Friday, March 9, 2018

இயங்கியல் புரிதலை உறுதிப்படுத்த இரு எளிமையான கேள்விகள்

புதிய (அதி திருத்தமான) இயங்கியல்  தொடர்பான அனைவருக்குமான இறுதிப் பதிவு. எனி கணினி, கணித வெளிகளுக்குள் இட்டுச் செல்லவும், புத்தகங்களாகக் கொண்டு வரவுமே செயற்படுவோம். மிகப் பொறுமையாக எங்களது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுரண்டாதே அதை நாம் செய்வோம். 

சென்ற வார எங்களுடைய ஆய்வு வேகத்தை இயங்கியல் வழி விளக்கல் பதிவிலிருக்கிற மிக முக்கிய பகுதி. தனியாக்கி ஓரிரு விசயங்களை மேலும் சேர்த்திருக்கிறோம். 

நமக்குப் புலனாவதே, நமக்குத் தோற்றுகிற அளவே, நமக்கு விளங்குவதே அனைவருக்குமானது என்கிற தவறான சிந்தனை வேண்டாம்.

இந்த வேறுபாடுகள் இயல்பானவை. இயக்கம் சார்ந்தவை. ஆனால் இச் சார்பு நிலையை விஞ்ஞான பூர்வமாக அணுகமுடியும். சார்பு இயக்கங்களைப் புரிந்து கொள்வதனூடு அவற்றைப் புறவயப்படுத்துகிறோம் (இயங்கியல் வழி புரிதல், கணித, விஞ்ஞான வழி புறவயப்படுத்தல் - இரண்டும் மறுபடி இயங்கியலாகவே ஒடுங்கும்).

சார்புக் கோட்பாடுகள் (Special Theory of Relativity and later the General Theory of Relativity) வந்த பொழுது முழு புறவய எதார்த்தம் (அனைவருக்கும், அனைத்துக்கும் பொதுவான புறநிலை எதார்த்தம்) என்கிற மார்க்சிய நிலைப்பாட்டை உடைத்துவிட்டதாக பல எதிர்ப்புக்கள், புத்தகங்கள்  வெளியாயின. இன்னுமும் அப்படியான புத்தகங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன்.

இது இயங்கியலிலிருந்து மார்க்சியத்தை (மார்க்ஸ் முதலானவர்களின் முறை மற்றும் முடிவுகள்) அணுகாமல் மறுதலையாக அணுகியதால் வந்த விளக்கக்கேடும் அடிப்படைவாதமுமே.

தத்துவத்தளத்தில்/சிந்தனை வெளியில்  இப்போது மார்க்சியம் முழுவதுமாக மீறிச் செல்லப்பட்டிருக்கிறது.

இதை அறிவித்த பின்னரும் கூட மறுபடி மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ என மேற்கோள்கள் காட்டி 'ஆதாரங்களை' முன்வைப்பது மிக மேலோட்டமான சிந்தனை.

இயங்கியலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

இது வரையிலான மார்க்சியர்கள் இயங்கியலை முறியடித்து வந்தார்கள். "இன்னாரின் இயங்கியல்" என்று சொல்லுவதில் எமக்கு உடன்பாடில்லை.

அடைமொழியினூடு இயங்கியல் அடையாளப்படாதது. 

இயங்கியலின் படி புறவயம் தொடர்ந்து புறவயப்பட்டும், அகவயம் தொடர்ந்து அகவயப்பட்டுமே இயங்கும்.  எளிமையாகச் சொன்னால் புறவயவெளி பல மொழி ---> ஒரு பொருள் திசையிலும் அகவயவெளி ஒரு மொழி ---> பல பொருள் திசையிலும் தொடர்ந்து நகரும்.

என்ன அடைமொழியோடு, எப்படிச் சொன்னாலும் இயக்கத்தைப் புரிந்து கொண்டு சொன்னால் அது சரியானதே (பல மொழி ---> ஒரு பொருள் (ஒரே இயக்க வரைவு)) 

மார்க்சிய இயங்கியல், பொருள்முதல் இயங்கியல், இயங்கியல் பொருள்முதல்வாதம், மாவோவின் இயங்கியல், லெனினின் இயங்கியல் இவை எல்லாவற்றினதும் அடிப்படை இயக்கம் ஏறக்குறைய ஒன்றுதான்.

அது பருப்பொருள் என்கிற சாரா மாறியிலிருந்து கருத்து என்கிற சார் மாறிக்கு வந்தடைவது.

இயங்கியலில் சாரா மாறி  (independent variable) என்பது கிடையாது.

ஹெகலியர்கள், மார்க்சியர்கள் இற்றைத் தேதி வரையில் பயன்படுத்துகிற முக்கூற்று ஏரணம் ஒரு உள்ளார்ந்த எடுகோளை முன்வைக்கிறது. அது இயங்கியலை 'முடிவற்றதாக்குகிறது'.  அந்த முன்வைப்பைப் புரிந்து கொண்டு அந்த எடுகோளை நீக்கும் விதமாக, ஆனால் தவறான முடிவாக ஹெகல், மார்க்ஸால் இணைக்கப்பட்டதே கருத்தும், பருப்பொருளும்.

இது இயங்கியலை முறித்து வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது.

1. முக்கூற்று ஏரணத்திலிருக்கிற (Dialectical Triad, Not Syllogism, The correct term might be 'இயங்கியல் மும்மை/முக்கூற்று ', முக்கூற்று ஏரணம் அரிஸ்டோடிலின் Syllogism'க்கு வழக்கத்தில் இருக்கிறது ), அதை முடிவற்றதாக்குகிற, அதி உள்ளார்ந்த (ஆனால் மிக வெளிப்படையான) அந்த எடுகோள் என்ன?

2. அதை நாம் எவ்வாறு இயங்கியலைக் கொண்டே "புதிய" இயங்கியலில் (இதுதான் ஒரே இயங்கியல்) திருத்தியமைத்தோம்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடையளிக்க முயன்றால் உங்களுக்கு இயங்கியல் பிடிபட்டுவிட்டது. 

இதற்கு விடையளிப்பதனூடே (அதற்கு மிக முயல்வதன் ஊடே), பருப்பொருள், கருத்து முதல் முடிவுகள் ஏன் தவறானவை என்பதையும் இயங்கியல் பொருள்முதல்வாதம், மார்க்சியம் ஏன் சிந்தனைவெளியில்  முழுவதுமாகப் பின் தள்ளப்பட்டது (முழுமையாகத் தகர்ந்தது) என்பதையும் புரிந்து கொள்வீர்கள். 

இந்த இயங்கியல் மிக மிக மிக முக்கியமானது.

அதனால் மட்டுந்தான் இது வரையில் 'tag' செய்யாதிருந்த நாங்கள் பலரை 'tag' செய்தோம்.

இந்த இயங்கியல் அனைவருக்குமானது. இதிலிருந்து வருகிற முடிவுகள், திட்டவட்டங்கள், சூத்திரங்கள் எவையும் காப்புரிமைக்குக் கீழே போய்விடக் கூடாது. அவையெல்லாம் அனைவருக்கும் பொதுவானதாய் இருக்க இது பற்றிய விழிப்புணர்வு முன்கூட்டியே வருதல் அவசியம்.

Nila & Kana
10/03/2018
12:23 PM SGT


பிற்சேர்க்கை: ஏற்கனவே  பல தடவைகள் எழுதிய விடயமே. எந்த ஆழமான ஆய்வையும் மேற்கொள்கிற பொழுது உங்களுக்கு இருக்கிற சிந்தனைச் சட்டகத்தைக் கண்காணித்து தொடர்ந்து முன்னேற்றுங்கள். இவ்வகையில் புரிதல்/கற்றல் வேகம் நேரடுக்குகளில் நிகழும்.


11/03/2018
13.04 SGT

மூன்றாவது மிக எளிய கேள்வி. 

அளவு மாற்றம் ---> பண்பு மாற்றம் என்கிற மார்க்சிய (தவறான) இயங்கியல் வாய்ப்பாட்டை புதிய (சரியான) இயங்கியல் உடைத்து விட்டது. 

கேள்வி: பழைய, மார்க்சியர்களின் (தவறான) இயங்கியலைக் கொண்டு அளவு மாற்றம் பண்பு மாற்றமானது எப்படி என விளக்குக? அதாவது கால மாற்றமின்றி பண்பு சடுதியாய் மாறியது எப்படி என்பதை விளக்குக. 

புதிய இயங்கியல் மிகத் தெளிவாக விளக்கி விட்டது. 

-Nila

Monday, March 5, 2018

எங்களுடைய ஆய்வு வேகத்தை இயங்கியல் வழி விளக்கல்


எங்களுக்கு எவரும் எந்தப் பண உதவியும் செய்வதில்லை. செலவீனம் மிகுந்த நாட்டில் பல மணிநேரம் கூலி அடிமையாய் உழைத்து கொஞ்சமாய் மிச்சம் பிடிக்கிற தனிப்பட்ட நேரத்தில் ஒரு பகுதியைத்தான் இந்த ஆய்வுக்கும் பயன்படுத்துகிறோம்.

அது மிக மெதுவாகவே நகரும்.

வாரத்தில் மூன்று நான்கு மணித்துளிகளே ஒதுக்க முடியும்.  காலம் என்பதை வரைவு பிடித்த முதல் தத்துவமாக இயங்கியல் இருக்கிறது. இயங்கியலாளர்களின் மூன்று-நான்கு மணித்துளிகள் 'வழமையான' மூன்று-நான்கு மணித்துளிகளை விடவும் மெதுவாக நகருகிறது. இப்போது நாம் இருக்கிற இயங்கியல் மட்டத்தில் இந்த வேறுபாடு மிகக் குறைவும் புறக்கணிக்கப்படத்தக்கதுமாகும். ஆனால் இயங்கியல் போக்கில் இது வெளிப்படையாகும்.

நாம் வலிந்து, தனிப்பட்ட வெளியைச் சுரண்டி இந்த (அதியுச்ச முக்கியத்துவமான) ஆய்வை மேற்கொள்ள முயலப்போவதில்லை.

இயங்கியல் வழியே அதை விளக்கவும் முடியும்.

இயங்கியல் பாலபாடத்துக்கு வருவோம்.

ஏன் கருத்துமுதல்வதம் கூடாதென்கிறோம்?

கருத்துமுதல்வாதம் என்பது சிந்தனையில் தொடங்கி சிந்தனையில் முடிந்து கொண்டிருக்கிற இயக்கச் சுழல்கள்.

[வழமையான ஹெகல், மார்க்சிய கருத்துமுதல், பொருள்முதல்களின் 'அனைத்துக்குமான' வெளி ஒவ்வொரு இயக்கச் சுழலுக்குமாக 'மட்டறுக்கப்பட்டன']

இவை புறத்தைக் கவனியாது. தனிமனித தளத்தில் சொன்னால் உணவு முதலிய புறத்தேவைகளைக் கவனியாமால் சிந்தித்துக் கொண்டே இருப்பது.  இது உடலைக் கெடுத்து, உடம்பைக் கொல்வதன் மூலம் தற்கொலை செய்து கொள்ளுகிற சிந்தனையாகும்.

[கார்ல் பொப்பரின் தத்துவங்களை இயங்கியல் கொண்டு மிக எளிதாக விளக்கவும் முடியும். மேற்படி பாலபாடத்தை அவரின் சகிப்புத்தன்மை, சகிப்பின்மை தத்துவத்துக்குப் பொருத்திப் பார்க்க ஊக்குவிக்கிறோம். ]

நாம் இயங்கியலைப் புறவயப்படுத்த நமது தனிப்பட்ட வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ள விழையக் கூடாது. அதுவும் ஒரு 'சிந்தனை' முறையைக் கொண்டுவர உடலையும், நாளாந்த வாழ்க்கையையும் நாசமாக்குவதாய் முடியும். கருத்துமுதல்வாதச் சுழல் அது.

தாம் உட்கார்ந்திருக்கிற கிளையை அடியோடு தறிக்கிறவைதான் கருத்துமுதல்வாதச் சுழல்களும்.


அகவயவாதிகளும், புறவயவாதிகளும் 
--------------------------------------------------------------------------

இதைத்தான் பல இலக்கியவாதிகள், பின்னவீனவாதிகளும் செய்து வருகிறார்கள். தமக்கான அகவயவெளி புறவயவெளியின் மீது ஏற்பட்டு வளர்வது என்பதைக் கவனியாமல் புற ஒழுங்கு தங்களது அகவயத்துக்குப் பாதிப்பு என்று தவறாகக் கருதிக் கொண்டு அதை அடிக்கிறார்கள்.

மறுதலையே உண்மை என்பதை நம் இயங்கியல் காட்டிவிட்டது.

புறவய வெளி தொடர்ந்து புறவயமடைந்து வர அகவயவெளி தொடர்ந்தும் அகவயமடைந்து வருவதை வெளிப்படுத்தி விட்டது.

ஆகையால் நீங்கள் அமர்ந்திருக்கிற கிளைகளின் நிலையை முழுமரம் சார்ந்து (இயக்கம்) புரிந்து கொள்ளுங்கள். அடிகளைத் தறிக்காதீர்கள்.

அதைப் போல புற ஒழுங்கு புறவய வெளிக்கே என்பதை வரைவு செய்து கொள்ளத் தெரியாமல் , அகவெயவெளிகளுக்குட் போய் 'ஒழுங்காக' இரு என்று அச்சுறுத்துவதைச் சில அடிப்படைவாதிகள் செய்து வருகிறார்கள்.

கிளைகள் ஒவ்வொன்றையும் தறித்து மரத்தை வளர்க்க முடியாது. அது மரமும் இல்லை. விரைவில் பட்டுப்போகப் போகிற நிலைக்குத்தான வெறுங் கட்டை. மரம் நெடிந்து வளர சில கிளைகளைத் தறிக்க வேண்டுந்தான், அது தேவையைப் பொறுத்து.

நீங்கள் இயற்கையில் செய்வது 'இயங்கியல்' வழியில் என்பதை உணருங்கள். முதலாளித்துவம் 'இயற்கை' என்பதில் பொய்யும் உண்மையும் உண்டு. எதிலும் சரியும், தவறும் உண்டு.

முரணற்ற இயக்கம் தவிர்ந்த மற்றைய எதுவும் தனக்கு எதிரானதையும் உருவாக்கும் என்பதை உணருங்கள்.

ஒரு பக்கத்தையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். எல்லாப் பக்கங்களையும் முடிந்த வரை பார்த்து குறிப்பான வெளிகளில் குறிப்பான முடிவெடுக்க வேண்டும்.

எல்லா வெளிகளுக்கும் பொதுவான முறைகளை, பொதுத்தன்மைகளைக் கண்டைந்து வளர்த்தெடுக்க வேண்டும்.  அதுவே வினைத்திறனான முடிவெடுத்தல் பயணம்.

புறம் --> அகம் --> புறம் என்கிற திருத்தமான இயங்கியல் சுழல்
-------------------------------------------------------------------------------------------------------

இயங்கியல் சுழல்கள் ஒவ்வொன்றும் (எமது பூச்சிய விதிப்படி) நடைமுறையிலிருந்து ஆரம்பித்து நடைமுறையிலேயே முடிந்தாக வேண்டும்.

சிந்தனை வலுக்க, அதாவது காலப்போக்கில் அகவயம் வலுக்க அது இவ்விதம் மாற்ற மடையும். ஆனாலும் முதலும் முடிவும் நடைமுறையாகவே இருக்க வேண்டும்

புறம் --> அகம்--> அகம்--> .... அகம்--> அகம்---> புறம்

இயங்கியல் பொருள்முதல்வாதம் புறம் --> அகம் ---> புறத்துடன் மட்டடைந்து தவறிழைக்கிறது.

எம்மால் 'முடிந்த' வேகத்திலேயே செல்ல முடியும். ஒரு கட்டத்தில் பாய்ச்சல் நிகழும். அது எமது தொழிநுட்பம் சார்ந்தது. தொழிநுட்பம் சார்ந்ததே 'அளவுமாற்றம்->பண்புமாற்றம்'.

அளவுமாற்றமென்பது நோக்கின் தொழிநுட்பம் சார்ந்த தோற்றப்பாடே. 

இயங்கியளாளர்களின் அக தொழிநுட்பம் முதலாளியம் கடந்து சோசலிசம் கடந்து நேரடியாக கொம்யூனிச/பொதுவுடமைக் கட்டத்தைப் பண்புமாற்றமாக அடைகிறது.

இயங்கியல் பொருள்முதல்வாதிகளின் பண்புமாற்றம் முதலாளியத்தில் அளவுமாற்றம், சோசலிசம், அதற்குள் அளவுமாற்றம், பிற்பாடு கொம்யூனிசப் பண்புமாற்றமாக இருக்கிறது.

முதலாளியவாதிகளுக்கு முதலாளியத்துக்குள்ளே அளவுமாற்றமே முடிவற்று நடந்து கொண்டிருக்கிறது.

அளவு மாற்றமென்பது 'அக தொழிநுட்பம்' சார்ந்த தோற்றப்பாடென்பதை விளங்கிக் கொள்ளுவோம்.

எங்களுடைய அறிவிப்பும், இயங்கியல் தொடர்பிலான நிலைப்பாடும்


நாம் அவசர அவசரமாக  'புதிய' இயங்கியல் (தத்துவத்தளத்தில் ஒரே ஒரு இயங்கியல்தான் உண்டு, தத்துவத்தளத்தில் இயங்கியலுக்கு அடைமொழிகள் இல்லை, விரைந்து போக்க வேண்டும்), விசயங்களைப்  தொடர்புபட்ட  பதிந்ததன் நோக்கு, பிற்போடாமல் இயங்கியலிலிருந்து அனைத்துக்குமான பொதுக் கோட்பாடு ஆக்கிற சாத்தியக் கூறு மிகப் பெரியதாகி விட்டதை அறிவிக்கவும் (நாம் இறந்து போனாலும் வேறு ஆராவது கையில் எடுத்துக் கொள்ளலாமே),

இந்த உண்மையை வேறு ஆராவது அறிந்து தமகேற்ப மட்டுப்படுத்தி வைத்து (ஹெகலியர்கள், மார்க்சியர்கள்  (அறியாமல்?) செய்தது போல) இந்த இயக்கத்தைப் பிற்போடாதிருக்கவும், இதைப் புரிந்து கொள்கிறவர்களுடன் நாம் சேர்ந்து வேலை செய்யவுமே.

விஞ்ஞான விரோத கருத்து, அதீத கற்பனை என்றெல்லாம் பதட்டமடைய வேண்டியதில்லை.

இந்த இயங்கியல் புறவயப்படுத்தினால் அன்றி பிரயோக வெளிக்கு வராதது.


நாம் பல தடவைகள் எழுதியது - இந்தப் புறவயத்தை மனித நோக்கு செய்து முடிக்கும் என்கிற எந்தக் கட்டாயமும் இல்லை. மனித நோக்குக்குக் கொம்யூனிசக் கட்டம் நிச்சயமானதும் இல்லை. அதற்காக நாம் வலிந்து முயலுகிறோம். அவ்வளவுதான். 

இந்த இயங்கியலே அனைத்துவித நோக்குக்குமான கடைசி தத்துவம். The first perpetual philosophy and thus (<=>) the philosophy of super-intelligence.

இதையும் தாண்டிப்போக வேண்டுமானால் பூச்சிய விதியை, அல்லது இயங்கியல் தர்க்கத்தை உடைக்க வேண்டும்.

பூச்சிய விதியின் எல்லைக்கு அப்பால் முழு மாயையையும் (Solipsism), பிரக்ஞை அடிப்படையிலான கோட்பாடுகளும்  (Consciousness), கர்மாவும் (Karma),  பொய்த்தோற்றமுந்தான் (Simulation), யோகி விஞ்ஞானமும் (Yogic Science) தான் இருக்கின்றன.


இது வரையிலான விஞ்ஞான திசையில் மேற்சொன்னவை இல்லை. இனி இருக்க முடியாதென்பதில்லை. இருந்தால் மனித (நோக்கு) முயற்சியின் முக்கிய அடிப்படை - Free Will உடையும்.
மிக நெடுங்கால மனித முயற்சி (நோக்கு முயற்சி) அர்த்தமற்றுப் போகும்.

இவை ஒவ்வொரு மட்டத்திலான விஞ்ஞான விரோத நிலைகளாகும். விஞ்ஞான அணுகுமுறையே தவறு என்று ஏற்பட்டால் ஒழிய (புதிய இயங்கியலின் பூச்சிய விதி உடைந்தால் ஒழிய) இவையெல்லாம் முழுச் சரியாக முடியாது.

பூச்சிய விதி உள்ளார்ந்தமாகப் பல அடிப்படைகளால் நெய்யப்பட்டிருப்பது. பல அடிப்படைகளுக்கான வெளியை உருவாக்கிக் கொண்டிருப்பது. சாத்தியக் கூறு, தன்னிச்சை வெளி, நியதிவாத மறுப்பு, விதிவசவாத மறுப்பு இவற்றையெல்லாம் கொண்டியங்குவது.
மார்க்சியத்தை மீறிச் சென்றது (தகர்த்தது, உடைத்தது, தோற்கடித்தது, பின் தள்ளியது என எல்லாவற்றினதும் இயக்கம் மீறிச்சென்று பெருவெளியை உருவாக்குவதே), மார்க்சியத்தைக் 'காப்பாற்றவே'.

கருத்துமுதல் இயங்கியல், பொருள்முதல் இயங்கியல் மீறிச் செல்லப்பட்டன.

எல்லாவித தத்துவங்களையும் உள்ளிணைத்துக்கொண்டு, எல்லாவித விஞ்ஞானங்களையும் உள்ளிணைத்துக் கொண்டு அதியுச்ச வேகத்தில் நகருகிற முதல் நிரந்தர இயக்கத் தத்துவம் வந்து விட்டது.


இது வரையிலுமிருந்த முறைகள், முடிவுகள் அனைத்தும் பின்னடைந்தன. அதாவது முந்திச் செல்லப்பட்டன.

எவ்வளவு சுத்தினாலும், கடைசியில் நோக்குக்கான தன்னிச்சை வெளி (free-will) இருப்பதற்கான, அதைத் தொடர்ந்து தன்னிச்சையாக அதிகரிப்பதற்கான கடைசித் தத்துவவெளியாக இந்த இயங்கியல் இருக்கிறது. This is not Reductio ad absurdum. Just pointing out the consequences and thus any better philosophy (compared to dialectics) must consider these. 

 மாற்று மெய்ம்மை/எதார்த்த (Alternative Realities) வெளிகள் விஞ்ஞான விரோதமானவை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நமக்குப் புலனாவதே, நமக்குத் தோற்றுகிற அளவே, நமக்கு விளங்குவதே அனைவருக்குமானது என்கிற தவறான சிந்தனை வேண்டாம்.

இந்த வேறுபாடுகள் இயல்பானவை. இயக்கம் சார்ந்தவை. ஆனால் இச் சார்பு நிலையை விஞ்ஞான பூர்வமாக அணுகமுடியும். சார்பு இயக்கங்களைப் புரிந்து கொள்வதனூடு அவற்றைப் புறவயப்படுத்துகிறோம் (இயங்கியல் வழி புரிதல், கணித, விஞ்ஞான வழி புறவயப்படுத்தல் - இரண்டும் மறுபடி இயங்கியலாகவே ஒடுங்கும்).

சார்புக் கோட்பாடுகள் வந்த பொழுது முழு புறவய எதார்த்தம் (அனைவருக்கும், அனைத்துக்கும் பொதுவான புறநிலை எதார்த்தம்) என்கிற மார்க்சிய நிலைப்பாட்டை உடைத்துவிட்டதாக பல எதிர்ப்புக்கள், புத்தங்கள் வெளியாயின. இன்னுமும் அப்படியான புத்தகங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன்.

இது இயங்கியலிலிருந்து மார்க்சியத்தை (மார்க்ஸ் முதலானவர்களின் முறை மற்றும் முடிவுகள்) அணுகாமல் மறுதலையாக அணுகியதால் வந்த விளக்கக்கேடும் அடிப்படைவாதமுமே.

இப்போது மார்க்சியம் முழுவதுமாக மீறிச் செல்லப்பட்டிருக்கிறது.

இதை அறிவித்த பின்னரும் கூட மறுபடி மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ என மேற்கோள்கள் காட்டி 'ஆதாரங்களை' முன்வைப்பது மிக மேலோட்டமான சிந்தனை.

இயங்கியலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

இது வரையிலான மார்க்சியர்கள் இயங்கியலை முறியடித்து வந்தார்கள். இன்னாரின் இயங்கியல் என்று சொல்லுவதில் எனக்கு உடன்பாடில்லை.

இயங்கியலின் படி புறவயம் தொடர்ந்து புறவயப்பட்டும், அகவயம் தொடர்ந்து அகவயப்பட்டுமே இயங்கும்.  எளிமையாகச் சொன்னால் புறவயவெளி பல மொழி ---> ஒரு பொருள் திசையிலும் அகவயவெளி ஒரு மொழி ---> பல பொருள் திசையிலும் தொடர்ந்து நகரும்.

மார்க்சிய இயங்கியல், பொருள்முதல் இயங்கியல், இயங்கியல் பொருள்முதல்வாதம், மாவோவின் இயங்கியல், லெனினின் இயங்கியல் இவை எல்லாவற்றினதும் அடிப்படை இயக்கம் ஏறக்குறைய ஒன்றுதான். அது பருப்பொருள் என்கிற சாரா மாறியிலிருந்து கருத்து என்கிற சார் மாறிக்கு வந்தடைவது.

இயங்கியலில் சாரா மாறி  (independent variable) என்பது கிடையாது.

ஹெகலியர்கள், மார்க்சியர்கள் இற்றைத் தேதி வரையில் பயன்படுத்துகிற முக்கூற்று ஏரணம் ஒரு உள்ளார்ந்த எடுகோளை முன்வைக்கிறது. அது இயங்கியலை 'முடிவற்றதாக்குகிறது'.  அந்த முன்வைப்பைப் புரிந்து கொண்டு அந்த எடுகோளை நீக்கும் விதமாக, ஆனால் தவறான முடிவாக ஹெகல், மார்க்ஸால் இணைக்கப்பட்டதே கருத்தும், பருப்பொருளும்.

இது இயங்கியலை முறித்து வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது.

1. முக்கூற்று ஏரணத்திலிருக்கிற, அதை முடிவற்றதாக்குகிற, அதி உள்ளார்ந்த (ஆனால் மிக வெளிப்படையான) அந்த எடுகோள் என்ன?

2. அதை நாம் எவ்வாறு இயங்கியலைக் கொண்டே "புதிய" இயங்கியலில் (இதுதான் ஒரே இயங்கியல்) திருத்தியமைத்தோம்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடையளிக்க முயன்றால் உங்களுக்கு இயங்கியல் பிடிபட்டுவிட்டது. 

இதற்கு விடையளிப்பதனூடே (அதற்கு மிக முயல்வதன் ஊடே), பருப்பொருள், கருத்து முதல் முடிவுகள் ஏன் தவறானவை என்பதையும் இயங்கியல் பொருள்முதல்வாதம், மார்க்சியம் ஏன் சிந்தனைவெளியில்  முழுவதுமாகப் பின் தள்ளப்பட்டது (முழுமையாகத் தகர்ந்தது) என்பதையும் புரிந்து கொள்வீர்கள். 

இந்த இயங்கியல் மிக மிக மிக முக்கியமானது.

அதனால் மட்டுந்தான் இது வரையில் 'tag' செய்யாதிருந்த நாங்கள் பலரை 'tag' செய்தோம்.

இந்த இயங்கியல் அனைவருக்குமானது. இதிலிருந்து வருகிற முடிவுகள், திட்டவட்டங்கள், சூத்திரங்கள் எவையும் காப்புரிமைக்குக் கீழே போய்விடக் கூடாது. அவையெல்லாம் அனைவருக்கும் பொதுவானதாய் இருக்க இது பற்றிய விழிப்புணர்வு முன்கூட்டியே வருதல் அவசியம்.


விழிப்புணர்வற்ற நிலையில், சமன்பாடுகள் (இடைநிலை) தவறாகப் பயன்படுத்தப்பட்டு, மறுபடி பொதுவுடமைக் கட்டம் பின்னடையலாம்

இப்போது இயங்கியல் அருஞ்சொற்கள், வரிப்படங்கள், அசைபடங்கள், கணித விளக்கங்கள் இவற்றை மெல்ல மெல்ல செய்து வருகிறோம்.

இந்த இயங்கியலை உடைப்பதற்கு நாங்கள் எடுக்கிற, எடுத்த முயற்சிகளையும் பதிவேற்றுகிறோம். எங்களால் முடியாததை, நாங்கள் தவற விட்டதை இன்னொருவர் செய்ய முடியும். 

எமது 80%க்கும் அதிகமான எழுத்து வேலைத்தள நேரத்தை மிக முயன்று மிச்சம் பிடித்து எழுதப்பட்டது.

எமக்கு முடிந்ததையே நாம் விதித்துக் கொள்ளுகிறோம். எமக்கு முடிந்த அதியுச்ச நிலையைத் தேடியறிவதே இயங்கியல். அதைத் தாண்டிப்போகதிருப்பதுவும் இயங்கியலே.

எமது தனிப்பட்ட வெளியைச் சுரண்டி பொதுவேலை செய்வது இயங்கியலுக்கு விரோதமானது. அதை மெதுவாகத்தான் பேண்தகு வழியில் குறைக்கவேண்டுமே தவிர, அடியோடு நிறுத்துகிறேன், இந்தா பாய்கிறேன் என்று முடிவெடுப்பதும் இயங்கியல் விரோதமே. அளவு மாற்றம் என்பது தோற்றப்பாடு. எல்லாமும் பண்புமாற்றமே.

இந்த ஆய்வை விரைவுபடுத்த இயங்கியலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதொன்றே வழி. ஒரு சில தனிநபர்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது. இது கூட்டுமுயற்சி.

எம் பதிவுகள் அதற்கானவை. முதற்கட்ட இயங்கியலாளர்களாக நாம் திரள விரும்புகிறோம். நாம் இணைத்துக் கொள்ளப்போவதில்லை. நாம் அதில் இணைவோம்.

அனைவருக்கும் பொதுவானதாய் நாம் அறிவித்த இயங்கியலை உடைக்கிற, வளர்க்கிற கடமை இதை விளங்கிக் கொள்ளுகிற சிந்தனை மட்டங்களுக்கு வந்து சேர்கிர அனைவருக்குமானது. 

Nila & Kana
06/03/2018

Last Updated
10/03/2018
12:23 PM SGT


Sunday, March 4, 2018

முதல் நிரந்தர இயக்க (Perpetual) சிந்தனை/அக தொழிநுட்பம். THE FIRST EVER PERPETUAL MOTION IN THOUGHT PLATFORM

தத்துவம் என்பது அண்ட இயக்கத்திலிருந்து சிந்தனை பெற்றுக் கொண்ட அதியுச்ச சுதந்திர வெளி.

விஞ்ஞானம் என்பது அண்ட இயக்கத்தை எதிர்த்து உருவாகிய அதியுச்ச ஒழுங்கு வெளி.

இவ்விரண்டையும் ஒன்றை ஒன்று முன் தள்ளுமாறு மிகத் திருத்தமாக இணைத்த பொழுது  சிந்தனையின் நிரந்த இயக்கம் கிடைத்து விட்டது.

அண்டத்தின் இயக்கத்திலிருந்து பெற்ற சுதந்திர இயக்கத்தையும் அண்டத்தை எதிர்ப்பதிலிருந்து பெற்றுக் கொண்ட ஒழுங்கியக்கத்தையும் மிகச் சரியாக இணைப்பதனூடு இயங்கியல் பிறக்கிறது.

பிறந்து விட்டது.

முதல் நிரந்தர இயக்க (Perpetual) சிந்தனை/அக தொழிநுட்பம்.

THE FIRST EVER PERPETUAL MOTION IN THOUGHT PLATFORM.

இதிலிருந்து புற நிரந்தர இயக்கப் பொறிகளை நோக்கிய, தொடர்ந்து துல்லியமடைகிற பேரியக்கம் தொடங்கி விட்டது.

Nila & Kana
05/03/2018
15:11 SGT

கொம்யூனிச கட்ட பொருளியலின் திசை, இயங்கியல் தெளிவுக்கான நிபந்தனைகளும் வழிகாட்டல்களும்



எம் புதிய இயங்கியலில் இருந்து,

1. ஆதி முதல் இயக்கம் முரணற்ற இயக்கம் என்பதை அறிந்தோம்.

2. இயக்கம் முரணில் இருந்து மட்டுமல்ல, முரணற்ற இயக்கத்திலிருந்தும் வரத்தக்கது என்பதை அறிந்தோம்.

3. முரணற்ற இயக்கத்திலிருந்து வருகிற இயக்கமே நோக்குகளுக்கு முதன்மையானது என அறிந்தோம். இது முரணிலிருந்தே இயக்கம் வருவதான மார்க்சிய புரிதல், செயல்திசையை தலைகீழாகத் திருப்பியது. இது சீர்திருத்தம் அல்ல. ஹெகலை திருத்தியதைக் காட்டிலும்  பெருந்திருத்தம்.

4. முரணற்ற இயக்கம், முரணுள்ள இயக்கம் என்பவை முறையே நிலைப்பின் நிலைப்பு (assertion of assertion) ஆதிக்க, நிலைமறுப்பின் நிலைமறுப்பு (negation of negation) ஆதிக்க இயக்கங்கள் என்பதை விளங்கிக் கொண்டோம்.

5. அண்ட இயக்கப்போக்கில் நிலைமறுப்பே ஆதிக்கம் என்பதை அறிந்தோம். அது மறுபடி முரணற்ற இயக்கமாக வேண்டி அசைவதையும் (முழுக் குழப்பம்-->முரணற்ற இயக்கம்)  அதன் வழியில் அதுவும் விரிவடைவதையும் (ஆரம்பமும் முடிவும் எல்லாவற்றுக்கும் வேறு தளங்களே, எல்லாவித இயக்கங்களும் சுழலேணி/சுருளிவிற்களே என அறிந்தோம். அது ஒட்டுமொத்த இயக்கத்துக்கும்  (இயக்கம், அண்டம், உயிர், நோக்கு) பொதுவே.

6. நோக்கின் (அண்ட இயக்கத்தின் ஒழுங்கு- சுதந்திர, சுதந்திர-ஒழுங்கு எதிரியக்கங்கள், எல்லாவித உயிர்கள், சிந்தனைகள்)  இயக்கத்தில், முரணற்ற இயக்கத்திலிருந்து வருகிற நிலைப்பின் நிலைப்பு இயக்கமே தொடர்ந்து ஆதிக்கமடையும் என்பதை அறிந்தோம்.

மார்க்சியர்கள் இயங்கியல் கொண்டு தவறாகக் கணித்தது போல அவை முரண் அடிப்படைகளிலிருந்து வருவதில்லை. நிலைப்பின் நிலைப்பு ஆதிக்க இயக்கத்தில், அதாவது முரணற்ற இயக்க அடிப்படையிலிருந்து வருகிறவை.

இயக்கத்தை அறிவதன் மூலம் அதிகமதிகம் அண்ட இயக்கம் நோக்குகளின் தேவைக்கேற்ப வளையும்.

நோக்குகளின் அதியுச்ச அக தொழிநுட்பம் இயங்கியல்.

நோக்குகளின் அதியுச்ச புற தொழிநுட்பம் முரணற்ற இயக்கத்திலிருந்து இயக்கத்தின் இயக்கத்தை ஏற்படுத்தல். 

அதாவது மனிதர்களின் தொழிநுட்பம் இயக்கத்தின் இயக்கத்தை வளைக்கிறதிலிருந்து இயக்கத்தை வளைப்பதாக உயருகிறது.

அவ் வளைக்குந் தொழிநுட்பம் தொடர்ந்து அடுக்கேறும்.

இன்னுமுந் திருத்தமாகச் சொன்னால் இயக்கத்தின் இயக்கத்தின் -- முடிவிலி தொடரில்--> இயக்கமாக மேற்பரப்பில் எமது நோக்குத் தொழிநுட்பத்துக்கு முதலில் தென்படுவதை வளைப்பதன் மூலம் ஒவ்வொரு படிநிலையாக முன்னேறி ஈற்றில் இயக்கத்தை (ஆதி முரணற்ற இயக்கம்) வளைப்பதாக மனித அறிவு/தொழிநுட்பம் இயக்கம் நேரடுக்கேற்றமாக நிகழவிருக்கிறது.


அதாவது ஆதி முரணற்ற இயக்கத்தைக் கூறுகளாக இயங்கச் செய்து பிரபஞ்சங்களை உருவாக்க (அல்லது இருக்கிற ஒரே பிரபஞ்சத்தைப் பெருமடங்காக்க - ஏற்கனவே பெரியதாய் இருக்கிறதை விடம் பல மடங்குகளில் ) முடியும்.

கொம்யூனிசக் கட்டம்  என்பது ஒவ்வொருக்கும்மான முடிவிலி வளங்களை நோக்கி போகிறது, முடிவிலி தனிவாழ்க்கையும் வரும் வாய்ப்பு வந்து விட்டது. வளங்கள் மட்டுப்பட்டவை என்னும் பொருளியல் அடிப்படைகள் (முதலாளிய, மார்க்சிய) நடைமுறைத் தளத்திலிருந்து பின்னடிக்கப் போகின்றன.

பொருளியல் துறை கொம்யூனிசக் கட்டத்தில் உதிர்ந்து வரும்.

வளப்பகிர்வு என்பது அற்றுப் போகும். வளப்பாவனையே மிஞ்சும். 

அண்ட வளங்கள் மட்டடைகிற (அண்டம் இயங்குகிற வரையில் நோக்கும் வளர இயங்கியலில் வழி உண்டு) கட்டம் ஏற்படின் மறுபடி 'வளங்கள் மட்டுப்பட்டவை' அடிக்கோளுடன் இப்போது நாம் உரையாடுகிற தளத்துக்கு பொருளியல் மீளும்.

எவ்விதம் ஆதிப்பொதுவுடமையும், வரப்போகிற பொதுவுடமையும் ஒன்றல்லவோ (எதிர்த்தன்மைகள் கொண்டனவோ),

எவ்விதம் ஆதி முரணற்ற இயக்கமும் நோக்கின் முரணற்ற சிந்தனை இயக்கமும் (இயங்கியல் சிந்தனை) ஒன்றல்லவோ,

மேற்சொன்னபடி மீளுகிற மட்டுப்பட்ட வளப் பொருளியியலும் இப்போதிருக்கிற முதலாளிய, மார்க்சிய பொருளியலும் ஒன்றல்ல. பின்னயது மிகப் பல அடுக்குகளில் இக்கால இயங்கியலாளர்களுக்கும் மட்டுக்கட்டமுடியாத அளவுக்கு மிக மேம்பட்டதாய் இருக்கும்.

நோக்கின் வரலாற்றில்,

இயங்கியலைக் கொண்டு இயங்கியலை வரையறுத்த முதல் நிகழ்வு இதுவாகும்.

முதல் முதலில் நிகழ்ந்த நிறுவல் இதுவாகும்.

விஞ்ஞானம் எதையும் நிறுவுவதில்லை. நிறுவியதுமில்லை. 

குறைந்த பட்ச தத்துவ அறிவு இருந்தாலும் விஞ்ஞானம் எதையும் நிறுவுவதில்லை/உறுதிப்படுத்துவதுமில்லை என்பதை அறிவீர்கள்.

மார்க்சிய அடிப்படைகளில் முரணில் இருந்து மட்டுமே இயக்கம் வருவதான மட்டான பார்வையைக் கொண்டிருந்தன.

அவை மொத்த இயக்கமாக அழிவை மட்டுமே தரக்கூடிய இயங்கியல் தர்க்கத்துடன் இருந்தன.

இந்த இயங்கியல் தர்க்கத்தைச் சரிப்படுத்தியவுடன் இலட்சிய நிலைகளாகக் கருதப்பட்ட சோசலிச-கொம்யூனிசக்  கட்டங்கள் விஞ்ஞானவெளிக்குள் வந்துவிட்டன.

விஞ்ஞான வெளிக்குள் வந்தவுடன் சோசலிசம்->கொம்யூனிசம்  கொம்யூனிசமாக ஒடுங்கியது.

நாம் மார்க்சியர்களின் ஆய்வை மதித்து, அதாவது இது வரையில் ஆட்சியிலிருந்த, அதி முன்னேற்றத் தத்துவமான இயங்கியல் பொருள்முதல்வாதத்தை மதித்து அதனுடைய சொற்பதங்களைப் பயன்படுத்துகிறேன். அது ஓரளவுக்கு விளக்கமிருக்கிற, இயங்கியல் என்கிற சொல்லைக் கேள்விப்பட்டாவது இருக்கிற தரப்பினருக்கும் தொடர்புபடுத்தக் கூடியதாக இருக்கும் என்பதாலும் அப்படிச் செய்கிறேன்.

கொம்யூனிசம் என்பது சாதாரண பதமே. அதன் வரைவைப் புதிய இயங்கியல் பிடித்து விட்டது. எல்லா வரைவுகளையும் பதங்களாக, வாக்கியங்களாகப் பார்க்காமல் இயக்கங்களாக பார்க்கப் பழகுவதே இயங்கியல் சிந்தனை.

எல்லா மதத்தவரது சொர்க்கமும், அரசின்மைவாதிகளின் முடிவுநிலையும், சோசலிச சொர்க்கமும், கொம்யூனிசமும் ஒன்றுதான்.

அவற்றை வரையறுக்கவும், அதற்கான திசை பிடிக்கவும் ஆன சாத்தியக்கூறை நம் புதிய இயங்கியல் உச்சப்படுத்திவிட்டது.

அதாவது எல்லாவித 'சொர்க்கங்களும்' விஞ்ஞான வெளிக்குள் வந்துவிட்டன.

இது எவ்விதமென விளக்குகிறேன்.

இயங்கியல் புரியாவிட்டாலும் அண்டம் எவ்விதம் தொடர்ந்து விரிவடைகிறது என்பதை பௌதீகவியலின் அடிப்படையில் விளக்கங்கலாம். நிறைய அசைபடங்கள் இருக்கின்றன.

அந்த அண்ட இயக்கத்தின் அடிப்படைப்பண்புகளை மனித சிந்தனை வெளிக்குள்ளும் கொண்டு வந்து விட்டது இயங்கியல்.

இருக்கிற தத்துவங்கள் எதையும் இயங்கியல் சுருக்கப்போவதில்லை. அது தான் விரிந்து கொண்டு எல்லாவித தத்துவங்களையும் அடுக்கேற்றப் போகிறது.

புறவய தொழிநுட்ப உச்சத்தில் அகவய தொழிநுட்பமும் அதியுச்சமடையப் போகிறது.

அண்டத்தின் சுதந்திரத்தை நோக்கிய (முழுக் குழப்பத்தை நோக்கிய) இயக்கத்திலிருந்து பெற்றுக் கொண்ட நோக்கின் சுதந்திரக் கூறு அதியுச்சமடைகிற, கலை, இலக்கியம், அழகியல், அன்பு, நட்பு என எல்லாமும் எகிறிப் பாயப்போகிற திசையில் இயங்கியல் தொடர்ந்து அடுக்கேறப் போகிறது.

எவ்விதம் சோசலிச, கொம்யூனிசக் கட்டத்தில் 'முழுத்திருத்தமற்ற' தத்துவங்களை நோக்குகள் (உ+ம் மனிதர்கள்) கைவிடுவார்கள் என்று எதிர்வு கூறப்பட்டதோ அவ்விதமே இது நிகழும். ஆனால் இதுவே முதல் விஞ்ஞான பூர்வ நடைமுறை.

அவசரக் குடுக்கைத்தனம் (Adventurism), அடிப்படைவாதம் (Dogmatism) இவற்றுக்கு எதிராக இது வரையில் எழுதி வருகிற மார்க்சியர்கள் (மார்க்ஸ், லெனின், மாவோ பிற்பாடு அவர்களை மறுத்து மேலோட்டமான மாற்றங்களை முன்வைத்தவர்கள் அடங்கலாக) இயங்கியல் பொருள்முதல்வாதமே அவ்விரு பண்புகளையும் அடிப்படையிலிருந்து தோற்றுவிக்கிறது என்பதை உணராமல் இருந்தனர்.

அதை இயங்கியலைக் கொண்டு இயங்கியலை நிறுவியது முதன் முறை வெளிப்படுத்தியது.

'இதெல்லாம் முன்பே தெரியும்', 'இயக்கம்->பருப்பொருள் - அதுதான் தெரியுமே', 'ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதே', 'மார்க்சே எதிவுகூறிவிட்டார்', 'இயங்கியல் என்றால் எல்லாமும் மாறும், அறியப்படுவது மட்டுமல்ல, அறிகிறவரும் (பயன்படுத்தியவர் அறிகிறவனும் என்று பால்வாத மனநிலையிலிருந்து மீளாதவராக எழுதியிருந்தார்) மாறுகிறார்' - எப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது இந்தப் புதிய இயங்கியல் பற்றிய விளக்கமின்மையையே காட்டுகிறது.

திணிவுகள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பதற்கான விதியை ஆக்கியவுடன், அதுதான் தெரியுமே, நாளாந்தம் பார்க்கிறோமே என்கிற விளக்கமற்ற மனநிலைதான் மேற்சொன்னவை.

எல்லா இயங்கங்களையும் போல நீங்களும் இப் புதிய இயங்கியலின் வழியேதான் இயங்குகிறீர்கள். தனிப்பட்ட முறையில் உங்களது உடலியக்கமும், உங்களது தொகுத்தறி முறைகளும், விஞ்ஞான முறைகளும், மத நம்பிக்கைகளும்  எல்லாமும் புதிய இயங்கியலின் விதிகளுக்கமைவாகவே நடக்கின்றன. நான் சொல்லுவதை 'அட, இது தெரிந்த விடயம்தானே' என்று சொல்லுவது எம்முடைய புதிய இயங்கியலின் வெற்றியே.

ஆனால் இது வரலாற்றில் நிகழ்ந்திராத புதிய விடயம் என்பதை மழுப்ப அதைப் பயன்படுத்த வேண்டாம். மாபெரும் விளக்கக் குறைபாடாக அது முடியும். 

எத்தனையோ மிக, மிக எளிமைப்படுத்தப்பட்ட பதிவுகளை எழுதிய பின்னரும் எமது இயங்கியலை நாம் 'விளங்கப்படுத்தவில்லை' என்று சொல்லுகிறவர்கள் மிகப் பின்னடைவான மனநிலையில் இருக்கிறார்கள்.

அதாவது இவ்வளவு காலமும் 'இயங்கியல் பொருள்முதல்வாத' அடிப்படைகளில் இயங்கியதாகச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு, இப்போது 'இயங்கியல் என்றால்? முதலில் அதை விளுக்குங்கள்?!' என்று கேட்பது இவ்வளவு காலமும் இவர்களெல்லாம் அடிப்படைவாதிகளாக இருந்ததை நிறுவுகிறது.

தம்மைத் தாமே அடிப்படைவாதிகளாய் தாம் அறிவித்துக் கொள்வதைப் புரிந்து கொண்டு, இதுவரையிலிருந்த இயங்கியல் விளக்கமின்மையே அடிப்படைவாதமாகவும் இருந்ததை என்பதை நன்கு விளங்கிக் கொண்டு, எனியாகிலும் அடிப்படைவாதியாக இருக்காதிருக்க முயல்வதை விடுத்து, மறுபடி மறுபடி மனப்பாட வழிகளில் முயல்வது பொருத்தமற்றது.

இயங்கியல் இயங்கியல் பொருள்முதல்வாதத்தைப் போல அடிப்படைவாதம் அல்ல மனப்பாடம் செய்து கொண்டு விளங்கிவிட்டதாக உங்களை நீங்களே  ஏமாற்றிக் கொள்ளவும், அடுத்தவரை அதைக் கொண்டு ஏமாற்றவும்.

இது வரையில் புறத்தில் முயன்று தோற்றுப்போன சுய-இயக்க தொழிநுட்பம் சிந்தனைத் தளத்தில் வந்துவிட்டது.

அதைக் கொண்டு புறத்திலான சுய-இயக்க தொழிநுட்பம் தொடர்ந்து துல்லியமடையப்போகிறது. பெரும்பாய்ச்சலை நிகழ்த்தப் போகிறது.

தமிழ்ச்சூழலில் மட்டுமல்ல, இதுவரைக்குமான உலகசூழலிலும் இந்த புதிய சுய அடுக்கேறுகிற (perpetual) அறிவுத் தளத்தை (சிந்தனை முறையை) புரிந்து கொள்வது சிரமந்தான். அதற்காக முடியாதென்று எடுத்துக் கொள்ள வேண்டாம். சமகாலத்தில் ஆருக்கு, எத்தனை பேருக்கு முடியப்போகிறது என்பது எமக்குத் தெரியாது.

நிச்சயம் இன்றைய சிந்தனை மட்டத்திலிருக்கிற சில ஆயிரம் பேருக்காவது புரியும் என்பது சாத்தியமான நிலைப்பாடே.

அவசரப்பட்டு மறுப்புக்கள் எழுதியவர்களுக்கு இதைப் புரிந்து கொள்வதில் மிகச் சிரமங்கள் ஏற்படப் போகின்றன. ஆனால் தங்களுக்கான நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

கவனித்தும் கவனியாது இருப்பதாகப் பாசாங்கு செய்கிறவர்களையும் நாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இந்தப் பாசாங்குக் குணம் இயங்கியல் புரிதலை மிக மட்டுப்படுத்தும்.

எவ்விதம் இயங்கியல் நடைமுறைச்சாத்தியத்தை விதித்துக் கொண்டு வருகிறது என்பதை விளக்கியிருந்தேன். அதைப்போல பயிலப்படுகிற இயங்கியல் பாசாங்கையும், ஏனைய போலித்தனங்களையும் தொடர்ந்து மட்டுப்படுத்திவரும்.

அவ்விதம் மட்டுப்படுத்த முடியாதவர்களால் இயங்கியலை அணுகமுடியாது.

இயங்கியலின் மூலம் அத்தனை மார்க்சிய மூலவர்களின் இணைந்த சிந்தனையையும் மிக எளிமையாக நாம் தாண்டி வருகிறோம்.

அதியுச்ச சிந்தனைத் திறன் கொண்ட நோக்கின்  (super-intelligence) தத்துவமும் இயங்கியலே.

எம் புதிய இயங்கியல் மார்க்சிய அடிப்படைகளை மீறி வளருகிற முன்பாகவே ஏனைய அனைத்துத் தத்துவ அடிப்படைகளையும் மீறி வளர்ந்து விட்டது.

கடைசியாக மீறப்பட்ட தத்துவமே இயங்கியல் பொருள்முதல்வாதம். மிகுதி அனைத்தும் முன்னதாகவே மீறப்பட்டன.

அதாவது முதலாளியக் கட்ட தத்துவங்கள் எல்லாமும் சிந்தனைத் தளத்தில் மீறப்பட்டன.

நாம் மீறப்பட்டன, தகர்ந்தன, அழிந்தன, சிதறின, ஒடுக்கப்பட்டன என என்ன பதத்தைப் பயன்படுத்தினாலும் அதன் இயக்கம் புதிய தத்துவம் பழையதை மீறி, பழையது விளக்கிய எல்லாவற்றையும் இன்னுமும் திருத்தமாக விளக்கி புதிய வெளிகளையும் உருவாக்கி அவற்றையும் விளக்குகிற இயக்கத்தைக் குறிக்கும்.

எப்போது பதங்களுக்குப் பின்னாலிருக்கிற இயக்கங்களைத் தேடி அவற்றைக் கொண்டு சிந்தனையை வளர்த்தெடுக்க உங்களுக்கு முடிகிறதோ அப்பொழுது இயங்கியல் உங்களின் தத்துவமாகிறது.

இயங்கியலே அதியுச்ச சிந்தனையின் தத்துவம்.

முயற்சி செய்வதில் தவறில்லை. அவரவர் தமகேற்ற நேரத்தை எடுத்துக் கொண்டு பேண்தகு வழியில் (அதாவது நிலைப்பின் நிலைப்பு இயக்கத்தை ஆதிக்கமாக்கி) முயல வேண்டும்.

சிறப்புத் தேர்ச்சியின் சிறப்புத் தேர்ச்சி அடுக்குகளில் இயங்கியல் நகர்கிறது.

முதலாளித்துவ சிறப்புத் தேர்ச்சி அடிப்படை நடைமுறைத் தளத்திலிருந்து முழுவதுமாக வெளித்தள்ளப்பட இருக்கிறது (அதை மீறி இயங்கியல் வளர்ந்து விட்டது, ஒவ்வொரு தனிமனிதரையும் வளர்க்கப் போகிறது). சிந்தனைத் தளத்தில் மிக முன்னதாகவே தகர்ந்து விட்டது.

'கூலி', 'உபரிமதிப்பு', 'கூலி மட்டங்கள்' எல்லாமும் இந்தத் தளத்தில் மீறப்படப் போகின்றன.

முதலாளியம் மீறப்பட்டு, தொடர்ந்து மார்க்சியமும் மீறப்பட்டே கொம்யூனிசக் கட்டம் வருகிறது.

இதன் திசையில்  சிறப்புத் தேர்ச்சியின் அடுக்கேற்றம் (சிறப்புத் தேர்ச்சியின் சிறப்புத் தேர்ச்சி--->)  எதையும் எவரையும் தேவைக்கேற்ப அதி வேகமாகக் கற்றுக் கொள்ள இடமளிக்கும்.

தகவல்களைக் கொண்டு சிந்தனை பாரமடையாது. சிந்தனைக்குள் முறை மட்டுமே மிஞ்சியிருக்கும் திசையில் சிந்தனை தன்னைத் தொடர்ந்து செப்பனிடும்.

'தலைப்பாரம்' ஏறாது. எதையும் அதிவிரைவாக விளங்கிக் கொள்ளும்; விளங்கிக் கொள்ளல் என்பது அந்த இயக்கத்தின் திசை பிடித்தல்.

இப்போதிருக்கிற அறிவுசேர் வழிகளான மனப்பாடம், நிறைய 'வாசித்து' நிறையத் தகவல்களைச் சேகரித்து வைத்தல் போன்றன பின் தள்ளப்பட்டு நடைமுறை வெளியில் இருந்து மெல்ல உதிரும்.

இயங்கியலை அங்கொன்றும் இங்கொன்றுமாய் 'திருடி' உடமையாக்கிக்கொள்ள இயங்கியலாளர் போலப் பாசாங்கு செய்ய முடியாது.

இயங்கியலாளர் எனின் அனைத்துக்குமான விளக்கமும், உள்ளிணக்கமாகக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

இயங்கியலாளரானவுடனே அந்தத் திசையில் தொடர்ந்து நகர்ந்து ஒரு கட்டத்தில் அதை அடைந்து விடுவோம் (ஏதேனும் ஒரு நோக்கு அண்ட இயக்கப் போக்கில் அடையும், அது மனிதநோக்காக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை).

அடிப்படைவாதம், பிழைப்புவாதம், அவசரக்குடுக்கைத்தனம் எல்லாவற்றையும் ஒதுக்கியே இயங்கியலை அணுக முடியும்.

இயங்கியல் வசப்பட்டவுடன் உங்களது சிந்தனை வெளிகளில் இவற்றைத் தொடர்ந்து மட்டறுத்துவருகிற வேலையை 'அது' எடுத்துக் கொள்ளும்.

ஒருவர் தவிர்க்கமுடியாது தொடர்ந்து  'நேர்மையடைகிற' ஒரே தத்துவம் இயங்கியலே.

அதை எதுவித பிழைப்புவாதம், அடிப்படைவாதம், கருத்துமுதல்வாதம்... இவற்றுடன் அணுகமுடியாது. வசப்படாது.

அதாவது இயங்கியலாளர்கள் அனைவரும் அதியுச்ச சிந்தனைக்கான திசையில் தம்மைத் திசைப்படுத்திக் கொண்டவர்கள். காலத்துடன், அதாவது ஒவ்வொரு இயக்கச் சுழலுடனும் அவர்களுடைய சிந்தனைத் திறன் அதிகரித்துச் செல்லும்.

அவர்களை ஆரும் 'திசைப்படுத்த' , 'வழிப்படுத்த' வேண்டியதில்லை. அவர்களுடைய இயங்கியலே அவர்களை வழிப்படுத்துகிற அதியுயர் முறை.

எனையவர்கள் சொல்லுகிற எல்லாமும் அவர்களுக்குத் தகவல்களே.

அத் தகவல்களை மிகச் சரியாகப் புரிந்து, மிகச் சரியாக உள்ளிணைத்து, தம் திசையை இன்னுமும் துல்லியமாக்குவதே இயங்கியலாளர்களின் தொடர் பயணம்.

தொடர்ந்து முடிவுறாத் துல்லியமடைதலே இயங்கியல்.

ஒரு வெளியை ஏறக் குறையத் துல்லியப்படுத்திவிட்டோம் என்றால் அதன் அதி துல்லிய நிலையில் மறுபடி முடிவிலி வெளி தோன்றும்.

மிக எளிய உதாரணம் எண்கள். முழு எண்கள் முடிவிலி. இரண்டு அடுத்தடுத்த முழு எண்களுக்குமான இடைவெளியும் முடிவிலி. அதற்குள் சிறுபிரிப்புக்களைச் செய்து அடுத்தடுத்த இரண்டைப் பார்த்தாலும் முடிவிலி. வேண்டிய துல்லியத்தன்மையுடன் புதிய முடிவிலி வெளி பிறக்கிறது.

உதாரணங்களோடு சிந்தனையை இறுக்கிக் கொள்ளாமல் அவற்றின் பொதுத்தன்மைகளை ஆழப் புரிந்து எல்லாவித இயக்கங்களுக்கும் பிரயோகித்து, மறுபடி பொதுத்தன்மைகளைக் கண்டறியுமாறு வேண்டுகிறோம்.

சுருங்கச் சொன்னால் இயங்கியல் வழிமுறை அசைபடமாக, அதன் திசையில் அசைபடத்தின் அசைபடமாக (புதிய தளம்) தொடர்ந்து அடுக்கேற்றம் அடைவது.

இயங்கியல் பொருள்முதல்வாதமும் அடுக்கேறி வந்தது. ஆனால் பருப்பொருள் அடிப்படை (முரணிலிருந்து மட்டுமே இயக்கம்) என்கிற அரைமட்டப் புரிதலால் மேல்நோக்கிய சுழலேணியிக்கம் மட்டுப்பட்டு நின்றது. அடிப்படைவாதமாகியது. 

ஏனைய சிந்தனைகள் புகைப்படங்களை வரிசையில் மெல்ல மெல்ல அடுக்கிக் கொண்டிருக்கிறவை.

இப்போது  எமது இயங்கியல் அறிவைக் கொண்டு நோக்கு அண்டம் உள்ளவரை அழியாதிருக்கும் வகை வந்து விட்டது.

இது நோக்கு/உயிர்/சிந்தனை வரலாற்றிலான அதியுயர் பாய்ச்சலாகும்.

இது நோக்கு வரலாற்றிலேயே அதிமுக்கிய நிகழ்ச்சியாகும்.

இந்நிகழ்ச்சி அண்டம் உள்ளவரை நினைவுகூரப்படுவதன் சாத்தியம் மிக மிக அதிகம்.

இந்தத் தத்துவத்தை வந்தடைந்த நாம், நாம் அனைவரும், மனித நோக்கு மட்டம், உயிர்கள், பூமி, பால்வெளி, இந்தப் பிரபஞ்சம் (பல்பிரபஞ்சங்கள் இருக்கின்றனவா என்பதை இயங்கியல் கொண்டு உறுதிப்படுத்த/மறுக்க வழி இருக்கிறது, வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்)  எல்லாமும் மொத்த அண்டத்துக்கெதிரான தொழிநுட்ப வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது.

இதை 'சுவாரசியமாக இருக்கிறது', 'ஏற்கனவே தெரிந்த விடயந்தானே', 'இது புதுசல்ல', 'சரி ஏதோ சொல்லுகிறீர்கள், பார்ப்போம்'  என்பதாக புரிதலின்றி, மிகுந்த அசட்டையுடன், 

அல்லது 'குட்டிமுதலாளிய மனநிலை, இளம்பிராயக் கோளாறு (இது மிக மோசமான வயதுவாத பதம்) , உளறல், விஞ்ஞான விரோதம்..' என்றெல்லாம் தனிநபர் தாக்குதலாக, விஞ்ஞான விளக்கமற்ற நிலையில் தாக்குவது,

அல்லது கவனித்தும், கவனியாது இருப்பது,

இந்தப் புதிய இயங்கியலின் அனைத்துத் தத்துவக் கேள்விகளையும்,  அனைத்து விஞ்ஞான முறைக் குறைபாடுகளையும் தீர்க்கிற ஆற்றலைப் புரிந்து கொள்ளாதிருக்கிற, பின்னடைந்த மனநிலையாகும்.

நாம் வியாபரம் செய்யவோ, எங்களுடைய 'படைப்புக்களை' விற்கவோ எழுதவில்லை.

இது ஒவ்வொருவருக்குமான முடிவிலி சிந்தனை வெளியையும், முடிவிலி புற வளங்களையும் திறக்கிற சிந்தனை முறை. 

சொர்க்கம், கொம்யூனிசம் என்று ஒவ்வொரு தத்துவமும் 'ஆசைப்பட்ட' அதிநிலையை, விஞ்ஞானபூர்வமாக, உண்மையாகவே அதிவிரைந்து அடைகிற வழியாகும்.

முழு முயற்சி எடுத்து, நன்கு நேரமெடுத்துப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.

எவருக்கெல்லாம் புரியுமென்பது அவரவரைப் பொறுத்ததே. மேலோட்டமாக வழிகாட்ட மட்டுமே முடியும்.

இயங்கியல் உள்ளார்ந்தமாக அடிப்படைவாதத்தை முழுவதும் உடைத்துவிட்ட ஒன்று.

எவருக்கு விளங்குகிறதோ அவரது நடைமுறை வாழ்க்கையில் மட்டுமே பயன்படும். அவர் அதைத் தொடர்ந்து புறவயப்படுத்திவர, அது எவருக்கெல்லாம் விளங்குகிறதோ அவருக்கெல்லாம் மட்டும் பயன்படும். அதாவது இயங்கியலை 'முழுவதும்' விளங்கிய பின்னரே ஒரு நோக்கால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஏனைய தத்துவங்கள் போல மனப்பாட வழியில் முடியாது.

மனப்பாட முறையை இறுகப்பிடித்துக் கொண்டு இன்னுமின்னும் விளங்கப்படுத்துங்கள் என்றால் அது ஒருபோதும் முடியாது. 

இதனால்தான் 'கணிதச் சமன்பாடு' (சமன்பாடுகள்) மிகத் தொலைவில் இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. நாம் முடிந்த வரையில் முயல்கிறோம்.

ஆனால் இது வரை 'அறியப்பட்ட' எல்லாவற்றுக்குமான (எல்லாத் தகவல்களுக்குமான) பொதுக் கோட்பாட்டை ஆக்கிக் கொண்டு எதிர்வுகூறல்கள் செய்ய முடியும். 

Dark Energy, Dark Matter, Matter, Motion, Gravity, Four Fundamental Forces, Life, Consciousness, Intelligence, Super-Intelligence, Aesthetics, Emotions, Quantum Mechanics இவை அனைத்தையும் ஒருங்கே மிகுந்த உள்ளிணக்கத்தோடு விளக்குவதாக இருக்கும்.
அதை மிக நெருங்கி வருகிறோம். 

இந்த இயங்கியல் அனைவருக்குமான, அனைத்துக்குமான முன்னேற்றத்தை விஞ்ஞான வழியில் காட்டிவிட்டது.

உதாரணத்துக்கு  ஒழுங்கு அதியுச்சமடைகையில் அகவயம் அதைக் காட்டிலும் உச்சநிலைக்குப் போகவிருக்கிறது.

எந்தத் தத்துவத்தின் வெளியும் குறைக்கப்படப் போவதில்லை. அவை புதிய இயங்கியல் தளத்துக்குத் தூக்கப்பட்டு அவையாக நடைமுறைத்தளத்திலிருந்து (நோக்குகளின் இயக்கத் தளம்) பின் தங்கிப் போகிற வரையில், தாமாக உதிர்கிற வரையில் இயக்கத்திசையில் பயணிக்கும். 

வேறு எவருக்குமாவது இயங்கியல் தளம் புரிந்தால் அவர்களுடன் சேர்ந்து நாம் வேலை செய்யத் தயாராக இருக்கிறோம். எங்களுடன் அவர்கள் சேர வேண்டியதில்லை. நாங்கள் சேருகிறோம்.

இந்த ஒழுங்கு மாறுபாடற்றது. ஏனெனில் இயங்கியல் விளங்கிய ஒருவரால் 'ஏமாற்ற' முடியாது. அவருக்கு 'ஈகோ' கிடையாது. தான் தொடர்ந்து திருத்தமடைந்து கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டே அவர் இருப்பார். 

அதனால்தான் இயங்கியலாளர்களுக்கு இடையில் உரையாடல் மட்டுமே நிகழ முடியும் என்கிறேன்.

ஒருவர் இயங்கியலைப் புரிந்து கொள்ளுகிற பொழுது அது அவருக்கானதாகிறது.

எல்லோரும் புரிந்து கொள்ளுகிற பொழுது அது எல்லோருக்குமானதாகிறது. 

இயங்கியலாளரைக் கருத்துவெளியில் வெல்வது, திசைதிருப்புவது, அவர்களது திசையைச் சரிப்படுத்துவது என்பது சாத்தியமற்ற நிகழ்வு. 

எவ்விதம் இயக்கமற்ற நிலை சாத்தியமற்றது என்கிற அடிப்படையில் ஆரம்பிக்கிறோமோ அவ்விதமே இதுவும் சாத்தியமற்ற நிகழ்வு. 

இயங்கியலாளர்கள் SUPER-INTELLIGENCE க்கான நகர்வைத் தொடங்கி விட்டவர்கள். அத் திசையில் தொடர்ந்து நகர்கிறவர்கள்.

இதை நாம் புரிந்து கொண்டது மனித நோக்கினால் புரிந்து கொள்ளப்படத்தக்கதாக இயங்கியல் இருக்கிறது என்பதை நிறுவி விட்டது. வரலாற்றின் முதன் முதல் நிறுவல்கள் நடந்தேற ஆரம்பித்து விட்டன. 

உங்களுக்கு இயங்கியல் தளம் பிடிபடின், உங்களுடைய ஏற்பு, மறுப்பை முடிந்தளவுக்குப் பதிவு செய்வது  அண்டத்துக்கு எதிராக இயங்குகிற அனைத்து நோக்குகளின் (எல்லாவித உயிர்கள்) உச்சக் கூட்டு நன்மைக்கு அதி முக்கியமானது. 

அல்லது இந்தத் தளத்தைப் புரிந்து கொள்வதற்காக  நேரமெடுத்துக் கொள்கிற செயலை வெளிப்படைத்தன்மையுடன் பதிவு செய்வது இயங்கியலைப் புரிந்து கொள்வதற்கான குறைந்த பட்ச சிந்தனைத் தெளிவை உங்களிடத்தில் ஏற்படுத்தும். 



நிலா & கணா
05/03/2018

Karl Marx vs Karl Popper

My comment on Karl Marx vs Karl Popper
Marx was right about the Science of Sciences but came up with a wrong/pseudo 'science of sciences'.
Karl Popper was right about Science (as a method) but not really understood 'Science of Sciences'.
Karl Popper's arguments assume that Marx's Science of Science is the real Science of Sciences and 'blindly' attacked the notion itself.
BOTH WERE/ARE WRONG.



A comment on 11/03/2018And Karl Popper is right (in the right direction) about the philosophy of Probability - Propensity. FYI, our new dialectics have better (probably the best) Propensity theory.  

தொடர்புடைய இன்னொரு பதிவு




எனக்கு கார்ல் மார்க்ஸின் (போலி) விஞ்ஞானங்களின் விஞ்ஞானங்களை அடித்து நொறுக்குவதை தனது வாழ்நாள் கடமையாகக் கொண்ட கார்ல் பொப்பர் (Karl Popper) நினைவுக்கு வருகிறார். 

அவர் விஞ்ஞானத்தை மிகத் திருத்தமாக வரையறுத்தார். 

அவரது வரையறையைக் காட்டிலும் அதி திருத்தமான விஞ்ஞான வரையறையை நம் இயங்கியல் வைத்து விட்டது. 

'நோக்கு' (அகவயவெளி கொண்ட இயக்கம், எல்லா உயிர்கள், மனிதர்கள் உதாரணம்) அண்டத்தை எதிர்ப்பதற்கான அதியுயர் ஒழுங்கே விஞ்ஞானம்.

கார்ல் பொப்பர் ஒரு தத்துவவியலாளர்.

அவரது 'சகிப்புத்தன்மை' பற்றிய தத்துவம் பிரபலமானது. 

"சகிப்புத்தன்மை அதிமுக்கியம். சகிப்பின்மையை முடிந்தளவுச் சகித்துக் கொள்ளுங்கள். ஆனால் சகிப்புத்தன்மையையே அழித்துவிடுகிற அளவுக்கு வருகிற சகிப்பின்மையை சகித்துக் கொண்டிராதீர்கள்."

விசயம் சரி. அதை எப்படி நிறுவுவது?

கார்ல் பொப்பர் எந்த விஞ்ஞான முறையைக் காலம் முழுவதும் வளர்த்தெடுத்தாரோ அந்த விஞ்ஞான முறையால் முடியாது.

கார்ல் பொப்பர் எந்த 'அடிப்படையில்' மேற்படி தொகுத்தறி தத்துவங்களை முன்வைக்கிறார்?

அவற்றை எப்படித்தான் சரிபார்ப்பது?

கார்ல் பொப்பர் காலம் முழுவதும் அடித்து, எதிர்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானங்களின் விஞ்ஞானமே அவரையும் சரிபார்க்கிறது. 


கார்ல் பொப்பர் மட்டுமல்ல, கார்ல் மார்க்ஸ் மட்டுமல்ல இதுவரைக்கும் எவர் முன்வைத்த தத்துவமும், கருத்தும் புதிய இயங்கியலினூடு மிக எளிமையாகச் சரிபார்க்கப்படும். 

தயவு செய்து மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ, ட்ரொட்ஸ்கி இப்படிச் சொல்லிவிட்டார்கள், நீ என்ன அப்படிச் சொல்லுகிறாய் என்று அடிப்படைவாதத்தைக் கொட்ட வேண்டாம்.

இந்த அடிப்படைவாதம் இயங்கில் பொருள்முதல்வாதத்திலிருந்து வருவதை உணர்ந்து, அதை எதிர்ப்பதன் மூலம் முழு விடுதலை பெறுவீர்.

-Nila







Saturday, March 3, 2018

இயங்கியலைப் புறவயமாக்குகிற கொம்யூனிசத்துக்கான இரண்டாங் கட்டம்


கொம்யூனிசக் கட்டம் இயங்கியலில் இருந்து இவ்விதம் வரைவுபடும்.

அண்டத்திலிருந்து தனித்த நோக்குக் கூறு அண்டத்திலிருந்து பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை (உணர்வு, அகவயம்) அந்த அண்டத்தை எதிர்ப்பதற்கான ஒழுங்கைக் காட்டிலும் முதன்மைப்படுத்திக் கொண்ட இயக்கமே அது.

வரிப்படத்தில் குறித்தால்

ஒழுங்கு ---> விடுதலை/சுதந்திரம் ---> ஒழுங்கு

ஒழுங்கு அடிப்படையாக இருக்கிற இயக்கத்தில் ஒரு கட்டத்தில் சுதந்திரம் முதன்மை அடையும்.

பிற்பாடு சுதந்திரம் ---> ஒழுங்கு ---> சுதந்திரம் என உடையும்.

இதுவே கொம்யூனிசக் கட்டம் அல்ல.

இது ஆன்மீக அரசியல் கதை.

மேலே சுதந்திரம் ---> ஒழுங்கு ---> சுதந்திரம் என்பது மறுபடி ஒழுங்கை மேலேற்றுகிறதாக இருக்கும். மறுபடி விடுதலைக் குறைவு வரும்.

எல்லாவித பிழைப்புவாத, அடிப்படைவாத தத்துவங்களுக்கும் (மார்க்சியம் அடங்கலாக) நடந்த இயக்கம் இதுதான்.

இது மறுபடி வரலாற்றை மீட்கிறது. மறுபடி ஒழுங்கு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது.

இந்தப் போக்கும் ஒரு கட்டத்தில் உடையும்.

அதையும் இயங்கியல் வழி விளக்கலாம்.

ஒழுங்கு ---> சுதந்திரம் ---> ஒழுங்கு ->->-> (மொத்த இயக்கத்தில் ஆதிக்கமடைவது) சுதந்திரம்

இவ்விதம் மாறி மாறி வருகிற இயக்கச் சுழல்களைப் புரிந்து கொண்டு (சமூகச் சுழல்கள் இவை), அந்த இயங்கியல் அறிவைக் கொண்டு  நாம் சுதந்திரம்>>ஒழுங்கைக் கட்டமைக்கிறோம்.

அதவது இயங்கியல் அறிவைக் கொண்டு சமூகச் சுழலை நிறுத்துகிறோம்.

எவ்விதம் இயற்கையின் இயக்கத்தை அறிந்து அதை எமக்கேற்ப வளைக்கிறோமோ அவ்விதமேதான் இதையும் நிகழ்த்துவோம்.

முடிவு: எந்த நோக்கு இயங்கியல் அறிவைப் புறவயப்படுத்துகிறதோ அந்த நோக்கு கொம்யூனிசக் கட்டத்தை அடைந்து விடும் (ஆல்மோஸ்ட்).  இது இரண்டாங் கட்டம்.

மூன்றாவது இறுதிக் கட்டம் புறவயமாக்கப்பட்ட இயங்கியலை சமூக மயப்படுத்துவது.


இரண்டாங் கட்டம்


கணினி வெளி, கணித வெளிக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும்.

இது எத்தகைய சவால் என்பதை இன்னுமும் மட்டுக் கட்டவில்லை.

ஒன்றை எதிர்வு கூற முடியும். 

வேண்டிய அளவுக்குப் புறவயப்படல் என்பது இயங்கியலில் தவிர்க்க முடியாத இயக்கம் (மனித நோக்குத்தான் செய்து முடிக்கும் என்ற அர்த்தம் இதற்குக் கிடையாது).

இயங்கியல் எப்போதும் தொடர்ந்து துல்லியமடைவதைப் பற்றியதானது.

இந்தப் புறவயப்படுத்தல் முயற்சியும் சரி, புறவய அளவும் சரி தொடர்ந்து திருத்தமடைகிறதாயே இருக்கும்.

ஆனால் புறவயப்படுத்தல் இயக்கம் நேரடுக்கில் நிகழ்வதால் அதன் வேகம் கூடிச் செல்லும். துல்லியத்தன்மை மிக அதிகரிக்கும் (இது முடிவுறா நிகழ்ச்சி)

குழப்ப இயக்கம் ஒழுங்கியத்தை எப்போதும் முந்தி மொத்த இயக்கமும் குழப்பமாகவே இருக்கும்.

முழுப் பிரபஞ்சத்தையும் நோக்கு கட்டுப்படுத்திவிட முடியாது. பல்பிரபஞ்சங்கள் இருப்பின் அவற்றுள் சிலவற்றை ஆளுகிற அளவுக்கு நோக்கு உயர முடியும்.

உண்மையில் ஒரு நோக்கு குழப்பநிலைக்குள் உருவாகி, வளர்ந்து, அழியத்தக்கதாகவே இருக்கிறது.

கணினி, கணிதம் போன்ற நிலைப்பின் நிலைப்பு அடிப்படை நேரடியாக நோக்கு ஆகாது. அதற்காக குவாண்டம் கணினி முதலிய நிலைமறுப்பின் நிலைமறுப்பு குழப்ப நிலை அடிப்படை தேவை. அங்கிருந்து ஒவ்வொரு படையாக வளர்ந்து ஒழுங்கடைகிறவையே (இது வரைக்குமான) நோக்குகள். இத்தனைகாலமும் இப்படியே என்பதுதான் விசயமே தவிர எனி வராது என்கிற முன்முடிவு அவசியமில்லை.


Nila & Kana
03/03/2018

கொம்மூனிசக் கட்டத்துக்கான வினைத்திறன் மிகுந்த வழிகள்

ஒரு சமூகம் சுதந்திர ஆதிக்க ஒழுங்குக் கட்டமான கொம்மூனிசத்துக்குப் போவதற்கான நிபந்தனை இவ்விதம் சுருங்கி விட்டது.
குறிப்பு: விஞ்ஞான பூர்வ வழிமுறை வந்தவுடன் சோசலிசக் கட்டமும் கொம்மூனிசக் கட்டமும் ஒன்றாக ஒடுங்கின.
1. அந்தச் சமூகத்தை முன்னிழுப்பதற்குத் தேவையான X % வீத மனிதர்களுக்கு இயங்கியல் புரிதல் வேண்டும்
2. அது மிகக் குறைவாக இருப்பின் மனிதர்களின் நோக்குத் தொழிநுட்பம் அதற்கு இடங்க் கொடுக்காததாயிருப்பின் மனிதர்கள் வேறு நோக்கிடம் இதைக் கையளிக்க வேண்டும். செயற்கை நுண்ணுர்வுக்கு, தாங்கள் உருவாக்கிய செயற்கை நோக்குக்கு இயங்கியல் தர்க்கம் புரிகிற வகையில் புறவயப்படுத்த முடிகிற சமூகமாக இருக்கவேண்டும்.
எவ்விதம் நோக்கு தத்துவ எல்லையை விலத்தி இயக்கும் வேலையை இயக்கத்திடமே கொடுத்துவிட்டதோ,
எவ்விதம் நிலைப்பின் நிலைப்பிலிருந்து ஆரம்பித்து நிலைமறுப்பு ஆதிக்கத்தை நோக்கி நகருகிற அண்ட இயக்கத்தை எதிர்க்க,
நிலைப்பின் நிலைப்பிலிருந்து நிலைமறுப்பு இயக்கத்தை நோக்கி நகருகிற பொறிகளை, கணினி அடங்கலாக பயன்படுத்துகிறதோ,
அவ்விதமே தன்னுடைய இயங்கியல் குறைபாட்டையும் இயங்கியல் அறிவைப் புறவயமாக்கி செயற்கை நுண்ணுர்வுக்கு ஊட்டி அதை இயக்கப் போகிறது.
Nila & Kana 

அதி நேர்மையான தத்துவம்

எமது இயங்கியல் நடைமுறைச் சாத்தியத்தை நிகழ்த்திக் கொண்டுதான் பிறக்கிறது.
அது மற்றைய தத்துவங்களைப் போல மயக்கமாக 'இப்படிச் செய்து பாருங்கள், சரி வரும்... அட, சும்மா பாருங்களேன்' என்று சொல்லுவதில்லை.
அது என்னைக் கொண்டு மாற்றங்கள் செய்ய வேண்டுமானால் முதலில் என்னைப் புறவயப்படுத்து என்று அடம்பிடிக்கிறது.
நாம் 'நேர்மை' என்பது அண்டவெளி இயக்கத்திலிருந்து எடுத்துக் கொண்ட கருத்து.
நோக்குத் தொழிநுட்பத்தின் அதியுயர் நேர்மை இயங்கியல்.
இந்தத் தத்துவம் தன்னைக் கொண்டு எவரையும் ஏமாற்ற விடாதது.
இந்தத் தத்துவம் எவரையும் தன்னைக் கொண்டு அடிமைப்படுத்த விடாதது.
இந்தத் தத்துவம் முதலின் நான் புறவயமாகிறானா என்பதை உறுதிப்படுத்து, அப்பொழுதுதான் நான் உனக்காக வேலை செய்வேன் என்கிறது.
இதுவே அதியுச்ச நேர்மையான முதல் விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாகிற, தத்துவங்களின் தத்துவமாகிற ஓட்டத்தை ஆரம்பிக்கவிருக்கிற நோக்கின் அதியுயர், அதியுச்ச நேர்த்திறன் தத்துவம்.
இந்தத் தத்துவத்தைப் புரிந்து கொள்ள எவ்வளவு நேரம், தடவைகள் முயற்சித்தாலும் பாதகமில்லை.
இயங்கியல் தர்க்கம் பழகி அதிலிருந்து இயங்கியல் தத்துவத்தை உள்ளார்ந்து விளங்குவோம்.
மானுட விடுதலையை அதி விரைவாக்குவோம்.

Some Answers


Science/Scientists are searching for the common building blocks of everything. Those building blocks would be identified (could only be identified) by the PROPERTIES. As dialectians we are straightaway searching for those common PROPERTIES. Philosophical approach more abstract, more prone to ERROR, but also have more chances of reaching out for an abstract theory which can put things together at least in philosophical platform and then operate top-down. We are keep saying UNLESS WE OBJECTIFY WE MUST/WILL REJECT THIS.




//எந்தஅடி்ததளத்தில் உங்கள் 
விளக்கம் இயங்கியல் பொருள்முதல் வாதத்தினை மறுக்கிறது,அதை காலாவதியாக்கிவிட்டது. இந்த விஞ்ஞான அடித்தளத்தில் விளங்கப்படுத்துங்கள். அணுக்கள் இருக்கிறது என்பதே இயக்கம் இருக்கிறது என்பதே அர்த்தம் ஆகும் அப்படி இருக்கும்போது யார் இயங்கியலை மறுத்தது. அல்லது இயங்கியல் பொருள்முதல் வாதம் எப்படி காலாவதியாகவிட்டது என கூறமுடியும்?
//

இயக்கத்தின் (motion) விளைவாகவே குறைந்த திணிவு ஏற்படுவதாக இப்போது அறியப்படுகிறது//



இயக்கத்தின் எதிர்விளைவாக பருப்பொருளும் பருப்பொருளின் எதிர்விளைவாக இயக்கம் இருக்கின்றன. 

இது வரைக்குமான முடிவுகள் எவையும் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை உடைக்கவில்லை.

எனின் அது எவ்விதம் இயங்கியலை உடைக்கும் என்பது பற்றிச் சிந்தியுங்கள்.

இயக்கம், பொருள் தனியாக இருக்கிற நிலையை விஞ்ஞானம் கண்டறிந்தால் இயங்கியல் பொருள்முதல்வாதம் உடையும்.

எங்களுடைய இயங்கியலை விஞ்ஞானம் உடைக்க இயக்கமற்ற பொருளைக் கண்டறிய வேண்டும். 

எங்களுடையதை உடைக்கிற விஞ்ஞானப் பயணம் முதலில் இயங்கியல் பொருள்முதல்வாததை உடைத்துவிடும் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள்.

இது இயங்கியலைத் திருத்தம் பார்க்கத் தக்க ஒரே தொழிநுட்பம் இயங்கியல் என்பதைப் புரிந்து கொண்டு இயங்கியல் தளத்திலிருந்து வாதங்களை வையுங்கள்.

இயங்கியல் தளத்திலிருந்து இயங்கியல் மூலம் பருப்பொருள் --> இயக்கம் மறுக்கப்பட்டு இயக்கம் -----> பருப்பொருள் முடிவு எட்டப்பட்டது. 

போதுமான நேர அவகாசமெடுத்து இயங்கியல் பயிற்சியோடு வாருங்கள்.


தத்துவத்திலிருந்து திட்டவட்டத்துக்குப் போக வேண்டிய உரையாடல் இது. விஞ்ஞானத்திலிருந்து தலைகீழாய் வருவது தவறு.

இது இயங்கியலுக்கும் இயங்கியல் பொருள்முதல்வாதத்துக்குமான பிரச்சினை. 


விஞ்ஞானத்தை எதற்குக் கொண்டு வருகிறீர்கள். இது உங்களுடைய தவறான புரிதல். அவகாசமெடுத்து விளங்கவும்.

விஞ்ஞானம் எதையும் உறுதிப்படுத்துவதில்லை



கோட்பாட்டின் அடித்தளத்தில் மட்டுமல்ல எல்லாவற்றினதும் அடித்தளத்தில் அடிப்படையாக இyaக்கமும் அதன் பொதுப்பண்புகளும் இருக்கின்றன.

இயக்கத்தை 'அனைத்தினதும்' பொதுப்பண்பாக்கி வடிவமைப்பது, அனைத்தையும் இயக்கம் சார்பாக வரைவு செய்வது இயங்கியல்.

பருப்பொருளை அவ்விதம் இயக்கம் சார்பாக வரைவு செய்யாமல், பருப்பொருள் சார்பாக இயக்கத்தை வரைவு செய்தது தவறு.

இயங்கியல் என்றால் நீங்கள் புரிந்து வைத்திருப்பது என்ன?

தயவு செய்து அவகாசமெடுத்து உங்களது அடிப்படையான அணுகுமுறைத்தவறைப் புரிந்து கொள்ளவும். கருத்திடல்களைக் கொட்ட வேண்டாம். 

மறுபடி சொல்லுகிறேன். இயங்கியல் தளத்தைப் புரிந்து அதில் ஏறிப் பேசவும்.'



இவ்விதம் பருப்பொருள் சார்பாக இயக்கத்தை வரைவு செய்தது அண்ட இயக்கத்தை நிலைமறுப்பின் நிலைமறுப்பு அடிப்படையிலிருந்தானதாக விளங்கச் செய்தது.

இயக்கம் முரணிலிருந்து (மட்டுமே) தோன்றுவதான தவறை, அதாவது நிலைமறுப்பின் நிலைமறுப்பு மட்டுமே இயக்கம் என்பதான தவறான முடிவுக்கு அது காரணமாயிற்று.

நிலைப்பின் நிலைப்பிலிருந்து இயக்கம் நடக்க முடிவதைத் தெரிந்து கொள்ளுகிற பொழுது தேவைப்படுகிற பொழுது (தவிர்க்க முடியாத) பொழுது மட்டுமே அழிவுச் சக்தி /முரண் இயக்கம் தேவை என்பதையும்,

நிலைமறுப்பின் நிலைமறுப்பிலிருந்து கிளைத்து நிலைப்பின் நிலைப்பு முதன்மை பெறுகிற இயற்கை நோக்கின் இயக்கத்தில் தீர்வுக்கான 'முரண்' இயக்கம் தொடர்ந்து குறைந்து வரும் என்பதையும் மார்க்சியம் புரிந்து கொள்ளவில்லை.

இலட்சிய நிலைகளான சோசலிச, கொம்மூனிச பாதைக்கான தத்துவமாக எம் புதிய இயங்கியலே இருக்கிறது.

மார்க்சியத்தை முழுவதுமாகத் தகர்கிற பொழுது (மார்க்சியத்தின் தேவையை முற்றாக ஒழிக்கிற பொழுது) கொம்மூனிசக் கட்டம் தோன்றியிருக்கும் என்கிற மார்க்சிய எதிர்வு கூறல் (மார்க்சிய எதிர்வு கூறல்கள் நிலைமறுப்பு அடிப்படையில் உருவாகி நிலைப்பின் நிலைப்பாக வளருகிற வெளிகளில் சரி, அந்த வெளிகளில் மட்டுமே சரியென்பதால் அது அரை விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக ஒடுங்கி அடிப்படைவாதமாகி, செயலுக்கு, நடைமுறைக்கு வழிகாட்ட முடியாது போனது. எதிர்வு கூறியது. வழிகாட்டவில்லை.







இவ்விதம் பருப்பொருள் சார்பாக இயக்கத்தை வரைவு செய்தது அண்ட இயக்கத்தை நிலைமறுப்பின் நிலைமறுப்பு அடிப்படையிலிருந்தானதாக விளங்கச் செய்தது.

இயக்கம் முரணிலிருந்து (மட்டுமே) தோன்றுவதான தவறை, அதாவது நிலைமறுப்பின் நிலைமறுப்பு மட்டுமே இயக்கம் என்பதான தவறான முடிவுக்கு அது காரணமாயிற்று.

நிலைப்பின் நிலைப்பிலிருந்து இயக்கம் நடக்க முடிவதைத் தெரிந்து கொள்ளுகிற பொழுது தேவைப்படுகிற பொழுது (தவிர்க்க முடியாத) பொழுது மட்டுமே அழிவுச் சக்தி /முரண் இயக்கம் தேவை என்பதையும்,

நிலைமறுப்பின் நிலைமறுப்பிலிருந்து கிளைத்து நிலைப்பின் நிலைப்பு முதன்மை பெறுகிற இயற்கை நோக்கின் இயக்கத்தில் தீர்வுக்கான 'முரண்' இயக்கம் தொடர்ந்து குறைந்து வரும் என்பதையும் மார்க்சியம் புரிந்து கொள்ளவில்லை.

இலட்சிய நிலைகளான சோசலிச, கொம்மூனிச பாதைக்கான தத்துவமாக எம் புதிய இயங்கியலே இருக்கிறது.



மார்க்சியத்தை முழுவதுமாகத் தகர்கிற பொழுது (மார்க்சியத்தின் தேவையை முற்றாக ஒழிக்கிற பொழுது) கொம்மூனிசக் கட்டம் தோன்றியிருக்கும் என்கிற மார்க்சிய எதிர்வு கூறல் (மார்க்சிய எதிர்வு கூறல்கள் நிலைமறுப்பு அடிப்படையில் உருவாகி நிலைப்பின் நிலைப்பாக வளருகிற வெளிகளில் சரி, அந்த வெளிகளில் மட்டுமே சரியென்பதால் அது அரை விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாகி ஒடுங்கி அடிப்படைவாதமாகி, செயலுக்கு, நடைமுறைக்கு வழிகாட்ட முடியாது போனது. எதிர்வு கூறியது. வழிகாட்டவில்லை.




//Tholar Velan நல்லது வாசிக்காமலே கற்றுக் கொள்ள முடியும் என்பதை உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன் நன்றிகள்.
//முழுமையான ஆய்வு எனது கட்டுரையில் உள்ளது.
நாம் தங்களின் எழுத்தை வாசிக்காது விமர்சிக்கவில்லை. முடிந்தால் எனது எழுத்தை வாசித்து விமர்சியுங்கள்.//

//

Kanarupan Kularatnarajah 'முழுமை', முழுமையாக வாசித்தல் இதெல்லாம் இயங்கியல் வழிமுறைகள் அல்ல. 

இயங்கியல் தளத்தில் ஏறாமல் இந்த அதி திருத்தமான (அதாவது முதலில் சரியாக வரைவுபட்ட ஒரே) இயங்கியலை புரிந்து கொள்ள முடியாது. 


எம்முடைய கடைசிப் பதிவிலான (மிக எளிய) கேள்விகளுக்கு மிக நேரடியான ஒற்றைவாக்கியப் பதில் அளிக்கிற வரையில் உரையாட மாட்டோம். வார இறுதி விடுப்பு வேறு.
Sorry, 'reading' and comprehending are two different things. You haven't comprehended. Can only continue this discourse if and only if you could answer those questions in the shortest manner possible. 3,4 words each? Or prove those questions are invalid.
வேலன் தோழர் நீங்கள் எதையும் வாசிக்காமல் மறுப்பு எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் முதல் பத்திகளிலேயே கண்டு கொண்டேன். 

கேள்விகளுக்குப் பதில் தந்தால் மட்டும் உரையாடலாம். அல்லது வேண்டாம். வேண்டியளவுக்கு மேலதிகமாகவே 'புதிய' இயங்கியல் அடிப்படைகள் பற்
றி எழுதியாகிவிட்டது. 

இப்போது அதை முடிந்தவரையில் புறவயப்படுத்துகிற, கணினி, கணித வெளிகளுக்குள் நகர்த்துகிற வேலையில் இருக்கிறோம். 

தனிப்பட்ட வெளியைச் சுரண்டுவதில்லை என்று முடிவெடுத்திருப்பதால், வார இறுதி விடுப்பு தினங்களில் அவசரத்துக்கன்றி, நீண்ட நிதான உரையாடல்கள், வாசிப்பைச் செய்வதில்லை (குறைத்துக் கொண்டிருக்கிறோம்). 

நீங்கள் கேள்விகளுக்குக் குறிப்பான ஒற்றை வாக்கியப் பதில் அளிக்கிற வரையில் உரையாடலைத் தொடர்வதற்கில்லை.




தோழர் வேலன்
//அருமையான அணுகுமுறை தொடருங்கள்.
மீளவும் நான் எழுதியதை வாசிக்காது எழுதுவது உங்கள் உரிமை.
உங்கள் உரிமையில் தலையிட நாம் யார்.
ஆங்கிலத்தில் எழுதி தங்களின் மேட்டுமையை சமூகத்திற்கு காட்டவேண்டிய தேவை கூட உங்களின் உரிமை.
உங்கள் சிந்தனை வார்ப்பை 3 வருடத்திற்கு முன்னர் எழுதிமுடித்த ஆக்கம் அம்பலப்படுத்தி விடுகின்றது.
வாசிப்பது அல்லது வாசிக்காமல் விடுவது உங்கள் உரிமை//

எனது பதில்
//நான் வாசித்தேன். மிகத் தவறான அடிப்படைகள், புரிதலில் ஆரம்பிக்கிறது உங்களது ஆய்வு. முழுவதும் வாசிக்க வேண்டிய தேவை இல்லை. குறைந்த பட்ச இயங்கியல் புரிதல் இருந்தாலும் நான் சொல்லுவது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

நாங்கள் புறவயப்படுத்துகிறோம். நீங்களும் உங்களுடைய 'முழுமை ஞானத்தை' கணித வெளிக்குள் கொண்டு வாருங்கள். எவ்வளவு காலம் எடுத்தாலும் பரவாயில்லை. அங்கே சரிபார்த்துக் கொள்ளலாம்.

இப்போதே சரிபார்க்க வேண்டுமென்றால் நீங்கள் இயங்கியல் தளத்துக்கு வந்தாக வேண்டும். நீங்கள் அதற்கு எதிரான திசையில் இயங்குகிறீர்கள்.

எனி எம்மை முறியடிக்கிற வாய்ப்பு உங்களுக்குக் கணித வெளியில் மட்டுமே.

இது தொடர்பான உங்களுக்கான கடைசிக் கருத்திடல் இதுதான்.
நமக்கும் உங்களுக்கும்

//

//Tholar Velan: கணிதwow//

இவ்விதம் 'ஆங்கிலத்தில்' ஆச்சரியப்பட்டுத் தன் மேட்டுமைத் தனத்தையும், புறவயப்படுத்துகிற நோக்கமே இல்லாமல் இருக்கிற போலித்தனத்தையும் தோழர் வேலன் வெளிப்படுத்தி அந்த மிக 'அறிவார்ந்த' உரையாடலை முடித்து வைத்தார்.