வலதுசாரி-இடதுசாரி என்றெல்லாம் அஜித்-விஜய் சண்டை வேறு.

இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இடதுசாரிகளுக்கு கொஞ்சம் அறிவு இருப்பதால் சார்பளவில் முற்போக்களாராக நடிக்கிறார்கள். வெற்றி பெற்ற, பெறப் போகிற பக்கத்தில் இருக்க வேண்டும் என்கிற அவாவில் கட்டமைத்த போலி வேசம் இதுவே ஒழிய அங்கொன்றும் தெளிந்து வந்ததல்ல. 

புத்திசீவிகள் என்று சுத்திக் கொண்டிருக்கிற மோட்டுக் கூட்டம் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பிப்பது நல்லது. முதற்கட்டமாக வாசிப்பதை மூன்று நாலு மாசம் நிறுத்தித் தொலையுங்கள். அடி முட்டாள்தனம் சகிக்க முடியாத எல்லைகளைத் தொடுகிறது. ஆழமாகச் சிந்திப்பதை தெளிவுக்கான முதற்பாதையாக உபயோகியுங்கள். 

2018 மூன்றாவது மாதத்திலிருந்து மிக வெளிப்படையாகவேதான் இதைச் சொல்லுகிறேன். எந்த உருப்படியான மறுப்பும் எவராலும் எழுத முடியாது. அவ்வளவுதான் இவர்கள். 

ஏதோ உலகத்தைக் காப்பாற்றப் போகிறவர்கள் போல அரக்கப் பரக்க ஓடிக்  கொண்டிருப்பார்கள். உருப்படியாக ஒரு துரும்பும் நகராது. தெளிவேதுமிருந்தால் அல்லவோ எதையும் வந்தடைய முடியும்.  

சார்பளவில் முற்போக்காளராய் எல்லோருமே ஒவ்வொரு சூழமைவிலும் இருக்கிறார்கள். முற்போக்காளாராய் இருக்க பண்பு மாற்றங்கள் பல வேண்டும். அளவு மாற்றங்கள் வேலைக்காகாது. 

                                                                **************************************************************************

எவருக்கும், எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் அதிசிறந்த, ஆகவும் சிறந்தவை கிடைக்கவேண்டும் என நினைப்பது மீ-இயங்கியல் சிந்தனை. 

எவரும் தமது அதியுச்ச நிலையில் பங்களிக்க முடியாமிருக்க வேண்டுமென்பது மீ-இயங்கியல் நிலைப்பாடு.


மடத்தனமாக, மட்டுப்பாடான சட்டகங்களைப் போட்டு வைத்துக் கொண்டு அப்படியானால் 'மார்க்சியம் தவறா', 'எல்லா அறிஞர்கள் சொன்னதும் தவறா, அமைப்புக்களின் பெயர்களை மாற்றுவதா' என்றெல்லாம் உளறக் கூடாது. கயமையான அசியங்க அரசியல். 

நான் பொதுவெளிக்கு வாருங்கள் என்று கூப்பிட்டால் அதியுச்ச, அதி சிறந்த மாற்றங்களைத் தான் முதலில் முன்வைப்பேன். மற்றதெல்லாம் பிறகுதான்.

முற்போக்காளர்கள் நீங்கள் எவ்வளவு கீழ்த்தரமான, எச்சை அரசியல் செய்து வருகிறீர்கள் என்பதையும், உங்களுக்கு அடுத்தவர்கள் செய்கிற அருவருக்கத்தக்க அரசியலையும் நிதானித்து சிந்தியுங்கள். 

தயவு செய்து சிந்தியுங்கள் என்று சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் எனக்கு இல்லை.

சிந்தித்தித்துத் தொலை. 


மார்க்சியம் சிந்தனையின் வறுமை. செயற்பாட்டின் வறுமை. கயமையின் உச்சம். நேர்மையற்றவர்களின் இன்னொரு புகலிடம். 

இயங்கியல் பொருள்முதல்வாதம் ஒரு மீச் சிறு குமிழி. உங்களால் இயற்றப்படுகிற உங்களின் நேர்மை ஒன்றே உங்களை விடுவிக்கும். 

எல்லையற்ற நேர்மையுடன் அல்லது எல்லையற்ற நேர்மைக்காக அடுத்த அடியை எடுத்து வையுங்கள். 


25/10/2019


                                                                **************************************************************************
                                                                **************************************************************************

இந்த வருசத்துக்கான கடைசி அரசியல் கோட்பாட்டுப் பதிவு இதுதான்.

எனகெந்த அரசியல் பிணைப்பும் பலமும் அதிகாரமும் கிடையாது. அதனால் மட்டுமே நான் ஆகவும் சிறந்த இடதுசாரியாக(வும்), ஆகவும் சிறந்த மார்க்சியவாதியாக(வும்) இருக்கிறேன். எனக்கும் ஏனையவர்களுக்குமான அடிப்படை வெறுபாடு நான் என்னை இந்த மட்டுப்பாடுகளுக்குள் குறுக்கிக் கொள்வதில்லை. அவர்கள் நேர்மையீனம் காரணமாக அதைத் தொடர்ந்து செய்கிறார்கள்.

நான் ஒன்றும் பொதுவெளியின் அடிமையல்ல. மாசக் கணக்கில் வராமல் இருந்திருக்கிறேன். வருசக் கணக்கில் எதையும் வாசிக்காமலும் இருந்திருக்கிறேன்.

நேர்மையாகச் சொன்னல் இப்போது நான் சிந்தனைக்கு மட்டுமே அடிமைப்பட்டிருக்கிறேன். சர்வ நிச்சயமாக அதையும் வெற்றி கொள்வேன்.

என்னுடைய அதி அற்புதமான தனிப்பட்ட வாழ்க்கைப் பதிவுகள் மட்டுமே எனி இருக்கும். :)

25/10/2019

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home